உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 19, 2012

மறந்துட்டிங்களா மக்கா என்னை மறந்துட்டிங்களா?மறந்துட்டிங்களா மக்கா என்னை மறந்துட்டிங்களா?வாழ்க்கையில் நமக்கு புதுசா ஏதாவது கிடைத்தால் நம்மிடம் இருந்ததை மெதுவாக மறக்க ஆரம்பித்திடுவோம். உதாரணமாக புது துணிவாங்கினால் உபயோகித்த துணி பழையதாக மாறி  மூலையில் ஒதுக்கி வைத்துவிடுவோம். அது போல புதுப்பொண்டாட்டி வந்ததும் நம்மை வளர்த்த அம்மாவை மறந்துவிடுவார்கள் (அதிர்ஷ்டம் உள்ள சிலரோ பழைய பொண்டாடியை மறந்துவிடுவார்கள் ).

ஆனா நான் அப்படி எல்லாம் கிடையாதுங்க நான் பழையைதை ஏதும் மறக்கமாட்டேன் என்றென்றும்.உதாரணமாக நான் எட்டுவயதில் என் கூட படித்த, நான் காதலித்த(விரும்பிய) மீனா,சரஸ்வதி என்ற பெண்களை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அதுக்கப்புறம் காதலித்த பெண்கள் அநேகம் அவங்க பெயரெல்லாம் சொல்லன்னுமுனா குறைந்தது பத்து பதிவாது போடனும். அதுக்கு நேரமில்லை..அதுனால என்னையை ஞாபகம் வைத்திருக்கும் காதலிகள் மட்டும் பின்னுட்டம் போடவும் ஹீ.ஹீ...


அதுமட்டுமல்லாமல் கிழேயுள்ள பொருட்களையும் இன்று வரை நினைவில் வைத்திருக்கிறேன்.

Add caption


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

13 comments :

 1. நல்ல
  ஞாபகசக்தி
  வாழ்த்துக்கள்
  பழச
  எப்பவுமே
  மறக்க
  கூடாது
  நன்றி

  ReplyDelete
 2. அம்மியும் ஆட்டுக்கல்லும் இப்போ அடிக்கடி நினைவில் வந்து போகுதுங்க அம்மாவின் செயலால் எங்க அம்மா இல்ல.

  ReplyDelete
 3. பிளாபி பார்பதற்கே அதிசியமா இருக்கு :-)

  ReplyDelete
 4. பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்...அதற்கு மிக பெரிய உதாரணம் இப்போ நடந்து கொண்டிருக்கும் மின்வெட்டு தான்.....அதனால் தான் நம் நம்முடைய பழைய ஆட்டுக்கல் அம்மி எல்லாம் பயன்படுத்துகிறோம்..இது தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியமும் கூட....நல்ல பகிர்வு....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 5. மறக்க முடியுமா
  பண்டைய பொருட்களின் சுயசார்புத் தன்மையை
  (ஆற்றையும் கிணற்றையும் கூட நினைத்துக் கொண்டேன் )
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்.தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தரும்....மிக நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 7. அந்த Bril ink ..பேனாவில் ஊற்றி கையில் பட்டால் துடைக்க பிளாட்டிங் பேப்பர் வாங்கி ..அழகா தெளிவா முத்துமுத்தா எழுதின நாட்களை மறக்கமுடியுமா ???..ஜியாமெட்ரி பாக்ஸ் நடராஜ் பிரான்ட் ,,கம் ....
  நினைவுகள் அந்தநாள் கொண்டு போய்ட்டீங்க ..
  கோபால் பல்பொடி இன்னு லண்டன் கடைல கிடைக்குது ,,
  கோலிசோடா ,பன்னீர் சோடா இதுவும் லிஸ்டில் இருக்கணும்

  ஆமா அந்த பீடி காஜா ,கணேஷ் ,மலபார் ???

  அம்மிக்கல்.. எனக்கும் அம்மா ஞாபகம் :((

  ReplyDelete
 8. அந்த ஐற்தாவது படித்துல போட்டு இருக்கிறீங்களே...
  அதுதான் அம்மியும் ஆட்டு கல்லா....?
  நான் பாத்ததே இல்லைங்க “உண்மைகள்“
  அப்புறம் எப்படி மறக்கிறதாம்...?

  ReplyDelete
 9. பழசுக்கு என்றுமே மவுசுதான்! அருமையான தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 10. எல்லாம் ஏன் வாழ்வில் கடந்து சென்ற விடயங்கள்!! நீங்க போட்டிருக்கீங்க.... எப்பூடி..........

  ReplyDelete
 11. அருமையான தொகுப்பு!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog