Sunday, October 28, 2012





அமெரிக்காவை மிரட்டி கொண்டிருக்கும் Hurricane Sandy
பதிவிட்ட நேரம் 10/28/2012 இரவு 9:23 PM(அமெரிக்காவின் ஈஸ்டன் நேரம்)



கரிபியாவில் 60 க்கும் மேலே உயிர் பலி வாங்கிய சேண்டீ தனது தாகம் அடங்காமல் அமெரிக்காவில் உள்ள ஈஸ்ட் கோஸ்டை நோக்கி  மணிக்கு 15 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது . இதன் தாக்கம் நீயூஜெர்ஸி (அதுதாங்க நான் வசிக்கும் பகுதி ) நீயூயார்க், வாஷிங்கடன், மேரிலேண்ட், கனெக்டிக்கெட்,பென்சிலிவெனியா பகுதியில் மிக அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. 



 நீயூஜெர்ஸி, நீயூயார்க் பகுதிகளில் ஒடி கொண்டிருக்கும் அனைத்து பஸ் ,டிரெயின்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.  நீயூஜெர்ஸியில் எமர்ஜென்ஸி நிலமை அறிவிக்கப்பட்டுள்ளது  பல நகரங்களில்  மக்களை  கட்டாயமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றி கொண்டிருக்கின்றனர் மக்கள் தங்குவதற்கான ஷெல்டர்கள் பல பகுதிகளில் திறக்க ஆரம்பித்துவிட்டனர்.

உணவுப்ப் பொருட்களை வாங்கும் கடைகளில் மக்கள் கூட்டம் மிக அதிகம் அனைத்து கடைகளிலும் வாட்டர் மற்றும் பிரெட்கள் மெழுகுவர்த்திகள் எல்லாம் காலியாகிவிட்டன, சனிக்கிழமை மதியத்திற்கு மேலே பல இடங்களில் பிரெட்டும் தண்ணிரும் பல கடைகளில் காலியாகிவிட்டன.. அது போல ஹோம் இம்புருமெண்ட் கடைகளில் கூட்டம் அலை மோதுகின்றன... சம்பம்பு, ஜெனரெட்டர் போன்றவைகளை வாங்க மக்கள் கடை கடையாக அலைகின்றனர். பல பெரியகடைகள் தங்களது பக்கத்து மாநில கடைகளில் இருக்கும் ஸ்டாக்குகளை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பலரும் அடிப்படையான மருந்துக்களையும் வாங்கி வைத்து கொண்டிருக்கின்றனர்.


Latest information on Hurricane Sandy (as of 8pm ET, ): (இந்திய நேரம் திங்கள் காலை 5 மணி நீயூயார்க் நேரம் ஞாயிறு )இரவு 8

- Location: 34.0N 70.9W
- About 280 miles east-southeast of Cape Hatteras, North Carolina
- About 485 miles south-southeast of New York City
- Maximum sustained winds of 75 miles per hour (120 km/h)
- Currently moving northeast at 15 miles per hour (24 km/h)


The U.S. Army says more than 61,100 National Guard members are ready to assist civil authorities in disaster recovery following Hurricane Sandy. Currently almost 370 Guard members are already active in Delaware, North Carolina and Virginia as of Sunday afternoon, according to the U.S. Army.

இந்த ஹரிக்கேனை பற்றி ஒபாமாவின் பேச்சு




டிஸ்கி : கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஜெனரேட்டரும் வாட்டரும் கிடைத்துவிட்டன. இங்கே மிக முக்கியமாக ஒன்றை குறிப்பிடவிரும்புகிறேன். வாட்டர் உணவுப் பொருட்கள் ஜெனரேட்டர்கள் சம்பம்புகளுக்கு மிக அதிக தேவையிருந்தாலும் எந்த இடங்களிலும் விலையை ஒரு சல்லிகாசுகூட அதிகரிக்க மாட்டார்கள், நேற்று மதியத்திலிருந்து வாட்டருக்காக அலைந்த நான் இன்று காலையில் எனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் புதிய ஷிப் மெண்ட் வந்ததால் கிடைத்தது அப்போதும் அவர்கள் அதை ஜம்பது செண்ட் தள்ளுபடிவிலையில் விற்றார்கள். அவர்கள் ஒரிஜனல் விலையைவிட அதிகம் வைத்தாலும் வாங்கவதற்கு ஆட்கள் இருந்தும் அவர்கள் அப்படி செய்யவில்லை என்பதுதான் முக்கியமாக பார்க்க கூடியது

டிஸ்கி : எனக்கும் அனது குடும்பதினருக்கும் எந்த வித ஆபத்து இல்லாமலும் பவர் போகாமலும் இருந்தால் எனது பதிவுகள் வழக்க போல தொடர்ந்து வரும்.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

6 comments:

  1. தகவலுக்கு நன்றி...

    பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தாங்களும் , தங்கள் குடும்பமும் , அமெரிக்க மக்களும் பாதுகாப்பாக இருக்க இறைவனைப்பிரார்த்திக்கிறோம்...

    ReplyDelete
  3. அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் போகவேண்டும் என
    வேண்டிக் கொள்கிறோம்
    காணொளி பார்க்கவே பயமாய் இருக்கிறது
    பாதுகாப்பாய் இருக்கும்படியும்
    அலட்சியத்தை தவிர்க்கும்படியும்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. அங்கேயும் தண்ணீரை காசு குடுத்து தான் வாங்கனுமா.............. சரி, தமிழா நீ அடுத்த பதுவு போடுற வரைக்கும் கொஞ்சம் அவதியோட நன் காத்திருக்கேன்.......... ஜாக்கிரதியா இரு..........

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.