உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 18, 2012

அமெரிக்க வக்கிலுக்கு ஆப்பூ வைத்த தமிழ் டாக்டர்


அமெரிக்க வக்கிலுக்கு  ஆப்பூ வைத்த தமிழ் டாக்டர்


அமெரிக்காவுக்கு வந்து டாக்டர் படிப்பு முடித்த நம் தமிழர் அங்கயே ஒரு க்ளினிக் ஆரம்பித்தார். அதற்கு கூட்டம் கூட்ட கிழ்கண்டாவாறு விளம்பரம் தந்தார். எங்கள் க்ளினிக்கில் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துவோம் அப்படி இல்லையென்றால் உங்கள் பணம் முழுவதும் திருப்பி தரப்படும் என அறிவித்தார்.


அமெரிக்காவில் நாம் சொன்னபடி செய்யவில்லையென்றால் கோர்ட்டில் போய் கேஸ் போட்டு பெரும் பணம் கறந்துவிடுவார்கள்..இந்த மாதிரி விஷங்களுக்கென்றே சில வக்கில்கள் எப்போதும் காத்து கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருத்தர் இந்த க்ளினிக்கு வந்து டாக்டர டாக்டர் நான் எதை சாப்பிட்டாலும் அதன் சுவையை உணரமுடியவில்லை நீங்கள் தான் இந்த வியாதியை குணப்படுத்த வேண்டும் என்றார்.

நம் தமிழ் டாக்டர் அவரை சிறிது பரிசோதித்துவிட்டு நர்ஸை கூப்பிட்டு  அந்த சக்தி லேகியம் என்ற மருந்தை எடுத்துவா என்று கூறினார். அதன் பிறகு அந்த பேஷண்டின் வாயை திறந்து அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர் உடனே ஓஓஓஓ...இது ஷிட் (SHIT) என்றார்

உடனே டாக்டர் சார் நீங்கள் அருந்தியது ஷிட் (SHIT) தான் அதன் சுவையையும் உங்களால் உணரமுடிகிறது. அதனால் உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை முடிந்தால் உங்கள் மனைவி சமைக்கும் உணவை சாப்பிடாமல் வேறு உணவை சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி இந்த சிகிச்சைக்காக ஆயிரம் டாலரை வசூலித்துவிட்டு அந்த அமெரிக்கனை அனுப்பினார்.


இந்த தமிழ் டாக்டர் நம்மளை மொட்டையடித்து விட்டான் இருக்கட்டும்  நாம வேற ஐடியாவோடு வந்து அவனை மொட்டை அடிக்கவில்லை என்றால் நாம் அமெரிக்கன் என்று சொல்வதற்கே இழுக்கு என்று நினைத்தான்.


அடுத்த சில நாட்கள் கழித்து தனது ஹேர்ஸ்டைலில் சில மாறுதல்களை செய்துவிட்டு நம் தமிழ் டாக்டரின் க்ளினிக்கு மீண்டும் நணபருடன் வந்தார். இப்போது அவர் நண்பர் சொன்னார் சார் இவருக்கு ஞாபக சக்தி குறைந்துவிட்டது அதை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் அதற்க்காக தான் இன்ங்கு வந்திருப்பதாக கூறினார். அந்த நோயாளியை பரிசோதிக்கும் போது இவர் கடந்த வாரம் வந்த பேஷ்ண்ட் என்பதை புரிந்து கொண்டார். இவர்கள் ஏதோ சூழ்ச்சியுடந்தான் வந்திருக்க வேண்டுமெனறு நினைத்து இந்த தடவை இவர்களுக்கு நல்லபாடம் கற்று கொடுக்க வேண்டுமென்று நினைத்தாவாரே  நர்ஸை கூப்பிட்டு அந்த சக்தி லேகியம் என்ற மருந்தை எடுத்துவா என்று கூறினார்


உடனே அந்த பேஷண்ட் அந்த ஷிட் மருந்தா எனக்கு வேண்டவே வேண்டாம் என்றார்

உடனே நம்ம டாக்டர் வாவ்  கடந்த வாரம் நான் உனக்கு தந்த இந்த மருந்து ஞாபகம் இருக்கிறது அதனால் உனது ஞாபக சக்தியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தா  1000 டாலருக்கான பில் இதை கவுண்டரில் செலுத்திவிட்டு போ என்று சொன்னார்


அந்த அமெரிக்க வக்கில் ....ஷிட்  என்றவாறே  பணத்தை கட்டிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றார் அதன் பின் எந்த வித தொந்தரவு இல்லாமல் அந்த டாக்டர் தன் தொழிலை தொடர்ந்தார்அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

8 comments :

 1. அது என்ன சக்தி லேகியம் ?

  ReplyDelete
 2. வக்கீல் தடுக்கில் நுழைந்தால் கோலத்தில் பாய்ந்த கில்லாடி டாக்டர். அருமையான கதையப்பா...

  ReplyDelete
 3. '10/15/12
  நாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.
  ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!


  ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.  அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
  சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!


  சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..  அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
  மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு..


  சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
  திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
  ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!'

  நீங்க எழுதின கதை மேலே இருக்கிற ஜோக்கின் ரீமேக் தானே.

  ReplyDelete
  Replies
  1. நான் ஆங்கிலத்தில் படித்த ஜோக்கைதான் நான் என் வழியில் தந்திருக்கிறேன் நான் செய்தது அதையேதான் மேலே கதை சொன்னவரும் செய்து இருப்பார் என நினைக்கிறேன்...

   Delete
 4. //நீங்க எழுதின கதை மேலே இருக்கிற ஜோக்கின் ரீமேக் தானே.//
  எனக்கும் இதே கேள்வியே வந்தது.
  படந்தான் றீமேக் என இருந்தேன். கதையுமா?

  ReplyDelete
  Replies
  1. நான் ஆங்கிலத்தில் படித்த ஜோக்கைதான் நான் என் வழியில் தந்திருக்கிறேன் நண்பரே அவ்வளவுதாங்க நான் செய்தது அதையேதான் மேலே கதை சொன்னவரும் செய்து இருப்பார் என நினைக்கிறேன்...

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog