உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 17, 2012

அமெரிக்காவில் படிக்க ஆசையா? அப்ப இதை படியுங்க மக்காஸ்

அமெரிக்காவில் படிக்க ஆசையா? அப்ப இதை படியுங்க மக்காஸ்

அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்களுக்கான ஸ்டுடெண்ட்  F1 விசா பற்றிய தகவல்கள் ( F1 student visa .USA)அமெரிக்காவிற்கு வருவதற்க்கு பலவிதமான விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதில் அமெரிக்காவிற்கு வரும் மாணவர்களுக்காக வழங்கப்படும் ஸ்டுடெண்ட் விசா பற்றிய தகவல்களை இங்கு பார்ப்போம்.

அமெரிக்காவிற்கு படிக்க வர விரும்பும்  மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தெர்ந்தெடுத்து அதனை கற்றுதரும்  (SEVP certified. (Student and Exchange Visitor Program  )அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் விண்ணப்பங்கள் பெற்று தேவையான விபரங்களை பூர்த்தி செய்து முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசிலித்து நீங்கள் அந்த கல்லூரியில் படிக்க தகுதியானவர் என்று கருத்தினால் அவர்கள் அந்த கல்லூரியில் படிக்க அனுமதி கடிதம் தருவார்கள். அதன் பின் தான் நாம் அமெரிக்கா செல்வதற்கான விசாவை  அருகில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் அவர்கள் அதை பரிசிலீத்து அப்ருவல் தந்தால் மட்டுமே அமெரிக்கா வந்து படிக்க முடியும்.


படிப்பதற்காக வழங்கப்படும் விசா வகைகள்

F-1, or Student Visa : F-1 என்று அழைக்கபடும் ஸ்டுடெண்ட் விசா  அமெரிக்காவில் உள்ள அங்கிகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் படிப்பதற்காக இண்டர்நேஷன்ல் மாணவர்களுக்காக வழங்கப்படும் விசா ஆகும்

J-1, or Exchange Visitor Visa:  இந்த விசா கல்வி மற்றும் கல்சுரல் ஆக்கிடிவிட்டிற்காக வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா ஆகும்

M-1, or Student Visa : இது படிப்புசாரா வொகேஷனல் ப்ரோகிராம் கற்க வருபவர்களுக்கு வழங்கப்படுவது ஆகும்


இந்த ஸ்டுடெண்ட் விசாவில் வருபவர்கள் மற்றவர்கள் மாதிரி வேலை செய்ய அனுமதி இல்லை. ஆனால் முதல் வருடத்தில் கல்லூரி வளாகத்தில் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யது சம்பாதிக்கலாம் இதற்கு இமிகிரேஷன் அனுமதி தேவையில்லை. கல்லூரி வளாகத்தில்  லைப்ரேரி உதவியாளாரகவும் அங்குள்ள லேப்பில் உதவியாளராகவும் பார்க்கிங்க் லாட் உதவியாளாரகவும் பணி  செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதிரி வேலைகள் வேண்டுமானால் கல்லூரி ஆரம்பிக்கும் போதே வந்து அதற்கான வாய்ப்புகளை தேடிவிட வேண்டும் லேட்டாக வந்தால் அந்த மாதிரி வேலைகள் கிடைக்க வாய்ப்புக்கள் கிடைக்காது. இரண்டாவது செமஸ்டர் முடித்த பின் நாம் வெளியிடங்களில் இமிகிரேஷன் அனுமதி பெற்று இண்ட்டேர்ன்சிப்காக( Internship) வேலைசெய்யலாம்
( ஆனால் நீங்கள் படிக்கும் கல்லூரி இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருந்தால் இந்தியர்கள் நடத்தும் கடைகள் மற்றும்  ஹோட்டல்களில் சட்டத்திற்கு புறம்பாக  குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும் .


ஸ்டுடெண்ட் விசா கிடைக்க தேவையானவை :

SEVIS (SEVIS stands for : Student and Exchange Visitor Information System.) த்தில் இருந்து படிக்க அனுமதி அளிக்கும் கடிதம்.
ஆங்கிலம் நன்றாக படிக்க எழுத பேசும் திறமை.
படிப்பு ஆண்டுகாலம் முழுவதுதற்கும் தேவையான பண வசதி

இதையெல்லாம் எடுத்து அருகில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு  அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சென்று அங்குள்ள கவுன்சலிரின் மனதில் நீங்கள் படித்து முடித்தது இந்தியாவிற்கு திரும்பி வந்துவிடுவேன். அப்படி வந்துவிடுவதற்கான பல காரணங்களை எடுத்தது சொல்லி நீங்கள் கட்டாயம் வந்துவிடுவேன் என்பதை அவர் மனதில் பதிய வைத்தால்தான் உங்களுக்கு விசா பெற வாய்ப்புகள் கிடைக்கும்.( கட்டாயம் வந்துவிடுவதற்கான காரணங்கள் என்று கிழே உள்ள மாதிரி சொல்ல வேண்டாம் .ம் ரஜினி படம் ரீலீஸ் ஆகுது, சிநேகாவுக்கு குழந்தை பிறக்க போகுது.,படித்து வந்து ஜெயலிதா காலில் விழுந்தால் அமைச்சாராக வாய்ப்பு கிடைக்கும், எங்க ஊர் கோவிலில் என் தலைமையில்தான் கஞ்சி ஊத்துதல் என்றெல்லாம் சொல்லாதீர்கள்)


Documents required for US F1 (Student) visa ( தேவையான டாக்குமெண்ட்ஸ்)
1. ஃபார்ம் I-20A-B , இது Certificate of Eligibility for Nonimmigrant (F-1) Student Status-For Academic and Language Students
அல்லது  ஃபார்ம் (Form I-20M-N, Certificate of Eligibility for Nonimmigrant (M-1) Student Status for Vocational Students.


SEVIS generated Form, I-20, இந்த ஃபார்மை நீங்கள் படிக்க விரும்பும் கல்லூரி உங்களுக்கு வழங்கும். இதில் நீங்களும் அந்த கல்லூரி அதிகாரியும் கையெழுத்து இட்டு இருக்க வேண்டும்
மேலும் .  Form DS-160. (Online Nonimmigrant visa Electronic Application) யையும் பூர்த்தி செய்து இருக்க வேண்டும்
பாஸ்போர்ட் ஆறுமாதத்திற்கு குறையாமல் எக்ஸ்பயர் ஆகாமல் இருக்க வேண்டும்.
கலர் போட்டோ லைட் பேக்கிரவுண்டில் முகம் முழுவதும் தெரியும்படி தலையில் தொப்பி போன்றவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்

மேலும் ஒரிஜினல் l TOEFL scores and SAT, GRE, GMAT scores (as applicable). மற்றும் பள்ளி, கல்லூரியில் வாங்கிய அனைத்து மார்க்சீட் மற்றும் பட்டங்களையும் வைத்து இருக்க வேண்டும்.

கல்யாணம் ஆனவர்கள் படிக்க வந்தால் தங்களது துணை மற்றும் குழந்தைகளை அழைத்துவருவதாக இருந்தால் திருமண சர்டிபிகேட், பெர்த் சர்டிபிகேட் கல்யாண போட்டோக்கள் முதலியவற்றையும் எடுத்து அமெரிக்க தூதரக கவுன்சலரிடம் சப்மிட் செய்ய வேண்டும்


மேலும் SEVIS I-901 fee receipt டையும் இணைக்க வேண்டும்

கல்லூரியின் ரிஜிஸ்ரெஷன் தேதிக்கு 120 நாடகளுக்கு முன்பாகவே விசா வழங்கபடும். ஆனால் நீங்கள் ரிஜிஸ்ரெஷன் செய்யும் தினத்திற்கும் விசா அப்ளை செய்யும் நாட்ட்களுக்கும் அதிக இடைவெளி இருந்தால் தூதரக கவுன்சிலர் உங்கள் விசாவை ஹோல்டிங்கில் போட்டு வைத்து அதன் பின் இஷ்யூ பண்ணுவார். ஆனால் அப்படியெல்லாம் செய்யாதீர்கள் காரணம் எப்போது பொலீட்டிகல் எகானாமி மிக முக்கிய காரணமாக இருப்பதால் அதில் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்லாமல் விசா கிடைத்தது சீக்கிரம் கல்லூரியில் வந்து சேர்ந்துவிடுங்கள் அப்போதுதான் கல்லூரி வளாகதில் உள்ள வேலைகள் கிடைக்கும்.

உங்கள் படிப்பு ஆண்டுகாலம் 3 ஆண்டுகளாக இருந்து அவர்கள் 5 ஆணடுகாலத்திற்கான விசா கொடுத்தாலும் நீங்கள் படிப்பு முடிந்துவிட்டால் உடனடியாக உங்கள் நாட்டிற்கு சென்று விட வேண்டும். இங்கு இருந்து வேலை செய்ய அனுமதி இல்லை. ஆனால் நீங்கள் படிப்பு முடிந்ததும் உங்களது விசா ஸ்டேட்டசை மாற்றி வேலைக்கு முயற்சிக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் வாய்ப்புகள் கிடைக்க சான்ஸ் உண்டு.

இப்படி கிடைக்கும் விசா சக்ஸஸ் ரேட் யூரோப், ஆஸ்திரேலியா போன்ற நாட்டு மாணவர்களுக்கு 80% + சான்ஸ் உண்டு. ஆனால் இந்தியா சைனா மாணவர்களுக்கும் 50% விகிதத்திற்கும் குறைவே...


மேலும் அதிக அதிகாரப் பூர்வ விபரங்களுக்கு இந்த இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும் http://travel.state.gov/visa/temp/types/types_1268.html


அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு தேவையான பலவித தகவல்களான மேல்படிப்பிற்கான வாய்ப்புகள் ,ஸ்காலர்ஷிப், அட்மிஷன், டெஸ்ட் போன்ற உபயோகமான தகவல்களை எஜுகேஷன் யூ.எஸ். என்ற இந்த தளத்திற்கு சென்றுபாருங்கள்  http://educationusa.state.gov/

EducationUSA Launches "Your Five Steps to U.S.Study" கிழ்கண்ட தலைப்பில் உள்ளவை பிடிஃப் பைலாக இந்த தளத்தில் கிடைக்கின்றன. அதை பிரிண்ட் செய்து உங்கள் கல்லூரி மற்றும் பள்ளி லைப்ரரிகளில் தகவல் பலகையில் போடலாம். மாணவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

    Research Your Options
    Complete Your Application
    Finance Your Studies
    Apply for Your Student Visa
    Prepare for Your Departure


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
( எனக்கு தெரிந்த தகவல்களை தமிழில் படிப்பபவர்களுக்கு கிடைக்க செய்யவே இந்த பதிவு )


 படிக்காதவர்கள் படிக்க :

நான் தேடும் வெளிச்சங்கள்! - வெளிச்சத்தை தேடி செல்லும் ஒரு பெண்பதிவாளரின் முயற்சி


தோழி ஜோஸபின் பாபா அவர்களின்
வலைத்தள முகவரி இவர் 'ஜோஸபின் கதைக்கிறேன்' http://josephinetalks.blogspot.com/2012/08/blog-post_22.html

பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/babajosephine

நல்ல எழுத்தை தேடினால் அவரைத் தொடருங்கள்..


வாழ்த்துக்கள்.அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog