Thursday, September 6, 2012


குடும்ப தலைவியை வேலைக்காரியாக ஆக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தால்?(நகைச்சுவை)

நமது இந்திய குடும்பங்களில் மனைவி என்பவள்தான் அந்த குடும்பத்தின் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறாள்.அவல் வேலைக்கு சென்று வரவில்லையானலும் அவள்தான் குடும்பத்தை நிர்வாகித்து வந்தாள். அதே நேரத்தில் அந்த குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பொருளாதார வசதியை செய்து தரவேண்டியது ஆண்களின் கடமையாக இருந்து வருகிறது சில குடும்பங்களில் மட்டும் ஆண்கள் சம்பாதிப்பதை அப்படியே பெண்களிடம் கொடுப்பதில்லையே தவிர வீட்டு செலவிற்கு தேவையானதை மட்டும் கொடுத்து வருகிறார்கள் சில குடும்பங்களில் சில ஆண்கள் சம்பாத்திப்பதில் பாதியை குடி சினிமா சூதாட்டம் போன்றவற்றிற்கு  செலவழித்து குடும்பத்தை கஷ்டத்திற்கு உட்படுத்துகிறார்கள் அதே சமயத்தில் கணவண் தான் சம்பாதிப்பதை அப்படியே மனைவியிடம் கொடுப்பதும் நடக்கிறது அப்படி நடக்கும் சில வீடுகளில் சில பெண்கள் பக்கத்துவிட்டை பார்த்து பொறாமை கொண்டு கண்டதை ஆடம்பரமாக வாங்கி போட்டு காசை கரியாக்குபவர்களும் உள்ளனர் ஆனால் சில குடும்பங்களில் இருவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்வில் முன்னேறுகின்றனர்.

இப்படி இருக்கும் ஒரு சமுகத்தில் பெண்களுக்கு உதவுவதாக நினைத்து குடும்பங்களில் குழப்பம் விளைவிக்க அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அந்த சட்டத்தின்படி  கணவன்மார்கள், தங்களது சம்பளத்தில் 10 முதல் 20 சதவீத பணத்தை, மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கை துவக்கி, அதில் போட்டு வர வேண்டும் என்பதுதான்

இது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் கூறலாம்.

இந்த செய்தியை படித்த பின்னால் என் மனதில் தோன்றியதை இங்கே நகைச்சுவையாக கூறி உள்ளளேன் படித்து ரசிக்கவும்

டேய் ராமு அந்த ஆளை சாப்பிட வரச் சொல்லுடா
அம்மா அப்பாவை மரியாதையா கூப்பிடும்மா. அவர் உன்வீட்டு வேலைக்காரர் இல்லை உனக்கு பாஸ் அம்மா. அவர் காதுலகீதுலா விழுந்தா அவ்வளவுதான்


என்னங்க எங்க அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் ஊர்ல இருந்து நாளைக்கு நம்ம வீட்டுக்கு வராங்க
இங்க பாரு வேலை செய்யுற இடத்தில கெஸ்ட்டுக்கு எல்லாம் அனுமதிகிடையாது.


என்னங்க அரசாங்கம் 20% சம்பளம் தர சொல்லி இருக்குது ஆனா நீங்க 3% சதவிகிதம்தான் தரீங்க?
இந்த பாரு நீ தங்கி இருக்கிற வீடு ஃபுல் ஃபர்னிசிங்க ஹவுஸ் அதற்கு 5 சதவிகிதமும் சாப்பாட்டுக்கு 3 சதவிகிதமும் மின்சாரம் தண்ணி செலவுக்கு 2 சதவிகிதமும் உன் தங்கை கல்யாண செலவுக்காக நீ என்னிடம் இருந்து வாங்கிய லோனுக்கு 2 சதவிகிதம் நான் கூப்பிட்ட நேரத்துக்கு நீ பெட் ரும் வராதால் பெனால்டியாக 5 சவிகிதமும் கழித்து மீதி 3 சதவிகிதம்தான் உனக்கு வர வேண்டியது. நீ ரொம்ப பேசினா உன்னை சஸ்பெண்டு பண்ணி வேற பொண்ணை வேலைக்கு வச்சுக்குவேன்.


சார் உங்க மனைவி உங்க பாகெட்டுல இருந்து எடுத்த பணத்திற்கு கேசு எல்லாம் போட முடியாதுங்க.
சார் அந்த லேடி எங்கிட்ட 20 சதவிகிதம் சம்பளம் வாங்குற வேலைக்காரி சார் அதனால வேலைக்காரி பணம் திருடியாதாக கேஸ் பைல் பண்ணுங்க போலிஸ்

ஆபீஸில் இருந்து லேட்டாக வந்த கணவன் என்ன சமைச்சுட்டியா டேபிளில் சாப்பாடு எடுத்து வைடி
என்னங்க என் ஆபிஸ் டைம் 6 மணியோட முடிஞ்சுடுச்சுங்க அதுக்கு மேலே வேலை செய்யனும்னா ஒவர் டைம்தானுங்க
என்ன ரேட்டு கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஓகேவாங்க
போடி போ நான் நம்ம பையனை போட சொல்லுறேன்
என்னங்க சைல்டு லேபர் லான்னு ஒன்னு இருக்கு மறந்திடாதீங்க உங்களை பிடிக்காத யாரவது ரிப்போர்ட் பண்ணிடபோராங்க.

என்னடி நான் ஆபிஸுக்கு போக நேரமாச்சு இன்னும் ஒண்ணு கூட சமைக்கலை?
எனக்கு உடம்பு சரியில்லைங்க அதனால பையன் கிட்ட லீவ் லெட்டர் கொடுத்து அனுப்பிச்சுட்டேன் அது உங்க டேபிளில் இருப்பதாக சொன்னான் அதை நீங்க பார்க்காதது என் குத்தமில்லைங்க


அடியே இந்த வார இறுதியில் ஞாயிற்றுகிழமை என் நணபரின் குடும்பத்தார்கள் நம்ம வீட்டிற்கு வருகிறார்கள் சாப்பாடு சூப்பார இருக்கணும் அதற்கு என்ன தேவையோ அதை வாங்கி கொள்.

என்னங்க நீங்க சொன்னபடி சாமான்லாம் வாங்கிடலாம் ஆனா சமைக்க மட்டும் நீங்க வேற ஆளை ஏற்பாடு பண்ணிக்கணும்.
என்ண்டி அதுக்குதான் நான் உனக்கு 20% சம்பளம் தரேன்லா
என்னங்க நம்ம ஹோம்ஆபீஸ் சனி ஞாயிறு லீவு என்பதை மறந்துட்டீங்களா?


மணமகள் வேண்டும் என்பதற்கு பதிலாக  நல்லபடித்த அதிக சம்பளம் வாங்ககூடிய  எங்கள் மகனுடன் வாழ்க்கை பூரா உடன் இருந்து சமைக்க படுக்க குழ்ந்தை பெற மற்றும் அனைத்து வேலைகளை செய்ய மிகவும் படித்த சிவந்த, மெல்லிய அழகிய தோற்றமுடையய பெண்கள் தேவை ஆரம்ம சம்பளம் 30% அதன் பிறகு எனது மகனின் சந்தோசத்திற்கு ஏற்ப சதவிகிதம் ஏற்றப்படும். முந்தைய வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன பெண்களும் விண்ணப்பிக்கலாம்

மணமகன் வேண்டும் என்பதற்கு பதிலாக  நல்லபடித்த மிக சிவந்த நிறமுள்ள என் மகளுக்கு அதிக சம்பளம் தரக்கூடிய சைவம் மட்டும் சாப்பிடக்கூடிய வெளிநாட்டில்  பணியாற்றுபவராக இருக்கும் ஆண்மகன் தேவை 


புதுடில்லி : வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியுள்ளார்.
தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் திராத் கூறியதாவது: பெண்கள் முன்னேற்றத்திற்குரிய வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு மாதாந்திர சம்பளத்தை கணவன்மார்கள் வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் இம்மசோ‌தா தாக்கல் செய்யப்பட உள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட உள்ள சம்பளத்தை கூட அரசே நிர்ணயிக்கவும் உள்ளது.:

இம்மசோதா தயாராகும்பட்சத்தில், அடுத்த 6 மாதங்களுக்குள் பரர்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கணவன்மார்கள், தங்களது சம்பளத்தில் 10 முதல் 20 சதவீத பணத்தை, மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கை துவக்கி, அதில் போட்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments:

  1. படிக்க நகைச்சுவையாக இருந்தாலும் இதெல்லாம் தேவை இல்லாத ஒன்னுதான்

    ReplyDelete
  2. அப்படியே ஆண்களுக்கும் இப்படி பேங்கில் பணம் போடும் மசோதாவும் கொஞ்ச நாளில் வரும் “ இப்ப நிறைய ஹவுஸ் ஹஸ்பெண்ட் வர ஆரம்பிச்சாச்சு”

    ReplyDelete
  3. இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் நாம் அபீட்டு !

    ReplyDelete
  4. பெண்கள் சம்பாதிப்பதை
    ஆண்கள் பிடுங்காமல் இருந்தாலே
    பெண்கள் என்றோ முன்னேறி இருப்பார்கள்.

    வாய்ச் சொல்லால் அடிமை படுத்தியது போதாதென்று
    பணம் போட்டு அதை நிரந்தரமாக்கிறார்களா...?
    “உண்மைகள்“ ஐயா... பெண்களைத் தன்நாட்டில்
    அடிமைகளாக நினைக்கும் வரை இந்தியா
    எந்தக் காலத்திலும் வல்லரசு ஆக முடியாது.

    ReplyDelete
  5. நம்ம நாட்டுல கிட்டத்தட்ட இப்படி தான் நடந்துட்டு இருக்கு...........

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/it.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
  7. ஆணாதிக்கம் என்பது போய் இப்போது பெண்ணாதிக்கம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

    ReplyDelete
  8. முழுசா சம்பளப் பணத்தை மனைவி கிட்ட குடுக்கறவங்க இனிமே சந்தோஷமா இருக்கலாம். சட்டப்படி எவ்வளோ சொல்றாங்களோ அவ்ளோ குடுத்தாப் போதும்.
    மக்கள் கஷ்டத்தை மறந்து சிரிக்கட்டுமே அப்படின்னு காமெடி சட்டம் கொண்டுவராங்களோ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.