உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, October 30, 2012

விஜயகாந்தை வைத்து பகடையாடும் ஜெயலலிதாவும் கலைஞரும்


விஜயகாந்தை வைத்து பகடையாடும் ஜெயலலிதாவும் கலைஞரும்

வரும் நாடாளுமன்ற தேர்தலை வைத்து தமிழக கட்சிகள் புதிய விளையாட்டை தொடங்கியுள்ளன. இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர் கலைஞர். அவரது கட்சியும் தற்போதைய எதிர்கட்சியும் கைகோத்து செயல்பட்டால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அவரும் இப்போதைய எதிர்கட்சியினரும்   யோசிக்கத் தொடங்கி அதற்கான செயல்களை தம் குடும்பதினர் மூலம் செயல் படுத்த தொடங்கியுள்ளனர் .  கேபடனின் மைத்துனருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடித்துவிட்டதாகவே செய்திகள் கூறுகின்றன.. இதன் காரணமாக இரு வீட்டுப் பெண்மணிகளும் ஏதாவது கோயிலில் சந்தித்து விடுவதாகவும் நட்பு வரும் முன்னே, தேர்தல் கூட்டு வரும் பின்னே என்று பேசிக் கொள்வதாக தகவல்கள் கசிகின்றன...

இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் எனக்கே தெரியும் அளவிற்கு வந்த பின் நம் தமிழகத்தை ஆளும் முதலமைச்சருக்கு தெரியாமலா போகும். இந்த ஆட்டத்தில் தானைத் தலைவரும் தளபதியும் கேப்டனும் இறங்கிய பின்னரும் புரட்சி தலைவி இறங்க வில்லை என்றால் நன்றாகவா இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகி இல்லை என்றால் படம் நன்றாக இருக்காது. அதனால் தான் என்னவோ புரட்சி தலைவியும் இந்த ஆட்டத்தில் களம் இறங்கியுள்ளார். கேப்டன் கட்சியை சேர்த்தால் நம்ம கட்சிக்கும் பலம் வந்துவிடும் என்பது  கலைஞரின் பிளான். ஆனால் அப்படி ஒரு கட்சி இருந்தால்தானே அவருக்கு பலம் அப்படி ஒரு கட்சியில்லாமல் ஆக்கிவிட்டால் நமக்கு மிக எளிது என்பது புரட்சிதலைவின் பிளான் அதன் விளைவாகதான் கேப்டன் கட்சியின் எம் எல் ஏக்கள் அவரை வந்து சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் தம்மை மிக புத்திசாலியாக கருதிகொண்டு பெருமை பட்டுக் கொள்கிறார் ஆனால் அவரை இரண்டு கட்சிகளும் பகடைகாயாகவே கருதி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பாவம் கேப்டன்...


//கேப்டன் நாடகத்தை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். //
நாடகத்தை ஆரம்பித்தது கலைஞர் அதை தொடர்ந்து நடத்தி செல்பவர் புரட்சிதலைவி...இதுக்கு இடையில் என்ன  வடிவேல் மாதிரி சவுடால் வேண்டியிருக்கிறது கேப்டன் அவர்களே


டிஸ்கி: கேப்டன் எப்போதுமே பணப் பெட்டியை வாங்கி வைத்துகொண்டுதான் தன் கட்சியை அடகு வைப்பார். ஆனால் அவர் கட்சியின் 2 எம் எல் ஏக்கள்  அவரிடம்  கேட்காமலேயே விலை போய்விட்டார்கள் என்பதுதான் இப்போது அவரின் ஆத்திரம்.

 

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

10 comments :

 1. \\இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் எனக்கே தெரியும் அளவிற்கு வந்த பின் நம் தமிழகத்தை ஆளும் முதலமைச்சருக்கு தெரியாமலா போகும்.\\ LOL.


  \\ஒரு படத்தில் எத்தனை கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகி இல்லை என்றால் படம் நன்றாக இருக்காது.\\ கொஞ்சம் இருங்க கற்பனை பண்ணி பார்க்கிறேன். HERO....HEROINE ........ உவ்வே............


  \\ஆனால் அப்படி ஒரு கட்சி இருந்தால்தானே அவருக்கு பலம் அப்படி ஒரு கட்சியில்லாமல் ஆக்கிவிட்டால் நமக்கு மிக எளிது என்பது புரட்சிதலைவின் பிளான் அதன் விளைவாகதான் கேப்டன் கட்சியின் எம் எல் ஏக்கள் அவரை வந்து சந்தித்தது.\\ நாலு MLA போனால் நாலு ஒட்டு மட்டும் தான் குறையும். புரட்சிதலைவியை ரொம்ப சீப்பா எடை போட்டுட்டீங்க............

  \\இந்த ஆட்டத்தில் கேப்டன் தம்மை மிக புத்திசாலியாக கருதிகொண்டு பெருமை பட்டுக் கொள்கிறார்.\\ மாநிலத்தை வழி நடத்த சுத்தமா லாயக்கில்லாத மனுஷன்.

  \\ஆனால் அவரை இரண்டு கட்சிகளும் பகடைகாயாகவே கருதி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.\\ தனித்து நின்னா ஒரு MLA சீட்டு வந்தாலே பெரிசு. MP சீட்டு சுத்தம், வேற வழியே கிடையாது, இவங்க ரெண்டு பேத்துல யாராவது ஒருத்தர்கிட்ட போயி என்னை உருட்டுங்கன்னு இவர் விழ வேண்டித்தான் இருக்கும்.

  இத்தனை புயலிலும் பதிவு போடுறீங்களே, உங்க கடமை உணர்ச்சிக்கு அந்த வானமே எல்லை......!!

  ReplyDelete
  Replies
  1. ///இத்தனை புயலிலும் பதிவு போடுறீங்களே, உங்க கடமை உணர்ச்சிக்கு அந்த வானமே எல்லை......////

   புயலுக்கு அஞ்சாதவன் இந்த மதுரைத்த்மிழன். எல்லா இடத்திலேயும் பவர் கட் எங்க ஏரியாவில் மட்டும் பவர்கட் இல்லை . ஆனால் எங்கேயும் போக முடியாத சூழ்நிலை காரணம் அநேக ரோடுகள் மூடப்பட்டுள்ளன. குழந்தை வீட்டில் டிவியை பார்க்கிறாள் மனைவி வீட்டில் இருந்தவாறே ஆபிஸ் வேலை செய்கிறாள் நானோ என்ன செய்வது என்று தெரியாமல் அவரகளுக்கு தேவையானதை செய்து கொண்டு பதிவுகளையும் தேர்த்தி கொண்டு இருக்கிறேன். எனது நண்பர்கள் பலர் வீட்டில் பவர் இல்லை ஆனால் அவர்களால் எங்களது வீட்டிற்கு வர முடியாத நிலமை

   Delete
 2. anuthba vottukal captain gets forth comming elections!!!!!!

  ReplyDelete
 3. அரசியலில் இதெல்லாம் சகசம்தான்

  ReplyDelete
 4. எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 5. இத்தனை புயலிலும் பதிவு போடுறீங்களே, உங்க கடமை உணர்ச்சிக்கு அந்த வானமே எல்லை......!!

  சிரித்துவிட்டேன்.

  ReplyDelete
 6. ஹிஹிஹி என்ன பண்ண போறாரோ கேப்டன் எனது தளத்தில் http://chakkarakatti.blogspot.in/2012/10/blog-post_30.html

  ReplyDelete
 7. ஹிஹிஹி என்ன பண்ண போறாரோ கேப்டன் எனது தளத்தில்
  http://chakkarakatti.blogspot.in/2012/10/blog-post_30.html

  ReplyDelete
 8. எல்லாத்துக்கும் காரணம் ஈகோதாண்ணே..

  ReplyDelete
 9. தலைப்பு மகாபாரதத்தை நினைவு படுத்துகிறது.கேப்டன் திரௌபதிக்கு ஒரு கிருஷ்ணன் கிடைப்பாரா? அதற்கு முழு சரணாகதி அடையவேண்டும்.

  பகடை உருட்ட நல்ல சகுனி அம்மாவுக்க?அய்யாவுக்கா? யோசியும்.நகைச்சுவை விருந்துபடைக்க .வெளியில் வேலை இல்லை.உள்ளிருப்பு வேலை இடு கை.
  --ananthako.blogspot.com.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog