Sunday, December 2, 2012



கலைஞரின் திருவிளையாடல்.....(இது ஒரு நகைச்சுவை ரீமிக்ஸ் )


இதை படிக்க ஆரம்பிக்கும் முன்பு திருவிளையாடல் சினிமாவை  உங்கள் மனக் கண் முன்னால் கொண்டு வந்து நிப்பாட்டி இதை படிக்க ஆரம்பிக்கவும் .



ஒரு நாள் காலை நேரத்தில் .நலைஞர் தன் குடும்பத்தினருடன்  கட்சி விஷயத்தை பற்றி பேசி மகிழந்து கொண்டிருக்கும் பொழுது நாரதர் சோ அவர்கள் அங்கு நுழைகிறார். அவரைப்பார்த்த அனைவரும் கட்சியில் குழப்பம் விழைவிக்க வந்துவிட்டார் என்று மூணு மூணுக்க அரசியல் சாணக்கியர், அவரின் வருகை குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கத்தான் செய்யும் என்று சமாதானப்படுத்தி அவரை வரவேற்கிறார்

.நலைஞர் சோவை பார்த்து ஹையரே வாரும் ....சோழியின் குடும்பி சும்மா ஆடாது என்று சொல்வது போல நீர் காரணம் காரியம் இல்லாமல் இந்த பக்கம் வரமாட்டீரே என்ன விஷயம் சொல்லுங்கள்

சோ .நலைஞரை பார்த்து, எல்லாம் பத்திரிக்கை விஷயம் தான். என் வாசர்களுக்கு உங்கள் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் அதைப்பற்றி உங்களிடம் கேட்டு தெரிந்து  கொள்ளலாம் என்று கருதிதான் உங்களைப் பார்க்க வந்தேன்.


சரி எங்கள் கட்சியில் கலகம் ஆரம்பிக்க வந்துவீட்டீர்கள் ஆனால் உங்கள் கலகம் எப்போதும் எங்களுக்கு நன்மையில்தான் முடியும். அதனால் நீங்களே சொல்லுங்கள் யாரைத் தலைவராக நான் நியமிப்பது ஸ்.டாலினையா அல்லது அழ.கிரியையா?

நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் இந்த இருவருக்கிடையே ஒரு போட்டியை வைப்போம் அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே தலைவர் பதவியை கொடுத்து விடுவோம் என்று சொன்னார்.

அதற்கு .நலைஞரும் ஒத்துக்கொண்டு என்ன போட்டி என்பதை நீங்களே கூறினால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.


சோ உடனே அழ.கிரியையும் ஸ்.டாலினையும் அருகில் அழைத்து உங்களுக்கு ஒரு நாள் டைம் தருகிறேன் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் 2 வார்த்தை இங்கிலீஷில் வேகமாக பேச வேண்டும் என்று சொன்னார்.

உடனே அழ.கிரி அது நமக்கு ரொம்ப எளிது என்று சொல்லி உடனே தன் வீட்டிற்கு சென்று உதவியாளரை அழைத்து டேய் உடனே அமெரிக்காவிற்கு ஒரு போனை போட்டு நம்ம மதுரைத்தமிழனை பிடிடா அவந்தான் மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறான் அவந்தான் நம்ம லெவலுக்கு   ஒரே நாளில் இங்கிலிஷ் கற்றுதருவான் என்று சொன்னார்.

மதுரைத்தமிழன் லைனில் வந்ததும் நடந்த விஷயத்தை கூறினார்.அண்ணே நானே இங்கிலிஸ்பிச்சில் ரொம்ப வீக்கண்னே நீங்க கேட்டு கொண்டதால் எனக்கு தெரிந்ததை  சொல்லித்தாறேன் டக்குன்னு பிடிச்சுங்கோண்னே என்று சொல்லி....

அண்ணே முதலில் குட்மார்னிங்க் என்று சொல்லுங்க என்றார். அதற்கு அழ.கிரி அண்ணண் "கொட்டு மணி" என்றார்

அண்ணே கொட்டு மணியோ குளத்தூர் மணீயோ இல்லைண்ணே குட்மார்னிங்க அண்ணே

மதுர நீ கொட்டுன்னு சொல்லும் போது நம்ம பிரதர் விஜய.காந்து ஞாபகத்துக்கு வருகிறார்

அண்ணே பாடத்தை ஒழுங்க கவனிங்க அண்ணே குட்மார்னிங்கன்னு உங்களுக்கு சொல்லவரலைன்னா குத்து மணி என்பதை கொஞ்சம் மரியாதையாக குத்து மணிங்க என்று வேகமாக சொல்லிப்பாருங்க...

குத்து மணிங்க ..குத்து மணிங்க.... குத்து மணிங்க

அண்ணே நீங்க எங்கேயோ போயீட்டுங்க இனிமே இதை சொல்லும் போது வாயில் சூயிங்க் கம் போட்டு சொல்லுங்க..

அண்ணன் அருகில் இருக்கும் உதவியாளரிடம் ஒரு சூயிங்க் கம் வாங்கி வாயில் போட்டு இப்ப  கேளு என்று சொல்லி குத்துமாணிங்க் என்றார்

அதை கேட்ட மதுரைத்தமிழன் அண்ணே அசத்தீட்டிங்க..... இனிமே தலைவர் பதவி உங்களுக்கு தானுங்க தைரியமா போங்கண்ணே
என்று சொன்னார்


அழ.கிரி அண்ணண் கலைஞரைப் பார்க்க சென்ற் போது அங்கு பாட்டமும் ஆட்டமுமாக இருந்த்ததுமட்டுமல்லாமல் நல்ல விருந்தும் நடை பெற்றுக் கொண்டிருந்தது வாயிலில் இருந்த ஒருவரிடம் காரணம் கேட்ட போது ஸ்டாலினை வருங்கால தலைவராக நியமித்துவிட்டனர் அதனால்தான் இந்த விருந்து நடை பெறுகிறது என்று சொன்னார்.

அதை கேட்ட அழகிரி கோபத்துடன் உள்ளே நுழைந்து அப்பாவை பார்த்து பராசக்தியில் சிவாஜி வசனம் பேசுவது போல பேச ஆரம்பித்தார். அதை கேட்ட அவரது அப்பா டேய் நீ இந்த மாதிரி நான் எழுதின வசனத்தை போலவே பேசுவதை நிறுத்தி நடந்தை கேள்

உம்ம்ம்ம் என்று உருமியாவாறே நடந்ததை நீங்கள் சொல்லுங்கள்... அதன் பின் நடக்க போவதை நான் சொல்லுகிறேன் என்றார்.

அப்பா முதலில் கோபத்தைவிட்டு நடந்ததை கேள் நீ சென்றதும் உன் தம்பி  சோவை பார்த்து மம்மி டாடி என்றால் என்ன என்று கேட்டான் அத்ற்கு அவர்  அம்மா அப்பா என்பதை ஆங்கிலத்தில் மம்மி டாடி என்று சொல்லுவார்கள் என்று சொன்னார்

அதற்கு தம்பி ஸ்.டாலின் அப்படி என்றால் எனது அம்மா அப்பாவை மம்மி டாடி என்று அழைத்தால் ஆங்கிலித்த்தில் பேசியாதாகதானே அர்த்தம் என்று கேட்டார் அத்ற்கு சோ உள்ளபட அனைவரும் அதை சரியென்று ஒத்துக் கொண்டனர்

உடனே ஸ்.டாலின் எங்களைப் பார்த்து ஓஓஓஓஓ மம்மியோ ஓஓஓஓ டாடியோ என்று கூப்பிட்டார் அதனால் இங்கிலிஷில் வேகமாக பேசிய அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது என்று விளக்கம் கூறினார்.

அதற்கு அழ.கிரி இது பெரியவர்களாக நடத்திய நாடகம் இதை நான் ஒரு போதும் ஒத்துக் கொள்ளமட்டேன் இனிமேல் எனகொரு கட்சி எனக்கென்று தொண்டர்கள் அதில் நானே தலைவன் என்று மதுரையில் இருக்க போகிறேன் என்று கூறிச் செல்லும் போது அவரை வழிமறித்த குச்சூபூ பாட்டி ....அப்பா....... தென் பாண்டி சிங்கமே நீ கோபம் கொள்ளலாகாது... இது உனது அப்பாவின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்று கூறித்தடுத்தார்


டிஸ்கி :  இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது அல்ல நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டது. அதனால் இதை படிக்கும் அண்ணன்மார்கள் கூலிப்படையை அனுப்பி அடிக்க வேண்டாம் அதற்கெல்லாம் என் உடம்பில் வலு இல்லை இல்லை அடித்தே தீருவது என்று முடிவு எடுத்தால் ஒரு போனை போட்டு என் மனைவியிடம் சொல்லிவிடுங்கள் வழக்கமாக அவளிடம் அடி வாங்கும் நான் கூடி இரண்டு அடி சேர்த்து வாங்கி கொள்கிறேன் அது சரிதானே

சரி வரேன் வழக்கமாக அடி வாங்கும் என் மனைவியிடம் போய் சீக்கிரம் அடிவாங்கிவிட்டு அடுத்த பதிவு போட விஷயத்தை தேடுறேன்.


உங்களுக்கும் என்னை கும்ம ஆசையாக இருந்தால் பின்னுட்டத்தில் கும்மிவிட்டு போகவும்


அன்புடன்
உங்கள் அன்பிற்குரிய
மதுரைத்தமிழன்


12 comments:

  1. அதை கேட்ட வரது அப்பா டேய் நீ இந்த மாதிரி நான் எழுதின வசனத்தை போலவே பேசுவதை நிறுத்தி நடந்தை கேள்//

    வரது யாரோ ??!!

    கேட்டவரது அப்பாவோ !

    ReplyDelete
    Replies
    1. கேட்ட அவரது அப்பா என்று வர வேண்டும் ஆனால் "அ" எங்கோ தப்பித்து கொண்டு ஒடிவிட்டது நீங்கள் சுட்டிகாட்டியதும் அதை தேடிபிடித்து சேர்த்துவிட்டேன். நன்றி

      Delete
  2. தலைப்பை பார்த்த ஒடனே சரி கலைஞரோட உண்மையான திருவிளையாடல போடப்போறீங்கன்னு நெனச்சேன் தம்பி...கடைசியில என்னோட எண்ணத்துல மண்ண வாரி போடுட்டீங்களே தம்பி...இப்பிடி நம்பவச்சு கழுத்த அறுத்துட்டீங்களே தம்பி...இது நியாயமா..??நேர்மையா..????

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுகள் நகைச்சுவைக்காகவும் தகவல்களுக்காகவும் மட்டும்தான். அதனால்தான் உண்மையான திருவிளையாடல்கள் இங்கு வெளிவருவதில்லை அப்படி வெளியிட வேண்டுமானால் நிறைய உழைக்க வேண்டும்

      Delete
  3. நீங்க ரொம்ப நல்லவருங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிரிங்க. அம்மா உங்களைத்தான் தேடிகிட்டிருகாங்க.

    ReplyDelete
    Replies
    1. மனைவிகிட்ட அடிவாங்குறது போதாதா அம்மாவும் அடிக்க போறாங்களா? அட சொக்கா நீதான் இந்த பெண் இனத்திடம் இருந்து என்னை காப்பாத்த வேண்டும்

      Delete
  4. அன்றாடும் அடி வாங்கியும்... இன்னுமா...?

    என்னவோ போங்கள் “உண்மைகள்“
    உண்மையைச் சொன்னாலே இப்போவெல்லாம் அடிதான் விழுகிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies

    1. மதுரக்காரன் எவ்வளவுதான் அடிவாங்கினாலும் தாங்குவானுங்க

      Delete
  5. BE-CAREFUL!!!!! Don't post about political leaders... if u continue, u many need to blog from jail. lol....
    enjoyed... carry on.....

    ReplyDelete
  6. படித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
  7. ஞானாலயா குறித்த உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.