Thursday, October 4, 2012







பிரியாணி,சரக்கு மற்றும் இலவசம் இல்லாமலே சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்  பிரச்சாரங்கள் அக்னி நட்சத்திரம் போல மிகவும் சூடுபிடித்து வருகிறது .  இங்கு தொலைக் காட்சி விவாதங்கள் Presidential Debate )முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தலின் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்த விவாதமும் ஒரு முக்கிய காரணமாகும். விவாதத்தின் போது செய்யும் சிறு தவறுகளும் , நின்று பேசும் தோரணையும் கூட போட்டியின் போக்கை மாற்றி விடும்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் என்றால சும்மா  அடுக்கு மொழி பேசும் பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. உலக நடப்புகளையும் உள்நாட்டு நடப்புகளையும் பற்றி நன்கு விபரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் . இவர்களுக்கு எல்லா விபரங்களையும் நிலைமைக்கு தகுந்து பிரச்சார யுத்திகளை அமைத்து கொடுக்க  டீம் இருந்தாலும் இம்மாதிரி விவாதம் வரும் போது வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி  அப்போதைய நிலமை நன்றாக தெரிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் மேடையிலே வேட்டியை அவத்து அம்மனமாக்கி விடுவது போல கிழி கிழி என கிழித்து எறிந்துவிடுவார்கள்

 இந்த நிலையில்   ஒபாமாவுக்கும் அவரை எதிர்த்து போட்டியிடும் மிட் ராம்மினிக்கும் இடையே நேற்று நடந்த விவாதம் வழக்கம் போல மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.  இந்த விவாதத்தில் ராம்மினி மிக ரிலாக்ஸாவகவும், மிக நம்பிக்கையுடனும் ,புத்துணர்வுடணும் காட்சி அளித்தார் அதே நேரத்தில் ஒபாமா மிகவும் தளர்ந்து காணப்பட்டார் என்றே சொல்லாம். வழக்கமாக மிக தைரியத்துடன் எதிராளியின் கண்ணை பார்த்து பேசும் ஒபாமா நேற்றைய பேச்சின் போது பல இடங்களில் தலைகுனிந்துதான் பேசினார் .இந்த முதல் விவாதத்தில் ராம்மினிதான் ஆதிக்கம் செலுத்தி வெற்றியாளர் போல காட்சி அளித்தாக அரசியல் பார்வையாளர்களும் மக்களும் கருதுகிறார்கள் என்றாலும் ஒபாமாதான் கருத்து கணிப்புகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் இந்த தொலைக்காட்சி விவாதம் இருவருக்கும் இடையேயான வெற்றி வாயப்புக்கான இடைவெளியை சிறிது குறைத்துள்ளது என்பது உண்மையே.

ராம்மினியின் கொள்கைகள் ஒபாமாவை விட எந்தவிதத்திலும் மிக சிறப்பானதாக இல்லை என்றாலும், அவரின் பேச்சு நேற்று மிக சிறப்பாக இருந்தது   ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லியும் . தாங்கள்  வந்தால், அது செய்வோம் இது செய்வோம் வானத்தை வில்லாக வளைப்போம் என்று எப்படி வேண்டுமானாலும் ஜெயலலிதாமாதிரி கதை விடலாம் ஆனால் ஆட்சியில் இருப்பவர்களால் அதுபோல் கூற முடியாது காரணம் அவர்கள் ஆளும்  லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும் இது போன்ற காரணங்களால்தான் ஒபாமாவின் பேச்சு அவ்வளவு சிறப்பாக இல்லாதது போல தோன்றியது.
Steve Breen—Creators Syndicate



ராம்மினியின் இந்த சிறு வெற்றியால்  வைஸ் பிரசிடெண்ட்டான ஜோ பைடனுக்கு9 Vice President Joe Biden ) அழுத்தம் கூடியுள்ளது. இது வரும் அக்டோபர் 11 ல் நடக்க போகும் விவாதத்தில்  அவரது போட்டியாளரான ரேயனுடன் Ryan விவாத்திக்கும் போது வெளிப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது



அக்டோபர் 16ல் அடுத்த கட்ட விவாதமும் இறுதியாக அக்டோபர் 22ல் நடக்க உள்ளது. அதில் பார்வையாளர்களும் கேள்விகள் கேட்பார்கள். இந்த விவாதங்கள் தான் வரும் தேர்தலில்  திருப்பு முனையாக இருக்கும் .

நேற்று நடந்த விவாதத்தை பார்க்காதவர்கள் இங்கே சென்று பார்க்கவும்.
Presidential Debate 2012 (Complete) Romney vs.Obama - 10/3/2012 - Elections 2012



மேலைநாட்டு கலாச்சாரத்தை கேளி செய்பவர்களும் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் காரணம் தங்கள் தலைவர்களை தலையில் வைத்து ஆடும் மக்கள் இங்கு எதிர் எதிர் கட்சியை சார்ந்த தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கும் போது எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய மிக நல்ல வாய்ப்பு.. இந்தமாதிரி விவாதத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள் முதலில் குடும்பத்துடன் இணைந்து நலம்  விசாரித்து ஒருவருக்கொருவர் வாழ்த்தை பறிமாறிக் கொள்கிறார்கள்.மேலும் பேசும் போது தனிப்பட்ட தாக்குதல் அல்லது அவர்கள் குடும்பத்தை பற்றி பேசுவதில்லை.  இவர்கள் சிறிது  கூட  உணர்ச்சிவசப்படாமலும் கோபப்படாமலும்  ஓருவரை ஒருவர்  தாக்கும்போது கூட கிண்டலாகவும் முகத்தில் சினேக புன்னகையுடனும் தாக்குகிறார்கள் .அதுமட்டுமல்ல இந்த விவாதத்திற்கு நடுவராக இருப்பவர் சொல்படியும் கேட்கிறார்கள்..இப்படி ஒரு செயலை நீங்கள் வான்யுர புகழும் தலைவர்களால் செய்ய முடியுமா? ஒரு கணம் நினைத்து பாருங்கள்








ஒபாமாவின் இந்த சிறு சருக்கல் அவர்களின் ஆதரவாளர்களிடையே சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதை உணர்ந்த ஒபாமா இன்று நடந்த பிரசாரத்தில் அடிபட்ட நாகம் சீறுவது போல ரோம்னியை மிக பலமாக தாக்க ஆரம்பித்துள்ளார்.





""when the president made his first campaign speech after the debate, in Denver, Colorado, on Thursday, he started attacking his opponent almost immediately.

“When I got onto the stage, I met this very spirited fellow who claimed to be Mitt Romney," said President Obama.

Obama charged that the former Massachusetts governor, by denying in the debate that he planned to cut $5 trillion in taxes, was switching his positions.

“But it could not have been Mitt Romney.  Because the real Mitt Romney has been running around the country for the last year, promising $5 trillion in tax cuts that favor the wealthy.  The fellow on stage last night said he did not know anything about that," said Obama.""











அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அமெரிக்கத் தேர்தல் பற்றிய நடைமுறையை மிக தெளிவா தந்துள்ளீர்! இந்தியத் தேர்தலை எண்ணிப் பார்கும் போது ஏளனமும், ஏக்கப் பெருமூச்சும் தான் தோன்றுகின்றன! நன்றி!

    ReplyDelete
  2. எனது தாமரைமதுரை தளத்திர்க்கு வந்து கருத்திடமைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு மலர்க்கொத்து காத்திருக்கிறது தங்களின் முதல் வருகக்காக!

    ReplyDelete
  3. அன்பின் சகோ,

    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html

    மனத்திண்மை இவர் பதிவுகளில் நான் காண்பதுண்டு. மனிதநேயம் இந்த நல்ல மனிதரின் நலன் விசாரிப்பதில் கண்டதுண்டு. நகைச்சுவை யார் மனமும் புண்படாமல் பதிவுகளில் எழுதுவதில் நான் காண்பதுண்டு. அருமையான இந்தப்பிள்ளையின் பதிவுகள் சில பார்ப்போமா?

    புளி சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள்
    செல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்)
    இலையை எந்தப்பக்கம் மடிக்கலாம்?


    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  4. Clear and good descriptions. Thanks.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.