உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 28, 2012

அமெரிக்கனின் கேள்வி- இந்தியாவில் சினிமாவை இப்படித்தான் பார்த்து ரசிக்க வேண்டுமோ?

இந்தியாவில் சினிமாவை இப்படித்தான் பார்த்து ரசிக்க வேண்டுமோ? அமெரிக்கனின் கேள்வி


அமெரிக்காவில் தியோட்டரில் படம் பார்க்க சென்றால் படம் ஆரம்பிக்கும் போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் அதில்  உங்கள் செல்போனை அணைத்துவிடுங்கள் அல்லது சைலண்ட் மோடில் போட்டுவிடுங்கள் நன்றி என்று இருக்கும். அதன் பின் தியோட்டரே மிக அமைதியாக ஆகிவிடும். படம் பார்க்கும் போது சத்தம் ஏதும் வந்தால் அது படத்தில் வரும் நகைச்சுவையை பார்த்து மக்கள் சிரிக்கும் சத்தமாகத்தான் இருக்கும். அதை தவிர படம் ஒடும்போது யாரவது பேசினால் நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் நம் தலையை சிறிது திருப்பி அவர்களைப் பார்த்தால் போதும் அவர்கள் பேசுவதை தானே நிறுத்தி விடுவார்கள். இது இங்கு உள்ள நடைமுறை.... ஆனால் இந்திய படங்கள் ஒடும் தியோட்டர்கள் இதற்கு விதிவிலக்கு என்பது நமக்கு மட்டுமே தெரியும்


ஆனால் இந்த அமெரிக்கர்களுக்கு தெரியாதே!!!!!!! இதை அறியாத  எனதுடன் பணிபுரியும் அமெரிக்கர், நேற்று ஒரு யூடியுப் வீடியோவை பகிர்ந்துவிட்டு இந்தியாவில் சினிமாவை இப்படித்தான் பார்த்து ரசிக்க வேண்டுமோ?  கேள்வியை கேட்டார்.


அதற்கு நான் சொன்னேன் எங்கள் ஊரில் உங்கள் செல்போனை அணைத்துவிடுங்கள் அல்லது சைலண்ட் மோடில் போட்டுவிடுங்கள் என்று அறிவிப்பை வெளியிடமாட்டார்கள் காரணம்  படம் பார்க்கும் சுவாராஸ்யத்தில் செல்போன் மணியடிக்கும் சத்தம் யாரின் காதுக்கும் விழாது என்று சொல்லி சமாளித்தேன்.

அவருக்கு நான் சொன்ன பதில் சரிதானாவென்று எனக்கு தெரியவில்லை மக்காஸ். நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்பதை நீங்களே சொல்லுங்களேன்அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

6 comments :

 1. தல,தளபதின்னா இப்படிதான் என்று சொல்லுங்க...இது பரம்பரையா எங்களுக்கு உள்ள ஒரு disease என்று சொல்லுங்க...

  ReplyDelete
 2. இந்தியர்கள் செம்மறி ஆட்டுக் கூட்ட நடத்தையில் இருந்து எக்கச் சக்கமாய் மாற வேண்டியிருக்கு, அதெல்லாம் என்றைக்காவது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் வரமாட்டேன்கிறது.

  ReplyDelete
 3. நீங்கள் சொன்ன பதில் சரிதான் “உண்மைகள்“

  உங்களின் டாஷ்போர்ட் என் வலையில் வந்தாலும் சில நேரம் திறந்தால்
  வருவதில்லையே.. ஏன்...? எனக்கு மட்டுமா... அல்லது அனைவருக்குமா...?
  சற்று பாருங்கள் “உண்மைகள்“

  ReplyDelete
 4. இந்தியர்கள் உணர்(வுகளை)ச்சிகளை கட்டுப்படுத்த முடி(தெரி)யாதவர்கள்.. வேறென்ன சொல்ல ..

  டொரோண்டோவில் இந்தி, தமிழ் படம் மட்டும் ஓடும் ஒரு சிறு திரையரங்கு இருக்கு, அங்கு தப்பி தவறி போய்விடாதீர்கள்.. சத்தம், கித்தம் என்றாலும் சமாளித்துவிடலாம், மிதிக்கும் இடங்களில் சோறு முதல் சாம்பார் வரை மிதிபடும்.. உங்கள் உடைகளில், ஜாக்கட்களில் கோகா கோலா ஊற்றப்படலாம், ஒரு கெட்ட நாற்றாம் அடிக்கக் கூடும், சமயத்தில் எலிகள் கூட ஓடலாம். முன் இருப்பவர் தலை தான் தெரியும்,. தல படம் தெரியாது .. நாறாசம் ... !

  தெற்காசியர்கள் மிகுதியாக இருக்கும் இடங்களில் வேற்றினத்தவர் குடியேறாமைக்கான காரணங்களை அன்று தான் நான் தெரிந்துக் கொண்டேன். இங்கிலாந்தில் இதை விட மோசமாம் ... !

  பாவம் வெள்ளையர் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றார்களால் ஐரோப்பாவில் .. !

  அமெரிக்கா எவ்வளவோ தேவலை .. !

  ReplyDelete
 5. நம் பார்லிமென்ட் நடக்கும் முறையை அவர் பார்க்கவில்லையா? காட்டுங்கள், சார். இந்திய நாட்டின் பெருமை உலகெங்கும் பரவட்டும்.

  ReplyDelete
 6. பல்லினத்தவர்கள் வேண்டும், அவர்களுடைய வித்தயாசமான சிந்தனைகள் வேண்டும், அதனால் வரும் நன்மைகள் வேண்டும் ஆனால் அந்த சிந்தனைப்போக்கினால் வரும் இயற்கையான தெற்காசியர்களுடைய (for that matter - any one) பழக்க வழக்க வித்தியாசங்கள் சிறு சிறு அசௌகரியங்கள் வேண்டாம்......அவன் என்னைப்போல இல்லை என்ற எண்ண வெளிப்பாட்டிற்கு அழகான வார்த்தையுறை / ரை.

  எப்படியோ இந்த வெள்ளையர்கள் தங்களுக்கு எல்லாரையும் எடை போடும் தகுதி திறமை இருக்கிறது என்று கொண்டிருக்கும் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது, அதற்க்கு சமமாக நாமும் சிறிதும் தயக்கமின்றி தலையாட்டி ஒப்புக்கொண்டு, மற்ற விஷயங்களிலும் தீர்ப்பெழுதும் நீதிபதி வேலையினை அவர்களுக்கு கொடுக்க தயக்கமின்றி ஒப்புக்கொள்வது அதைவிட மிகுந்த வியப்பளிக்கும் ஒன்று.

  பாலாரும் தேனாறும் ஓடும் வெளிநாட்டில், சட்ட திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு, கடைபிடிக்கவும் படும், அதிகாரிகள் மட்டத்தில் சுணக்கம் இல்லாத, அவர்களாலும் உறுதியுடன் அமலாக்கச் செயல்பாடு முன்னெடுக்கப்படும் ஒரு நாட்டில், எப்படி ஒரு சுத்தம் சுகாதாரமில்லாத தியேட்டர் செயல்படுகிறது, ஏன்?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog