உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 26, 2012

பெண்கள் பட்டம் பெற மிக எளிய வழி

பெண்கள் பட்டம் பெற மிக எளிய வழி

பெண்கள் நன்றாக பேசினால்
"வாயாடி" என்ற பட்டமும்
எதிர்த்து பேசினால்
"அடங்காபிடாரி" என்ற பட்டமும்
மிகவும் அடங்கி இருந்தால்
"கல்லுளி" மங்கை பட்டமும்
அழுது கொண்டே இருந்தால்
'அழுமுஞ்சி' பட்டமும்
பல்லைகாட்டி கொண்டே இருந்தால்
"புன்னகை அரசி' பட்டமும்
மிக அமைதியாக இருந்தால்
"வாயில்லாபூச்சி' பட்டமும் கிடைக்கும்

இப்ப சொல்லுங்க?
பெண்கள் பட்டம் பெறுவது எளிதுதானே?

பெண்களே இதில் நீங்க பெற்ற பட்டம் எது  என்று கொஞ்சம் சொல்லிதான் போங்களேன்...
ஆண்களே நீங்களும் இதைப்படித்து இருந்தால் உங்கள் மனைவி,காதலி, அல்லது தோழி இதில் என்ன பட்டம் வாங்கி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தைரியம் இருந்தால் சொல்லி போங்கள்...


டிஸ்கி : இந்த பட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

23 comments :

 1. ஓ பட்டம் பெற இப்படியெல்லாம் வழியிருக்கிறதா..

  ReplyDelete
  Replies
  1. இந்த பட்டங்கள் எல்லாம் எளிய வழியில் பெறுபவை

   Delete
 2. பெரும்பாலான பெண்கள் கடைசிப்பட்டம் பெற்றவர்களாக
  இருப்பதால்தானே ஆண்களின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது
  சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் பதிவு.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது ரமணி சார்

   Delete
 3. பெண்களிடமிருந்து ஆண்கள் பெரும் பட்டங்கள் என்னென்ன?அந்தப் பட்டியல் ரொம்ப நீளமா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி பட்ட பட்டம் பெற்றவர்கள் நமக்கு வைக்கும் பட்டங்கள் நட்சத்திர எண்ணிக்கையை விட அதிகம்தான் நண்பா

   Delete
 4. ஆக மொத்தத்தில் பெண்கள் படித்து பட்டம் பெற வேண்டியது இல்லை...சும்மாவே பட்டம் கிடைக்கிறது...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
  Replies
  1. இது செலவில்லாத பட்டம்தான்

   Delete
 5. வூட்டுல நான் “வாயாடி" பட்டமும், பிளாக்குல ”ரொம்ப நல்லவ”ன்ற பட்டமும் ஏற்கனவே வாங்கிட்டேனே

  ReplyDelete
  Replies
  1. இருங்க இருங்க எனது தளத்தில் இருந்து கூடிய சீக்கிரம் மிக நல்ல பட்டமாக யோசிச்சு வைக்கிறேன்

   Delete
 6. இதழியல் பட்டம் வாங்க ஊருபட்ட பெயிண்டு அடிக்க வேணும் போலிருக்கே!!

  ReplyDelete
 7. நான் இந்த பக்கமே வரவில்லைங்க எதையும் பார்க்கவே இல்லைங்க.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பயந்தாங்க்கொள்ளி பட்டம்தான் தரணும்

   Delete
 8. ரொம்ப சரி ..இன்னும் நிறைய இருக்கு ..அதெல்லாம் எப்ப எழுதப் போறீங்க

  ReplyDelete
  Replies
  1. அப்படியா நீங்க இதைவிட அதிகம் பட்டம் பெற்று இருந்தால் அதை இங்கே வெளியிடலாமே

   Delete
 9. இப்படி நண்பர்கள் சொல்லி கேட்டதுண்டு, ஆனால் இப்படிதான் பட்டம் சூட்டிருப்பார்கள் என்பது புரிந்து.

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் கேட்டு உங்கள் பெண்தோழிகளுக்கு இப்படிபட்ட பட்டம் தந்தீர்கள் என்றால் உங்க வாழ்க்கை அரோகராதான்

   Delete
 10. ஆஹா என்ன அறிவு என்ன அறிவு !!!:......உங்களுக்கு தேசிய
  சுனாமிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கின்றோம் :))))))
  வாழ்த்துக்கள் மேலும் பட்டம் பெறும் இலகு வழிகள்
  ஆண்களுக்கு என தொடரட்டும் .(இப்ப எனக்கு என்ன
  பட்டம் குடுப்பாரு !...நான் நினைத்தது சரிதான் "இராட்சசி".... :)

  ReplyDelete
  Replies
  1. பதிவிடும்போது ஏதோ ஒரு பட்டத்தை மறந்துவிட்டேன் என்று நினைத்து கொண்டே பதிவிட்டேன் உங்கள் கருத்தின் மூலம் ஞாபகம்படுத்தியதற்கு நன்றி. அதனால் அந்த பட்டத்தை உங்களுக்கு முதல் முதலாக தருவதுதான் நியாம் என்று வலையுலக பெரியவர்கள் சொன்னதால் அதை உங்களுக்கே தருகிறேன்... இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே..ஹீ.ஹீ

   Delete
  2. அது என்ன பட்டமாக இருக்கும் !....சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை .
   முடிந்தால் என் தளத்தில் வந்து ஒருமுறை சொல்லி விட்டுப் போங்கள் .
   கட்டணம் கழிவு இல்லாமல் கொடுக்கப் படும் :)

   Delete
 11. அட இத்தனை நாளும் இந்தப் பள்ளிக் கூடத்தில்
  சேராமல் இருந்துள்ளேனே.இனி ஒழுங்கா பாடங்களை
  படிக்குறோம் சார் .:) 390

  ReplyDelete
  Replies
  1. பள்ளிக் கட்டணத்தை இன்னும் ஒரு வாரக்காலத்திற்குள் கட்டவில்லையென்றால் பள்ளியில் இருந்து நீக்கப்படுவீர்கள்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog