Wednesday, October 31, 2012





தினமலர் நிருபர்கள் வடிகட்டின முட்டாள்களா?

இயற்கையின் சீற்றத்தால் நிகழும் பாதிப்புகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை படிக்காத பாமர மக்கள் கூட அறிவார்கள். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் உலகில் அதிகம் பார்க்க கூடிய படிக்க கூடிய தினசரி செய்திதாள் என்று மார்தட்டிக் கொள்ளும் தினமலர் செய்திதாளில் இயற்கை சீற்றத்தால் அமெரிக்காவை பாதித்த சாண்டி ஹரிக்கேன் பற்றி வந்த செய்தியை பாருங்கள்.



நியூயார்க்: உலகிலேயே மிகவும் வளர்ந்த நாடு, வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில், தற்போது குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இன்டர்நெட் இல்லை, போன் வசதி இல்லை என நிறைய இல்லைகள்.

உலக பெரியண்ணன், போலீஸ் காரர், வல்லரசு என்றெல்லாம் பெரிய பெரிய பெயர்கள் உண்டு அமெரிக்காவுக்கு. மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவை ஒரு புயல் அப்படியே திருப்பி போட்டு விட்டது. சாண்டி என பெயரிடப்பட்டுள்ள சூப்பர் புயல் இந்திய நேரப்படி இன்று காலை 5.42 மணிக்கு நியூஜெர்சி அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். நியூயார்க் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இது ஒரு தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார்


புகழ்பெற்ற செய்திதாளில் பணிபுரியும் நிருபரின் தரம் எப்படி இருக்கிறது என்பதை மேலே உள்ள செய்தியின் தரத்தில் இருந்து அறியலாம். ஒரு பள்ளிசிறுவன் கூட இதை விட மிக அறிமையாக செய்தி தருவான். இப்படி பட்ட நிருபருக்கு சம்பளம் தரும் அந்த பத்திரிக்கை பொறுப்பு ஆசிரியர் அதைவிட முட்டாளாகத்தான் இருக்க முடியும்


தமிழகத்தில் இருந்து உலகின் மறுபக்கம் நடந்த இயற்கையின் சீற்றத்தை பற்றி உண்மையின் உரைகல் என்று தினமலர் தரும் செய்தி எவ்வளவு கேவலமாக இருக்கிறது. இந்த செய்திதாள் தமிழகத்தில் அதிகம் விற்கப்படுகிறது அல்லது படிக்கபடுகிறது என்றால் அதை படிக்கும் மக்களின் புத்திச்சாலிதனத்தில் நமக்கு சந்தேகம் எழுகிறது.

இந்த செய்தியை படித்து பதிவிட்ட சிலரின் கருத்துகள் இது :

mnathumitha - CA,யூ.எஸ்.
31-அக்-201202:30:26
mnathumitha அமெரிக்காவில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை வல்லரசான அமெரிக்காவில் இந்த நிலைமை என கிண்டலாக செய்தி வெளியீட்டு மகிழ்வதில் என்ன புண்ணியம்? இயற்க்கை சீற்றங்கள் வருவதை தடுக்க யாரால் இயலும்? ஆனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் புயல் அடித்த சுவடுகூட தெரியாமல் எல்லாவற்றையும் சீரமைத்து விடுவார்கள். எந்த இயற்க்கை சீற்றமும் இல்லாமல் இன்று பதினான்கு மணிநேர மின்வெட்டு, டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இந்த மாதிரி சாண்டி புயல் இந்தியாவிற்கு வந்திருந்தாள் உயிர் சேதம் லட்ச கணக்கில் இருந்திருக்கும். ஊழல் என்ற நோய் பிடிக்காதவரை அமெரிக்கா பெரியண்ணன்தான்.


Sri - Dallas,யூ.எஸ்.
31-அக்-201203:03:01 IST Report Abuse
Sri I condemn dinamalar for such a article, some part of USA did not have power due to hurrycane for very short time, no one can do any thing for this strom but in USA we are living with no power or water or infrastructure problem, how about Tamil Naud every day is strom no power, usable water and draining water is on the road. USA has many good things, Dinamalar should encourage to bring in TN instead of insulting others, see the good things from others and correct ourshelves.

தமிழகத்திற்கு வந்த நீலம் புயல் பற்றி இவர்கள்  செய்தி வெளியிட்டால் இப்படிதான் வெளியிட்டு இருப்பார்கள் :

சாண்டி புயல் தமிழகத்திற்கு வரவிருந்தது அதை நமது அம்மா தானைத்தலைவி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்தான் தனது அமைச்சர்கள் மூலம் பெரிய அண்ணனுக்கு திருப்பி அனுப்பிவிட்டார் அதற்கு பதிலாக நீலம் புயலை மட்டும் தமிழகத்தில் அனுமதித்தார். அந்த புயல் தமிழகத்தை பாதித்ததும் தமிழகத்தில் எங்கும் தண்ணிர் தேங்கவில்லை. ரோடு குண்டும் குழியுமாக ஆகவில்லை புயல் வரும் போது மக்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் மிக சிறப்பாக செய்யபட்டன. ஒடிய பஸ் ரயில்களில் ஒரு சொட்டு தண்ணிர் கூட ஒழுக வில்லை. ஆட்டோகார்கள் வழக்கம் போல வாடகை வசூலித்தனர். காய்கறிகள் மீன்கள் போன்றவைகளின் விலை ஏறவில்லை. தண்ணிரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அரசாங்கம் நல்ல வசதியான ஷெல்டர்களை ஏற்படுத்தி தந்தன என்று செய்தி தருவார்கள்.


