உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 1, 2012

காணாமல் போன பாட்டி தாத்தா சொன்னகதைகளும் அதனால் சிரழியும் புதிய சமுதாயமும்

காணாமல் போன பாட்டி தாத்தா சொன்னகதைகளும் அதனால் சிரழியும் புதிய சமுதாயமும்


பாட்டி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்கள் நமக்கு சொன்ன ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு. என்ற சொல்லத் தொடங்கும் கதைகள் தாம். அந்த கதைகள் நம் மனதுக்குள் கற்பனையை கட்டவிழ்த்துவிடும் அப்படிபட்ட கதைகளை கேட்பவர் மட்டும் அல்ல சொல்பவர்களுக்கும் ஒரு விதமான சந்தோஷத்தை தரும். இந்த மாதிரியான சந்தோஷத்தை சொல்லி புரிய வைக்க முடியாது அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.


இந்த காலத்தில் இப்படிபட்ட  கதை சொல்லும் பழக்கம் டிவிகள் வீட்டுக்குள் வந்ததும் மெதுவாக  மறைந்து வருகிறது. பாட்டி சொன்ன கதைகள் குழந்தைகளிடம் புதியபுதிய  சிந்தனைகளை தூண்டுவது மட்டுமல்லாமல்  நீதி போதனைகளை  உணர்த்தியும் ,தன்னம்பிக்கையை ஏற்படுத்தியும் திறமையை வளர்த்தும் வாழ்வில் வரும் தடைகளை தகர்த்து எறிந்தும்  வெற்றிக்கான கதவை தட்டும் வகையில் இருந்தது. அப்படிபட்ட  நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய  தலைமுறை கேட்க முடியாமல் இந்த டிவிக்கள் சினிமாக்கள் மற்றும் சமுக இணைய தளங்கள் அந்த இடத்தை எடுத்து கொண்டு வருகின்றன .

சந்தையில் தரம் பிரித்து விற்கும் பொருட்களைப் போன்று இன்றைய கல்வி மாறிவிட்டது. . இன்று தரமான கல்வி என்ற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சைப் பதம் பார்த்து, வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது இந்தகால கல்வி முறை. அதுமட்டுமல்லாமல் கல்வி நிலையங்களில்  ஆங்கில மோகமும், எப்படியாவது முதல் ஐந்து ரேங்குக்குள் வந்து விட  வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அதிகரித்து வருகிறதே தவிர, பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நீதிகான முயற்சிகள் அறவே போதிக்கபடவில்லை இதன் காரணமாக மாணவர்கள் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக  உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் .  மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பலவித மன உளைச்சலுக்கு ஆளாகி   தவறிழைக்கவும் செய்கிறார்கள்

அதற்கு உதாரணமாக வகுப்புத் தோழியை பலாத்காரம் செய்த மாணவர்கள், வகுப்பு ஆசிரியரை கொன்ற மாணவன், . மாணவர்கள் ஆசிரியர்கள் தகாத உறவு  என ஒழுக்கத்தை தொடர்புபடுத்தி பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன .இப்படிபட்ட நிகழ்வுகள் மூலம் சமுதாயம் இழி நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்குப் மீடியாக்கள், சோசியல் இணையதளங்கள், வெளிநாட்டு கலாச்சார தாக்குதல் என்று பல காரணங்களை சொன்னாலும் நல்ல  நூல்களைப் படிப்பது  ஒடி  விளையாடுவது தந்தையிடம் இருந்தும் ஆசிரியர்களிடம் இருந்து பல  பயிற்சிகளை பெறும் போதும்  பல நிகழ்வுகளை செய்யும் போது நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித் தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதுதன் விளைவுதான் இந்த தகாத செயல்கள் நடைபெறுவதற்கு மிக பெரிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முன்பு  பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு  வகுப்புகள் நடத்தப்பட்டன. அங்கு சொல்லப்பட்ட  பல கதைகள்... நேர்மை, உழைப்பு, தியாகம், ஒற்றுமை பேராசை,  விட்டுக்கொடுக்கும் தன்மை என்று  பல வாழ்வியியல் போதனைகளை கற்பித்து வ்வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பாட்டிகளும் தினம் தினம் பல நீதிக்தைகளையும் உடன் வாழ்ந்து வந்த தாத்தாக்கள் வாழ்வின் அனுபவத்தையும் கதைகளாக சொல்லி குழந்தைகளை  வளர்த்து வந்தனர். ஆனால்  இன்றைக்கோ, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்பதே இல்லை என்ற நிலையும் வீடுகளிலும்  கதைகள் சொல்ல பாட்டிமார்கள் தாத்தாமரகள் இல்லாமல் அவர்கள் முதியோர் இல்லங்களுக்கு சென்றுவிட்டாதாலும் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் தோன்றி இருக்கிறது .அந்த இடத்தை நிரப்ப டிவி மற்றும் சோஷியல் தளங்கள் நெட் மூலம் வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து இந்த இளைய சமுதாயத்தை கெடுத்து வருகின்றன. இன்றைய நாகரிக உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து சிரழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களால் மிகுந்த பயன் இருந்து வந்தது. ஆனால் இன்று அவை மனிதர்களின் பண்புகளைப் பாழடையச் செய்து வருகின்றன.இதில் நல்ல மாற்றங்கள் ஏற்பாடாவிட்டில் இந்த சமுதாயத்தில் ஒழுக்க குறைவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு கேன்சரைப் போல அழிக்க முடியாத நோயாக மாறிவிடும் என்பதில் யாருக்கும் ஒரு துளி சந்தேகம் இல்லை.அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
(நான்  படித்த ஒரு படைப்பின் விளைவாக என் மனதில் எழுந்தவைதான் இந்த பதிவு)

திருக்குறள் முனுசாமி வழங்கும் திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு (வானதி பதிப்பகம் ) டவுன் லோடு செய்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்  
5 comments :

 1. சமுகத்துக்கு தேவையான விழிப்புணர்வு பதிவு...அருமை

  ReplyDelete
 2. ரொம்ப நல்ல சிந்தனை. நியூக்ளியர் குடும்பமா மாறினதுக்கு நாம குடுக்கும் விலைதான் இது.

  ReplyDelete
 3. இளைய சமுதாயம் நல்ல படியாக வாழ நல்ல கருத்துக்களை சொன்னீர்கள்.

  பிள்ளைகள் நல்ல ஒழுக்கப் பழக்கத்துடன் வளர அந்தக் காலம் பள்ளிக்ளில் நீதிபோதனை வகுப்பு இருந்தது, இப்போது இல்லை அதை மறுபடியும் கட்டாயம் ஆக்கலாம்.

  பாட்டிகளிடம் கற்றுக் கொண்ட நீதிகதைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தரலாம்.
  முதியோர் இல்லத்தில் இல்லையென்றாலும் பெற்றோர்கள் தனியாகத்தான் வாழ வேண்டி உள்ளது பிள்ளைகள் வெளி நாட்டில் வேலை நிமித்தம் சென்ற பிறகு பெற்றோர்கள் தனியாகத் தான் இருக்கிறார்கள். அது தப்பு என்று சொல்ல முடியாது காலத்தின் கட்டாயமாக உள்ளது, விஞ்ஞான் வளர்ச்சியை பயன் படுத்தி உறவுகளை பலப் படித்துக் கொள்கிறோம். போன், இணையம் மூலம் பேசியும், நேரில் பார்ப்பது பார்த்தும் வருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வந்து போகிறார்கள். அப்போது பேரக் குழந்தைகளுக்கு நல்லவிஷ்யங்களை உறவுகளை மதிக்க கற்றுக் கொடுக்கிறோம். வெளி நாடுகளில் நண்பர்களை உறவுகளாய் குழந்தைகள் நினைக்க பழக கற்றுக் கொடுக்க வேண்டும். இணயம், தொலைகாட்சியில் வரும் நல்ல விஷ்யங்களை பிள்ளைகளுக்கு பார்க்க க்ற்றுக் கொடுக்கலாம். இது தான் நாம் அடுத்ததலைமுறையை நல்லபடியாக வழி நடத்தி செல்லமுடிந்த வழிகள்.
  முதலில் ஒவ்வொருவரும் நம் வீட்டு குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தால் பிறகு சமுதாயம் நலமாய் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
  பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாய் பேச நேரம் ஒதுக்க வேண்டும். எல்லாம் தானாக சரியாகி விடும்.

  ReplyDelete
 4. பதிவு...அருமை

  http://sankar-information-security.blogspot.com/

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog