Sunday, September 9, 2012





மனைவியை அடக்குவது எப்படி?

எனக்கும் என்   மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நீண்ட நேரமாக நடந்தது. அது உச்ச கட்ட நிலையை அடைந்த போது என் மனைவி தன் கையில் இருந்த இறுதி அஸ்திரத்தை எடுத்துவிட்டு சொன்னாள். இந்தா பாருங்க இந்த வாக்குவதத்தில் நீங்க வெல்ல வேண்டுமா அல்லது வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இதில்  இரண்டில் ஒன்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள்

இந்த மதுரைத்தமிழன் என்ன முடிவு எடுத்திருப்பான் என்பது உங்களுக்கு சொல்லித்தான் தெரியுமா என்ன? ( என் வாழ்க்கை இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஒரு தோல்வியில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பது என் மனைவி எனக்கு கற்று தந்த பாடம் மக்காஸ்)


எப்படியெல்லாம் நம்மை பயமுறுத்துகிறார்கள் இந்த பெண்கள்


என் மனைவி என்னிடம்  "உங்களுக்கு இரவு சாப்பாடு வேண்டுமா என்று கேட்டாள்?"
அப்பாவியான நான் என் மனைவியிடம் எனக்கு ஏதாவது சாய்ஸ் உண்டா என்று கேட்டேன்.
அதற்கு என் மனைவி  சாப்பாடு வேண்டுமா இல்லையா என்பதுதான் நான் உங்களுக்கு தரும் சாய்ஸ் என்று சொன்னாள்


இந்த மதுரைத்தமிழன் என்ன முடிவு எடுத்திருப்பான் என்பது உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

எப்படியெல்லாம் நம்மை பயமுறுத்துகிறார்கள் இந்த பெண்கள்.


வார இறுதியில் என் நண்பரின் வீட்டிற்கு சென்றேன் என் நண்பரின் மனைவி என்னிடம் சொன்னார் அவரது கணவர் தூக்கத்தில் பேசிக் கொண்டே இருக்கிறார் என்று குறை சொன்னார் அதற்கு நான் அவரிடம் அதை நிப்பாட்ட என்னிடம் ஒரு ஐடியா இருக்கு என்று சொன்னேன்
அவரும் ஆர்வத்துடன் அது என்ன என்று கேட்டார்
நான் சொன்னேன் பகல் நேரத்தில் அவருக்கு பேசுவதற்கு கொஞ்சமாவது இடம் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டேன்


புத்தக கடையில் ஒரு ஆண்  அங்கு வேலை பார்க்கும் சேல்ஸ் பெண்ணிடம் மேடம் மனைவியை அடக்குவது எப்படி? என்ற புத்தகம் எங்கே இருக்கிறது என்று கேட்டார்
அதற்கு அந்த பெண் நீங்கள் கேட்ட புத்தகம் நகைச்சுவை பிரிவில் இருக்கும் என்று சொன்னார்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்




13 comments:

  1. நகைச்சுவை என்றாலும் சீரியஸான உண்மை தான். பல ஆண்டுகள் பெண்களை அடக்கியமைக்காக ஆண்களை அவர்கள் பழி வாங்குகின்றார்களோ .. ஹிஹி !!!

    கவுண்டமணி ஜோக் ஒன்றில் உலகின் எந்த பெண்டாட்டி வாயையும் எந்த மந்திரத்தாலும் கட்ட முடியாது என்பாரே. அதை நினைத்து சிரித்துக் கொள்ள வேண்டியது தான் !!!

    ReplyDelete
  2. நானும் உங்கள் கட்சிதான்
    இல்லையென்றால் இத்தனை ஜாலியாக எழுத முடியுமா
    ஒருவரிடம் தோற்று நூறு பேரை
    ஜெயிப்பவன்தானே புத்திசாலி
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

    ReplyDelete
  4. நல்லதுங்க...

    அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது..

    ReplyDelete
  5. நல்ல கதை ( உண்மையாகவே )

    ReplyDelete
  6. உங்க மனைவியோடு நான் பேசனுமே.

    ReplyDelete
  7. போட்டுத் தாக்குங்க... (உங்களை சொல்லலை...)

    ReplyDelete
  8. “மதுரைத்தமிழன்“ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ஐயா.

    ReplyDelete
  9. /இந்தா பாருங்க இந்த வாக்குவதத்தில் நீங்க வெல்ல வேண்டுமா அல்லது வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இதில் இரண்டில் ஒன்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள்//
    அடடா! இதுதான் உண்மையான நீயா நானா? இதுல நான் ஏது எப்பவுமே நீதான்.?
    ஒரு தமிழனோட பெருமைய நிலை நாட்டிட்டீங்க

    ReplyDelete
  10. இவ்ளோ பட்டும் அடங்க மாட்டீங்க நீங்க.

    ReplyDelete
  11. உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  12. செம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கும் போலிருக்கே!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.