உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, November 23, 2012

கிரேஸி அமெரிக்கர்களின் Black Friday?கிரேஸி அமெரிக்கர்களின்  Black Friday?

அமெரிக்காவில் நன்றி நாளைத் (Thanks Givingday) தொடர்ந்து  வரும் வெள்ளிக்கிழமையை கருப்பு வெள்ளி (Black Friday) என்று அழைப்பார்கள். இந்த நாளை கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பருவத்தின்  ஆரம்பமாக கருதப்படும். இந்த நாளில் கடைகள் மற்றும் மால்கள் அதிகாலையில் திறக்கப்பட்டு பல பொருட்கள் பாதிவிலைக்கு மேல் குறைத்து விற்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள்தான் மிகவும் பிஸியான ஷாப்பிங்க நாள் ..இந்த நாள் கடைகளுக்கு மிக மிக முக்கியமான நாள் மட்டுமல்ல ஏழைகளுக்கும் , அமெரிக்காவிற்கு புதிதாக இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கும் ,பணக்காரர்களாக இருந்து மேலும் பணத்தை அதிக அளவு சேமிக்க ஆசைப்படுபவர்களுக்கும் முக்கியமான நாள் காரணம் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதால்.


நான் ரீடெய்ல் இண்டஸ்ட்ரீயில் செய்பவன் என்ற அடிப்படையில் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த விலை குறைப்பு என்பது கஸ்டமர்களிடையே நடத்தப்படும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆகும். ஒரு சில பொருட்களைத்தவிர மற்ற பொருட்களின் விலை வழக்கமான காலங்களைவிட விலை சற்று அதிகம்தான். இந்த ரீடெய்ல் இண்டஸ்ட்ரீ மார்கெட்டிங்க்  & மீடியா மூலம் மக்களின் மனதை ப்ரெய்ன் வாஷ் செய்து இப்படி மிக மிக விலை குறைவு என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கின்றன. உதாரணமாக நான் கடந்த வாரத்தில் நார்மல் சேல் உள்ள நேரத்தில் எனது வீட்டிற்கு தேவையான "X" என்ற பொருளை வாங்கினேன். அதன் ரெகுலர் விலை $ 2,199.99 டாலராகும் அதை நான் வாங்கியது 999.99 டாலர் விலைக்கு வாங்கினேன்.
அதே பொருள் இந்த Black Friday யில் சேல்ஸ் விலை  1600 டாலராகும் அது மட்டுமல்ல அந்த  X ஐட்டம் லீமிடெட் அளவு மட்டும் அதாவது ஒரு ஸ்டோருக்கு விற்பனைக்கு 5 மட்டும் ஸ்டாக் தருவார்கள்  அதுவும் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் அது கிடைக்கும். இதற்காக மக்கள் குளிரில் காலை 4 மணியளவில் திறக்கும் ஸ்டோருக்கு முதல் நாள் இரவு 10 மணியளவில் இருந்தே க்யூவில் நிற்கத் தொடங்கிவிடுவார்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள் இந்த ரீடெய்ல் இண்டஸ்ட்ரீயின் விளையாட்டு தனத்தை. (நான் வேலை பார்க்கும் இடத்தில் மீடியா பாலிஸியில் எல்லோரும் சைன் பண்ண வேண்டும் அதன்படி நாங்கள் எதையும் வேலையை விட்டு விலகிய ஒரு வருடத்திற்கும் அந்த நிறுவனத்தை பற்றிய இன்சைடு விஷயங்களை வெளியிடக் கூடாது. அதன் காரணமாகத்தான் நான் இன்னும் அதிக அளவு சொல்ல இயலவில்லை)

"Black Friday is a scam. You should be mad they overcharge you 364 days a year. "


இந்த நாள் ஒவ்வொரு ரீடெய்ல் கம்பெனிக்கும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். இந்த நாளின் வருமானம் மிக முக்கியமானதால் கம்பெனியில் டாப் லெவில் இருப்பவர்களுக்கு மிக மிக மிக அதிக பிரஷர் தரும் நாள் .காரணம் இந்த நாளுக்கு இவர்கள் செயல்படுத்தும் ஐடியாக்களில் குறைவு ஏற்பட்டு விற்பனை பாதிக்கும் போது இவர்கள் கம்பெனியில் இருந்து அடுத்த நாளே தூக்கி எறியபடுவார்கள். பல அதிகாரிகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்கள் போல பந்தாடப்படுவார்கள்...
முன்பு எல்லாம் Black Friday நாளின் போது ஸ்டோர்கள் வழக்கமாக திறக்கும் நேரத்தைவிட ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திறப்பார்கள். ஆனால் "அண்ணன் வால்மார்ட்" போட்டியில் வெற்றி பெற  ஒரு சில வருடங்களுக்கு முன்பு அதிகாலை 4 மணிக்கும் கடந்த வருடத்தில் இரவு 12 மணிக்கும் இந்த வருடம்  இரவு 8 மணியளவிலும் திறப்பதால் மற்ற ஸ்டோர்களும் இதே மாதிரி சீக்கிரமாக திறந்து வைக்கும் நிலமைக்கு தள்ளபட்டுவிட்டார்கள். இதனால் ரீடெய்ல் இண்டஸ்ட்ரீயில்  வேலை பார்ப்பவர்கள் மிக அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல விடுமுறைத்தினத்தை குடும்பத்துடன் அனுபவிக்க முடியாத நிலமைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்த நிலைமைக்கு மறைமுக தள்ளப்பட்டு மிக சீக்கிரமாக குளிரில் ஷாப்பிங்க் மாலுக்கு வெளியே நிற்கும்படி நிலமை ஏற்படுகிறது.


இந்த ஆண்டு பல மாநிலங்களில் வால்மார்ட் தொழிலாளர்கள் ஸ்டிரைக் செய்ய போவதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு எதிராக வால்மார்ட் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நிலைமை வால்மார்ட் இந்தியாவில் இருந்து நடந்தால் இரும்புகரம் கொண்டு அடக்கப்படும் என்பதில் ஐயமில்லை


இப்படி ஒரு சமுதாயத்தை சீர்குலைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் அண்ணன் வால்மார்ட் போன்றவர்களுக்குதான் நமது இந்திய அரசாங்கம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது... மக்களே நீங்களும் thanks giving day & balck friday நாளை கொண்டாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை

மதுரைத்தமிழா! நீங்கள் ரீடெய்ல்  கம்பெனியில் வேலை பார்ப்பதால் உங்களிடம் ஒரு கேள்வி

Black Friday தினத்தில் அதிக அளவு பணம் சேமிப்பது என்பதை உங்க தொழில் அனுபவத்தின் மூலம் சொல்லிதாங்களேன். இது நீங்கள் அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்குமே?

மதுரைத்தமிழன் : சரி சரி நான் அந்த சீக்ரெட்டை சொல்லித்தாறேன் ஆனா இதை வேறுயாருக்கும் சொல்லிவிட வேண்டாம் ஒகேவா????  நீங்க அதிக அளவு அந்த நாளில் பணம் சேமிக்க வேண்டுமென்றால் ஷாப்பிங்க செல்லாமல் ஸ்மார்ட்டாக வீட்டில் இருந்து குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் அதிக அளவு சேமிக்கலாம். எப்படி நம்பள்கி ஐடியா?Black Friday = broke Saturday.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைதமிழன்

10 comments :

 1. என் வாழ்வில் விளையாண்டு கொண்டிருகிறது ...... :-) நானும் அதே ரீ டெயில் தான் சார் ... என்ன நீங்க அமெரிக்க இந்தியர்.. நன் இந்திய அமெரிக்கன் :-)

  ReplyDelete
 2. Going to shops at odd hours is crazy. Agreed! At a relaxed time, say in the after noon, I have purchased top of the line designers clothes at a throw away prices.

  The middle level such as Van Heusen shirts can be bought for a comfortable price of 15 to 18 dollars; Arrow shirts, one level lower to Van Heusen can be purchased even at a lower price.

  It is really atrocious that Arrow shirts are sold around Rs.1400 or more in Chennai.

  ReplyDelete
 3. அங்கேயும் பித்தலாட்டம்தானா? ரங்கநாதன் தெருவை விட மோசாமான நெரிசலா இருக்கே? அதுசரி அமரிக்கர்கள் புத்திசாலிகள் பெரும்பாலும் படித்தவர்கல்ன்னு சொல்றாங்களே இதெல்லாம் அவங்களுக்கு விளங்காதா?

  \\அதன் ரெகுலர் விலை $ 2,199.99 டாலராகும் அதை நான் வாங்கியது 999.99 டாலர் விலைக்கு வாங்கினேன்.
  அதே பொருள் இந்த Black Friday யில் சேல்ஸ் விலை 1600 டாலராகும்.\\ Black Friday யில் சேல்ஸ் விலை குறைத்தாலும் 1600 டாலர் பொருள் உங்களுக்கு எப்படி 999.99 க்கு கிடைக்கிறது?

  ReplyDelete
  Replies

  1. இங்குள்ள அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் அல்ல அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் நம்மவர்கள் இங்கே நுழைந்து இருக்க முடியாது அமெரிக்கர்களைப் பற்றி ஓரே ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் உலகிலேயே மிக சுயநலவாதிகள் அமெரிக்கர்கள் தான் அமெரிக்கர்கள் ஆங்கிலம் பேசுவதால் அவர்களை படித்தவர்களாக நம்வர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர்


   /// Black Friday யில் சேல்ஸ் விலை குறைத்தாலும் 1600 டாலர் பொருள் உங்களுக்கு எப்படி 999.99 க்கு கிடைக்கிறது?///

   நான் வாங்கியது Black Friday க்கு வருவதிற்கு 2 வாரங்களுக்கு முந்தி வாங்கியது அப்போது அதன் சேல் விலை 999.99 டாலர்


   இந்தவிலை குறைப்பு எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை விளக்க வேண்டுமானால் மிகப் பெரியாஆஆஆஆஆஆஆஆஆஅ பதிவாகத்தான் போட வேண்டும்

   Delete
 4. ###########நான் ரீடெய்ல் இண்டஸ்ட்ரீயில் செய்பவன் என்ற அடிப்படையில் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த விலை குறைப்பு என்பது கஸ்டமர்களிடையே நடத்தப்படும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆகும்#####

  எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நண்பரே நடக்கிறது, நானும் உங்களுடைய தொழில் சார்ந்தவந்தான்.
  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 5. நாம தேவலாம் போல் உள்ளதே
  கணொளியுடன் பகிர்ந்த விதம் அருமை
  சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது
  நன்றி

  ReplyDelete
 6. 10 டாலருக்கு 10 க்ராஸ் பால் பாய்ண்ட் பேனா வாங்கியதாக நண்பர் ஒருவர் சொன்னாரே..! அது எப்படி?

  ReplyDelete
 7. ஆடித்தள்ளுபடி மாதிரி ஏமாத்தற விஷயம்தான்! நல்ல விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
 8. அட்சய திருதியை மாதிரி ப்ளாக் Friday போல இருக்கு.தெரிஞ்சும் ஏமாறத் தாயாரா இருக்காங்களே மக்கள்

  ReplyDelete
 9. ப்ளாக் பிரைடே, பாக்சிங் டே, ஆடித் தள்ளுபடி, அட்சய திருதியை எல்லாம் நுகர்வு கலாச்சாரத்தின் மெகா பித்தலாட்டங்கள். அமெரிக்கா என்றால் என்ன இந்தியா என்றால் என்ன எல்லா மக்கள்ஸ் ஒரே போலத் தான், கிரேஸி மக்கள்ஸ். அளவறிந்து தேவைக்கு ஏற்ப விரும்பிய நேரத்தில் நுகர்வதே சரி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog