உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, September 21, 2012

புகழ் பெற்ற பதிவாளாராவது எப்படி?புகழ் பெற்ற பதிவாளாராவது எப்படி?


புகழ் பெற்ற பதிவாளாராக  இரண்டு வழிகள் உண்டு

முதலில் நாம் பதிவாளாராக ஆக வேண்டும்.

அதன்பின் நல்ல பதிவுகள் எழுதி என்னைப் போல புகழ் பெற வேண்டும்
(இதை படித்த நீங்கள் " நீ எல்லாம் புகழ் பெற்ற பதிவாளாரா என்று காரி துப்புவது எனக்கு தெரிகிறது மக்கா  நீங்க நல்லவே துப்பலாம் ஆனா பாத்தீங்களா நீங்கள் துப்பியது உங்கள் கம்பியுட்டரில்தானே ஹீ.ஹீ )

அல்லது  நமீதா மாதிரி புகழ் பெற்றவாராக இருக்க வேண்டும்

அதன்பின் ஏதாவது கிறுக்கி அதை பதிவாக இட வேண்டும்.

இந்த இரண்டில் எந்த வழியை பின்பற்றினாலும் இப்போது நீங்கள் புகழ் பெற்ற பதிவாளராக ஆகிவிடுவீர்கள்

 
எப்படி நம்ம ஐடியா? ஹீ..ஹீ.ஹீ


நீங்க புகழ் பெற்ற பதிவாளாரா அப்ப நீங்க உங்க கமெண்ட்ஸை பின்னுட்டத்தில் சொல்லிப் போங்க ஒகே...( மக்களே நீங்களே உங்களை புகழ் பெற்ற பதிவாளர் என்று சொல்லவில்லையானால் அப்ப வேற யாரு உங்களை சொல்லப் போறா? அதனால உங்க பெயரை பதிந்து விட்டு போங்க

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

14 comments :

 1. நிறையப் பேர் யாரைக் காறித் துப்புக்ரார்களோ அவர்தான் புகழ் பெற்ற பதிவாளரோ!

  ReplyDelete
 2. மதுரைக்காரங்க கோளாறா வேலை பார்க்கிறாங்க.

  ReplyDelete
 3. ஏதாவது டிப்ஸ் கிடைக்கும் என்று நினைத்தால்... ஏமாற்றி விட்டீர்களே சூப்பர்!!

  ReplyDelete
 4. ஏதாவது உருபடியா சொல்லுவிங்கன்னு நினைச்சா இப்படி ஏமாற்றி விட்டீர்களே....ஆனாலும் ஒன்று மட்டும் புரிகிறது....இப்படி எதையாவது எழுதினாலே படிப்பார்கள் என்று...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 5. நீங்க புகழ்பெற்ற பதிவாளர்தான் பிரதர்... நான்...? இல்லையில்லை... நான் பதிவரில்லை சாமீ...

  ReplyDelete
 6. உங்களை வலைச்சரத்தில் மசாலா மிக்ஸ் பகுதியில் அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

  (உங்கள் பிளாக் ஓப்பன் செய்ததும் பின்னாடி உங்கள் பிளாக் பெயர் இருக்கே அது எப்படி போடுவது)

  இப்படி போட்டாலாவது பதிவ திருடாம இருக்காங்களான்னு பார்க்கலாம்.)

  ReplyDelete
 7. புகழ் பெற்ற பதிவராவதற்க்கு நான் ஊட்டிக்குப் போய் வந்திட்டேன், அதனால நான் இந்த ஐடியாவை பின்பற்றமுடியாது. By the by, பதிவர் என்றுதானே சொல்கிறார்கள், அதென்னது பதிவாளர்? பதிவாளர் என்றால் Registrar என்று எங்கோ கேள்விப் பட்டேன். அது சரி, நமீதா பிளாக் ஸ்பாட் சுட்டி இருந்தா குடுங்க..........ஹி.....ஹி.....ஹி.....

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா நல்லவேளை நான் துப்ப வில்லை.. என் கணினி தப்பித்தது... # நாங்கல்லாம் அப்பவே அப்புடி

  ReplyDelete
 9. வலைப்பதிவு எழுத்தின் தேவையே உள்ளூர் செய்தி தருவது தான்....

  ReplyDelete
 10. http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_20.html

  ithai paarkkavum

  ReplyDelete
 11. தம்பி உடம்புக்கு எப்பிடி இருக்கு?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog