உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 5, 2012

"சிவகாசியின் வெடிவிபத்து" தீபாவளிக்கு தமிழக அரசு ரிலீஸ் செய்த இலவசபடமா?"சிவகாசியின் வெடிவிபத்து" தீபாவளிக்கு தமிழக அரசு ரிலீஸ் செய்த  இலவசபடமா?

கொத்து கொத்தாய் சரவெடிகள் மட்டுமல்ல
மனித உயிர்களும் வெடிக்கின்றன

வெடிகள் வெடிப்பது பணம் உள்ள மனிதர்களின் கேளிக்கைக்காக
ஆனால் மனிதன் வெடியாக வெடித்தது முதலாளியின் சுயநலத்திற்காக

உயிர் வாழ ஆசைப்பட்டு வேலைக்கு சேர்ந்தவர்களின்
வாழ்க்கை அந்த வேலையாலே உயிர் போக காரணமாயிற்று

வெட்கம் இல்லாமல் ஆட்சி செய்யும் முதலைமைச்சர்கள்
மக்களுக்கு தொண்டு செய்வது என்பது
மக்கள் செத்த பிறகு அவர்களுக்கு வெகுமதி தரும் போது மட்டுமே


வருமுன் காக்க இந்த முதல்வர்களால் முடியாது காரணம்
அவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யவே
அவர்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது

வருமுன் காக்க அதிகாரிகளால் முடியாது ஆனால்
விபத்து நடந்த பின் தன் வேலையை காக்க
தொழிற்சாலையின் லைசன்ஸை ஒரு நாளைக்கு முன்னாலே
ரத்து செய்துவிட்டோம் என்ற அறிக்கை மட்டும்
சாவு செய்திகளுக்கு முன்பே ஊடகங்களுக்கு தரப்படும்.


தமிழக மக்களே நமக்கு உணர்ச்சியும் கிடையாது நமது உரிமைகள் என்ன வென்றும் நமக்கு தெரியாது. நமக்கு தெரிந்தெல்லாம் இந்த விபத்துக்கு காரணம் அங்கு வேலைபாத்த முட்டாள் ஜனங்களும் முட்டாள் அதிகாரிகளும் என்றும் அந்த தொழிற்சாலையின் முதலாளியும் அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு அந்த தொகுதிகளுக்கு செல்லாமல் மக்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களை தொகுதியில் வேலை செய்யவிடாமல் தன்னை கடவுளாக எண்ணி தன் காலில் விழுந்து எழுந்திரித்து தன்னை துதி செய்வது மட்டுமே முதலமைச்சர் பணி என்று நினைத்து ஆட்சி செய்யும் முதல்வர்களை அப்பாவிகள் என்று எண்ணிக் இந்த விபத்தை டிவியில் உச்சு கொட்டி பார்த்து விட்டு, வரும் தீபாவளிக்கு எந்த கடையில் பட்டாசு சீப்பாக கிடைக்கும் என்று விசாரித்து தீபாவளிக்கு ரெடியாகுவோம்.
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் அவர்களுடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

4 comments :

 1. தமிழக மக்களே நமக்கு உணர்ச்சியும் கிடையாது நமது உரிமைகள் என்ன வென்றும் நமக்கு தெரியாது.
  >>
  நம்மை போல படித்த ஆட்டு மந்த கூட்டம் இருக்கும் வரை படிக்காத பாமரன் செத்துதான் போகனும். படிச்சவன் எவன் ஓட்டு போட போறான்? ஒரு நாள் லீவு கிடைக்குதேன்னு ஹாயா உக்காந்து டிவி பார்த்து பொழுதை கழிக்குறான்.

  ReplyDelete
 2. இந்த தீபாவளியை கொண்டாட கூடாதுன்னு என் பையனே சொல்லிட்டான். அதனால் இனிவரும் தீபாவளிக்கு நாங்க பட்டாசு கொளுத்த மாட்டோம் சகோ

  ReplyDelete
 3. இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகாசிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த மக்களுக்கும் வழங்கப்படும் கையூட்டு பற்றி ஒரு கட்டுரை படித்தேன். இப்போது அதன் விளைவு வாண வேடிக்கையாக. ஒருவர் பேட்டியில் சொன்னார்.

  நீங்க பட்டாசு வாங்காமல் இருந்தால் நாங்க அரிசி வாங்கமுடியாது.

  எதார்த்த உண்மை.

  ReplyDelete
 4. எத்தனை அலட்சியம் மனித உயிர்கள்..?.. இதன் பின்னணி காரணத்தில் நாமும் , நம் அமைதியும் என நினைக்கையில் வெட்க வேண்டியிருக்கு.. :((
  "பட்டாசென்றால் வெடிக்கத்தான் செய்யும்
  ஏழை என்றால் பலியாகத்தான் செய்வான்.
  அரசு ஊழியர் என்றால் லஞ்சம் இருக்கும்
  அரசென்றால் நிவாரணம் /இலவசம் தரும்
  அடுத்த விபத்தும் "தடுக்கப்படாது" என கூற.
  தீயணைப்பு என்றால் மெதுவாத்தான் வரும்.
  சாலை என்றால் குண்டும் குழியும் ,
  மருத்துவமனையில் போதுமான சேவை இல்லாமை ,
  இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்..

  முதலாளி என்றால் லாபம் வேண்டாமா ?.
  சட்டத்தை வளைக்க பணம் வேண்டாமா?. பாவம்..
  இதையெல்லாம் ஜீரணிக்க முடியுமோ இல்லையோ

  தீபாவளி கூட நெருங்கிடுச்சி..
  பட்டாசெல்லாம் மொத்தமா சில்லரையாவா?.
  பட்டாசென்றால் வெடிக்கத்தானே?. ( செய்யும்?)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog