உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 26, 2012

Good news to be proud : தமிழன் என்று பெருமை கொள்ளும் செய்தி



தமிழா !!!! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் Good news to be proud

Good news to be proud  : தமிழன் என்று பெருமை கொள்ளும் செய்தி

நமக்கு எல்லாம் மிக அறிமுகமான  கதம்ப உணர்வுகள் என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் மஞ்சுபாஷிணி  என்ற கண்ணியத்திற்கு இலக்கணமான பெண்மணி என்னுடன் இமெயிலில் பகிர்ந்ததை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகப் பெருமிதம் அடைகிறேன்




மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .  

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது இங்கு தான்.

இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை  மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு ,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து ,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது


.இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!.

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!! 

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! 

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம தோழர்களே ! 
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! 
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !  

தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் . 
நன்றி !

http://www.manjusampath.blogspot.com/

 
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்





4 comments :

  1. பெருமைப்பட வேண்டிய தகவல்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. தலை நிமிர்ந்து நிற்கவேண்டிய தருணம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. Thamilan endru sollada thalai nimirndhu nillada

    Be proud of Thamilian.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog