Thursday, November 15, 2012




திமுக கட்சியின் பொது செயளாலர் அன்பழகன் ஒதுங்குகிறாரா அல்லது ஒதுக்கப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சியை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மிக கட்டுக்கோப்பாக இருந்து வந்தன, ஆனால் கடந்த 10 வருடங்களாக மற்றக் கட்சிகளும் சிறிது சிறிதாக கட்டுக் கோப்பை இழந்து வருகின்றன என்பதை அரசியலை உற்று நோக்குபவர்கள் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அதிலும் மிக கட்டுக் கோப்பாக இருந்து வந்த திமுக கட்சி இப்போது குடும்ப உறுப்பினர்களால் கட்டு அவிழ்ந்து போய் கொண்டிருக்கிறது. இதன் விளைவே தலைவர் இருக்கும் போதே தலைமை பதவிக்கு குடும்பத்தினர்களிடையே நடக்கும் போட்டி. அதில் அந்த கட்சியில் தளபதி என்று அழைக்கபடுபவர் வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதனால் கட்சிக்குள் பல இடங்களில் பல  வித மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை தமிழக செய்திநாளிதழ்களையும் வார இதழ்களையும் தொலைக்காட்சிகளையும் பார்ப்பவர்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


அந்த கட்சியில் உள்ள எல்லாப் பதவிகளுக்கும் போராட்டம் போட்டி நடந்தாலும் ஒரு பதவிக்கும் மட்டும் எப்போதும் போட்டியே இருந்ததில்லை எனலாம். அதுதான் பொதுசெயலார் பதவி. கட்சியில் தலைவருக்கு அடுத்து அந்த பதவி முக்கியமாக இருந்தாலும் அதற்கு யாரும் போட்டி இடுவதில்லை காரணம் அந்த பதவியை வகித்தவர் மிக பொறுப்பாகவும் நேர்மையாகவும் இருந்து வந்ததால்தான். ஆனால் அந்த பதவிக்கும் வேட்டு வைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

அதன்விளைவாக புதிதாக செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கபட்டு அதற்கு தலைவர் பதவிக்கு போட்டி இடும் தளபதியை முதலில் அதற்கு நியமிக்க செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுசெயலார் பதவி டம்மியாக மாற்றப்படுகிறது. மற்றும் இதன் மூலம் இதுவரை பொறுப்பாக செயல்பட்டுவந்த செயலாலரை செயல்படாத செயலாளர் என்று மறைமுகமாக சொல்லி  அவரை ஒதுக்கி வைக்கபடுவதாக செய்திகள் சொல்லாமல் சொல்லுகின்றன.

இல்லை இல்லை அவரை ஒதுக்கிவைக்கவில்லை அவர்தான் கட்சியைவிட்டு ஒதுங்கி செல்லமுயல்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் கட்சி கட்டுபாடு அற்ற முறையில் செல்வதாலும் சமிபத்தில் அவரது முன்னிலையிலே அடிதடி குத்துக்கள் ஏற்பட்டு போலிஸ் வரை பிரச்சனைகள் ஏற்பட்டதால், தான் இனியும் அரசியலில் தொடர்ந்தால் பல அவமானங்களைச் சந்திக்க நேரும் என்பதால் தானே வலிய வந்து பதவியில் இருந்து விலகி கொள்ள முடிவு எடுத்து தலைவரிடம் சொன்னதாகவும் அப்படி செய்தால் கட்சிக்கு இமேஜ் பாதிக்கபடும் என்பதால் புதிய செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதில் தளபதி  அமர்த்தப்பட்டு அவருக்கு ஒய்வு தர தலைமை சம்மதித்ததுவிட்டதாகவும் சொல்லுகிறார்கள்.

எது எப்படியோ வருகிற டிசம்பர் 19ஆம் தேதி அவரின்  பிறந்தநாளின் போது கட்சியில்  இருந்து விலகி கொள்வதாக அறிவிப்பார் என்ற செய்தி கிசுகிசுப்பாக உலா வருகின்றன.


ஆனால் ஸ்டாலின் ஆதரவாளர்களோ தளபதிக்கு தேவை தலைவர் பதவிதான் பொது செயலாளர் பதவி அல்ல .கலைஞர்தான் இப்போதே தலைவர் பதவி கொடுத்த்துவிட்டால் கட்சியில் பிரச்சனைகள் அதிகமாகும் என்றும் தன்னையும் அப்படியே தன் குழந்தைகள் ஒரம் கட்டிவிடுவார்கள் என்றும் அதனால் தன் கடைசி மூச்சு உள்ளவரை அந்த பதவியை வகித்து அதன் பின் தன் வாரிசாக தளபதியை மக்களுக்கு காட்டவே இந்த செயல்தலைவர் பதவியை அறிவிக்கிறார்
என்கிறார்கள்

ஆனால் மக்களோ கலைஞர் செயல் தலைவர் என்ற பதவியை அறிவித்த போதே தம்மை தாமே  செயல்படாத படாத தலைவர் (முடியாத தலைவர்) என்று ஒத்துக் கொண்டதாக சொல்லி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்

ஊடகங்களின் மூலம் வரும் இந்த செய்திகள் எல்லாம் உண்மையா இல்லையா என்பதை காலம்தான் சொல்லும்.

இந்த பதிவு தமிழகத்தில் இருந்து வரும் பல தினசரி வார இதழ்களில் வந்த செய்தியை படித்து அறிந்ததன் விளைவே.
மேலும் இந்த பதிவு எந்த தலைவரையும் கட்சியையும் இழிவுபடுத்துவதற்க்காகவோ அல்லது மட்டம் தட்டுவதற்காகவோ எழுதப்பட்டது அல்ல

அன்புடன்
உங்கள் அன்பிற்குரிய
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இவனுங்களுக்கு, இந்த குடுமி நாதனுங்களுக்கு, திமுகவை நோன்டறதே வேலை. அன்பழகன் குடுமபத்தை பற்றி உங்களுக்கு தெரியாது; அறிவில், படிப்பில், குணத்தில் அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் MD/DM; MS/Mch; ஒய்வு பெற்ற பேராசிரியர்கள்; எங்கள் வாத்தியார்கள்.

    அன்பழகன் எதைக் கேட்டாலும் முக கொடுப்பார்; ஆனால், அன்பழகனுக்கு எதுவும் தேவையில்லை! அதுதான் உண்மை....

    ReplyDelete
    Replies
    1. அன்பழகன் மற்றும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் குணத்தை பற்றி யாருக்கும் சந்தேகமில்லை. அரசியலில் பகையாளி இல்லாத ஒரு மிகப் பெரிய தலைவர். அதனால்தான் கட்சியில் நடக்கும் அசிங்கங்களை மேலும் பார்க்க விரும்பாமல் அமைதியாக விலகி செல்லும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டு இருந்தால் அதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதுமில்லைதானே

      Delete
    2. இந்த குடுமி நாதனுங்கள் சொல்வது போல் அன்பழகன் ஒதுக்கப்படவில்லை; அன்பழகன் ஒதுக்கப்படவும் மாட்டார்; இன்றைக்கும் அன்பழகன் கேட்டால் எதுவும் முகவிடம் கிடைக்கும். எனக்கு நன்கு தெரியும்...

      மறுபடியும், மறுபடியும், மறுபடியும், இந்த குடுமி நாதனுங்கள் சொல்வது போல் அன்பழகன் ஒதுக்கப் படவில்லை. அது தான் உண்மை; அதைத் தான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

      இந்த, குடுமி நாதனுங்களுக்கு சிண்டு முடியறதே அல்லது அவுக்கறதே வேலை. அதே மாதிரி இந்த குடுமி நாதனுங்கள் சொல்வதை அப்படியே நம்பி கேள்வி ஏதும் கேட்காமல் அதை அப்படியே வெளி உலகிற்கு பர்ப்புபவது, நம்ம சூத்திரன்கள் மற்றும் சத்சூத்திரன்கள் வேலை.

      In short, குடுமினாதன்கள் எது சொன்னால், No questions asked but we Soothirans just suck up to them; Bye the way, forever...!

      Delete
  2. அன்பழகனோட பொறுமை, நிதானம், அரசியல் சாதுர்யம் யாருக்கும் வராது என்பதே என் எண்ணம். எனக்கென்னவோ அவர் முதல்வரா வந்திருந்தா தமிழகம் இன்னும் வளார்ந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பழகனோட பொறுமை, நிதானம், அரசியல் சாதுர்யம் உண்டாகும் பலங்கள் எல்லாம் நம் தமிழ்மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்பதுதான் எனது ஆதங்கம் கூட

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.