தினமலரின் உரிமையாளருக்கும் பொறுப்பு ஆசிரியர்க்கும் ஒரு கேள்வி? உங்களுக்கு ஒரு நல்ல அறிவுள்ள நிருபர்கிடைக்கவில்லையா? இந்த நிருபருக்கெல்லாம் ஏன் தண்டச் சம்பளம் தருகிறிர்கள். உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் பதிவுலகில் பலர் மிக அருமையாக தகவல் தருகிறார்கள் அவர்களிடம் கேட்டால் கூட இலவசமாக உங்களுக்கு செய்தி எழுதி தருவார்கள். முடிந்தால் அவர்களிடம் நல்ல தரமான செய்திகளை பெற்று படிப்பவர்களுக்கு தரமான செய்திகளை தாருங்கள்.


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைததமிழன்

13 comments:

  1. ஹாஹா, இதுதான் மேட்டரா? நான் தினமலர் படிப்பதில்லை.

    எங்க ஊரிலிருந்து நைட்டு பூரா போன் போட்டு அமெரிக்காவுல புயலாமே, செம டேமேஜாமே, என்னடா ஆச்சுன்னு விசாரிச்சாங்க. நான் காண்டு ஆகி. புயல் என்னையும் தூக்கிட்டு போயிடுச்சின்னு நினைச்சுக்குங்க இனி போன் போட்டு வெறுப்பேத்தாதீங்கன்னு சொன்னேன். இப்பத்தான் புரியுது இன்னா காரணம்ன்னு.

    ReplyDelete
  2. தமிழில் இப்படியும் ஒரு செய்தித்தாள்!!!

    இது தமிழனின் தலைவிதி!!!

    ReplyDelete
  3. இங்கு வந்த புயலுக்கு எங்க வீட்டில் 27 மணிநேரம் கரண்ட் இல்லை.தெற்கு தமிழகம் எப்பவும் இப்படி தானெ மின்வெட்டால் தவிக்கிறது. ஒரு நாள் தானே என்று சமாளித்து கொண்டோம்.

    ReplyDelete
  4. முழுசா படிக்கலைங்க. அதுக்கு அவசியமும் இல்லை.
    நான் சொல்ல வந்தது...
    "அதில் என்ன சந்தேகம்?"

    ReplyDelete
  5. இந்த இம்சைக்குலாம்தான் இப்போலாம் நான் பேப்பரே படிக்குறதில்லை

    ReplyDelete
  6. சாண்டி புயல் போல் ஒரு வேளை நீலம் புயல் தமிழகத்தை புரட்டிப்போட்டிருந்தால், இவர்கள் இப்படித்தான் செய்தி வெளியிட்டிருப்பார்கள்.....
    இயற்கையின் சீற்றத்திற்கு முன் யாரால் என்ன செய்ய முடியும். தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ள அமெரிக்காவையே சாண்டி புயல் புரட்டி போட்டுவிட்டது. நாம் எம்மாத்திரம்? இயற்கைக்கு முண் நம் அரசு என்ன செய்யமுடியும். இதற்காக ஜெயலலிதா அரசை குறை கூறுவது மடத்தனம் என்ற தொணியில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்த பொய்யின் பறை கல்.

    ReplyDelete
  7. http://www.bbc.co.uk/news/world-us-canada-20177276

    ReplyDelete
  8. இந்த தினமலர்தான் காவிக் கும்பலை ஆதரித்தும், பாசிச ஜெயவாக்கு பல்லக்கு தூக்கியும், கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், மூவர் தூக்கை ஆதரித்தும், தீக்குளித்த செங்கொடி காதலுக்காக செத்தார் என்றும் இன்னும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அவதூறு செய்திருக்கிறது. அவையும் இந்த செக்ஸ் மேட்டரும் வேறு வேறு அல்ல. இதுதான் தினமலர். இப்படித்தான் தினமலர். THANKS: VINAVU.COM

    ReplyDelete
  9. ஏங்க...?அமெரிக்கா ஒங்க புகுந்தவீடா..??இல்ல ஒங்க பொண்ணூ புள்ள அங்க இருக்குதா...?என்னமோ ஒங்க சொந்த வீட்டபத்தி எழுதுனமாதிரி இப்பிடி அழுவுறீங்க.?விடுங்க சார் போயி வேலைய பாருங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.