Sunday, October 7, 2012





தமிழ் பெண்ணை சாகடித்த கன்னட நர்ஸ்


நான் என் குடும்பத்தாருடன் மதுரையில் உள்ள ரயில்வே காலனியில் வசித்த போது எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு கன்னட நர்ஸ் வசித்து வந்தாள்.  அவர் ரயில்வே ஹாஸ்பிடலில் வேலை செய்து வந்தார்.. எனது மூத்த சகோதரன் உடல்நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடலுக்கு   சென்ற போதுதான் இந்த சம்பவத்தை பார்த்தான்.


ஒரு ரயில்வே தொழிலாளி தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் அங்கே சேர்த்து இருந்தார். அவருக்கு உடல்நிலை சிறிது குணமானதும் அவரை அன்று டிஸ்ஜார்ஜ் செய்தார்கள். பெண்களின் வார்டு மாடியில் இருந்ததால் அவர் கணவர் மனைவியிடம்  நான் போய் ஆட்டோவை கூப்பிட்டு வருகிறேன் அது வரை நீ இங்கேயே இரு என்று சொல்லிச் சென்றார்.

அவர் ஆட்டோ பிடித்து வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. அவர் வந்து பார்த்த போது மனைவி அங்கு இல்லை. உடனே அவர் அந்த கன்னட நர்ஸிடம் என் மனைவி எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் இப்பதான் உங்க மனைவி இறந்து போச்சு என்றார்,
உடனே அந்த ஆள் பயந்து அழுதவாறு என்னம்மா சொல்லுறிங்க இப்பதான் என் மனைவி டிஸ்ஜார்ஜ் ஆனா நான் ஆட்டோ பிடித்து வருவதற்குள் என்ன நடந்தது என்று கேட்டார்.அதற்கு அவர் ஹேய் நான் அவ இப்பதான் இறந்து போச்சுனு சொல்லுறேன் நீ அழுது ஆர்பாட்டம் பண்ணுறே இது ஹாஸ்பிடல் அப்பா இங்கே சத்தம் போட்டு அழுகாதே..அதை கேட்ட அவர் ஓஓஓ என்று அவர் கதற ஆரம்பித்துவிட்டார்.  .இந்த நிகழ்ச்சியெல்லாம் ஒரு நொடியில் நடந்துவிட்டது. இதை பார்த்த என் சகோதரன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அதை பார்த்த அந்த ஆள் கோபபட ஆரம்பித்துவிட்டார்.


இறுதியில் சிரிப்பை அடக்க மூடியாமல் எனது சகோதரன் அவரிடம் சொன்னான் சார் உங்கள் மனைவி ஒன்றும் இறக்கவில்லை. உங்களுக்காக காத்திருந்த உங்கள் மனைவி நீங்கள் நீண்ட நேரம் வராமல் இருக்கவே  அவர் மாடியில் இருந்து கிழே இறங்கி சென்றார். அவர் இறங்கி சென்றதைதான் இந்த தமிழ் சரிவர பேச தெரியாத  நர்ஸ் இறந்து போனார் என்று  விளக்கி சொன்னதும்தான் அந்த கணவரின் முகத்தில் சிரிப்பு தவழ ஆரம்பித்தது. அழுத அவர் இப்போது சிரிக்க ஆரம்பித்ததும் அந்த நர்ஸ் மிக குழப்பமாகிவிட்டார் அதன் பிறகு எனது சகோதரன் அவருக்கும் விளக்கமளித்தார்.

அந்த நர்ஸ் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்ததால் எப்போதும் அவர் பேசும் தமிழை சொல்லியே கிண்டல் அடிப்போம்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments:

  1. நல்ல தமிழ் தான் பேசுறாங்க விளங்கிடும்.

    ReplyDelete
  2. ஒரு வார்த்தை மாறியதால் என்னவெல்லாம் நிகழும் என்பதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்...

    நன்றி,
    மலர்
    http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. யப்பப்பப்பப்பப்பபா.....
    கொஞ்ச நேரத்துக்குள்ள அந்த நர்ஸ் மேலயும், அதை பார்த்து சிரிச்ச உங்க சகோதரன் மேலயும் பயங்கரமா கோபம் வந்துடிச்சு. தலைப்பு வேற பயமுறுத்துது பா. சே.

    ReplyDelete
  4. அடாடா... மொழியினால் இப்டில்லாம் வருமா... நான் படித்த துணுக்கு ஒண்ணு நினைவுக்கு வருது. ஆந்திராவுக்கு புதுசாப் போன ஒருத்தன் தெலுங்கை அரைகுறையா கத்துக்கிட்டு பேச ஆரம்பிச்சிருக்கான். மார்க்கெட்டுக்குப் போனவன் கத்தரிக்காய கிலோ என்ன விலைன்னு கேக்க. கடைக்காரி பதி ரூபான்னு சொல்லிருக்கா. எட்டு ரூவாய்க்கு இஸ்தாவா (தருவியா)ன்னு கேக்க வேண்டிய இவன் எட்டு ரூவாய்க்கு ஒஸ்தாவா (வருவியா)ன்னு கேட்ருக்கான். ஓ. மேலே கேக்காதீங்க...

    ReplyDelete
  5. கதையின் கடைசி வரைக்கும் நெஞ்சு மேல கையை வச்சு பதட்டத்தோட படிச்சு முடிச்சேன்............ இன்னொரு தடவை தாங்காதையா.........

    ReplyDelete
  6. போங்கப்பு என்னமோ ஏதோன்னு

    டைமுக்கு ஏத்த தலைப்பு

    ReplyDelete
  7. அவர் இறங்கி சென்றதைதான் இந்த தமிழ் சரிவர பேச தெரியாத நர்ஸ் இறந்து போனார் என்று விளக்கி சொன்னதும்தான் அந்த கணவரின் முகத்தில் சிரிப்பு தவழ ஆரம்பித்தது.

    இறந்து போவத்ற்கும் இறங்கிப்போவதற்கும் எத்தனை வித்தியாசம் !

    ஒரு நிமிடத்தில் பதறவைத்துவிட்டாரே நர்ஸ் !

    ReplyDelete
  8. பதட்டப்பட வைத்ததுவிட்டீர்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.