Thursday, November 22, 2012



உலகிலேயே மிக அதிக செலவில் அனுப்பட்ட கூரியர் தமிழகத்தில் இருந்து அனுப்பட்டதுதா?


தமிழகத்தில் டெஸோ மாநாடு நடைபெற்றது அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 10 பக்கங்களில் டைப் செய்து அது ஜநா சபைக்கு அனுப்பட்டு இருக்கிறது. இதை ரெகுலர் போஸ்டில் அனுப்பி இருக்கலாம் அல்லது இந்தியாவில் உள்ள சிறந்த கூரியர் சர்வீஸில் கொடுத்து அனுப்பி இருக்கலாம். அல்லது இந்த மதுரைதமிழனுக்கு இமெயில் அனுப்பி இருக்கலாம். நானே ஒரு நடை நடந்து போய் ஐநா சபையில் போய் கொடுத்து இருப்பபேன்.

அதைவிட்டு விட்டு அமெரிக்காவிற்கு 2 பேரை அனுப்பியதால் அவர்கள் இருவருக்கான விசா செலவு, விமான டிக்கெட் செலவு, ஹோட்டல் செலவு, அவர்களை வழியனுப்ப ஏற்பட்ட செலவு, அவர்கள் இருவரையும் வழி அனுப்ப வந்த 1000 கணக்கான நபர்களுக்கு ஏற்பட்ட செலவு, திரும்ப வரும் போது வரவேற்க ஆன செலவு பாராட்டுவிழா செலவு விமான நிலையத்தில் நடந்த அலப்பறைகளுக்காக பாதுகாப்பாக அனுப்பட்ட காவலர்களுக்கு தமிழக அரசாங்கம் செய்த செலவு அப்பப்பா என்ன செலவு என்னா செலவு. இந்த செலவை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் இதுதான் உலகிலேயே மிக அதிக செலவில் அனுப்பட்ட கூரியர்  ஆகும் என்ன நான் சொன்னது ரைட்டுதானே மக்களே

ஒரு   வருங்கால தமிழக முதலைமைச்சாராக வரக்கூடிய இன்றைய தளபதியை ஒரு கூரியர் சர்வீஸ் மேனாக ஆக்கியது எனக்கு வருத்தமே

டிஸ்கி : எனக்கு ஒரு சந்தேகம் ஐநா செயலாளர் அந்த கடிதத்தை படித்தாரா ? அதற்கு பதில் அனுப்பினாரா? இல்லை பதில் வாங்க மீண்டும் 2 பேர் அமெரிக்க வரப் போகிறார்களா? யாருக்காவது பதில் தெரிந்தா பின்னுட்டத்தில் சொல்லுங்கப்பா


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நல்ல நகைச்சுவை பதிவு...

    ReplyDelete
  2. அடடா... உங்களைப் பற்றி தெரியாமல் போயிற்றே...

    ReplyDelete
  3. //இந்த மதுரைதமிழனுக்கு இமெயில் அனுப்பி இருக்கலாம். நானே ஒரு நடை நடந்து போய் ஐநா சபையில் போய் கொடுத்து இருப்பபேன்.
    //- இது நல்ல ஐடியாவா இருக்கே. இந்த ஐடியாவை தலைவருக்கு எந்த கூரியரில அனுப்பறது?

    ReplyDelete
  4. இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க பிரதமருக்குக் கடிதம் டிபனுக்கும் லஞ்சுக்கும் நடுவில் இரண்டு மணி நேர உண்ணா விரதம் போன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பதிக்க வேண்டிய புரட்சிகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  5. aaka staalinai courier boyaaka aakitinga!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.