Monday, September 17, 2012







நான் தேடும் வெளிச்சங்கள்! - வெளிச்சத்தை தேடி செல்லும் ஒரு பெண்பதிவாளரின் முயற்சி

எனக்கு இணையம்மூலம் அறிமுகமானவர்களில் தோழி ஜோஸபின் பாபா என்னும் இளைஞி. இவர் 'ஜோஸபின் கதைக்கிறேன்என்ற வலைத்தளத்தின் மூலம் மிக அருமையாக எழுதிவருகிறார்கள். எழுதவலைதளம் கிடைத்துவிட்டது என்பதால் நம்மில் பலரும் கண்டதை கிறுக்கி வருகையில் இவரைப் போல சிலர் மட்டும் மிக அருமையாக வாழ்க்கையை உற்று நோக்கி மிக அருமையாக எழுதி  வருகிறார். இவர் வருங்காலத்தில் தமிழகத்தில் மிகவும் போற்றக்கூடிய சிறந்த எழுத்தாளராகவோ அல்லது மிக புகழ் பெற்ற ஜர்னலிஸ்டாகவோ வருவார் என்பது மிக நிச்சயம். அது போல வர எனது வாழ்த்துக்கள்.

இணையத்தில் வெளிவந்தது பலரது இதயங்களை தொட்ட இவரது எழுத்துக்கள் இப்போது 'நான் தேடும் வெளிச்சங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பாக செப்டம்பர் 15 ஆம் தேதி 2012 ல் தகிதா புத்தக பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது அது  இணையத்திற்கு வராதவர்களின் கைகளில் தவழ தொடங்கியுள்ளது.. அது உங்கள் கைகளிலும் தவழ அதை இங்கு அறிமுகம் செய்கிறேன்.



அவரின் எழுத்தை நான் சொல்லவதைவிட அந்த புத்தகத்திற்கான பதிப்புரையை நான் இங்கே தருகிறேன். அதை படித்து நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே ......


நான்தேடும் வெளிச்சங்கள்' - பதிப்புரை

'ஜோஸபின் கதைக்கிறேன்' என்னும் வலைப்பூவின் மூலம் உலகத்தமிழர்களோடு நல்ல கருத்துக்களை உரையாடி தமிழோடு உறவாடிவரும் அருமை படைப்பாளர் ஜோஸபின் பாபா அவர்களின் 'நான் தேடும் வெளிச்சங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் தகிதா பெருமையடைகிறது.என் தோழமைகளின் தோழமையாக இருந்து எம்மோடும் தோழமைக் கொண்ட ஜோஸபின் அவர்களின் கிடைத்தற்கரிய அனுபவங்களை அவர்களின் இணையப்பக்கங்களிலிருந்து உங்களின் இதயப்பக்கங்களுக்கு கொண்டுவருவதற்காகவே பக்கம் பக்கமாக இத்தொகுப்பை வெளியிட்டு உங்களின் பக்கம் கொண்டுவந்திருக்கிறோம்.

'தமஸோமா ஜோதிர் கமயா' என்று வேதம் சொல்வதற்கேற்ப, ஒளிரும் எழுத்தின் துணைகொண்டு தன் நெடுவழிப் பயணங்களுக்கான வெளிச்சங்களை தானே மிளிரவிட்டிருக்கிறார்.இவர் கொளுத்திப் போட்டிருக்கும் வெளிச்சங்கள் படிக்கும் வாசகர்களான உங்களின் மனங்களிலும் விடியல்களை உருவாக்கும்.'நல்ல சொல் இருட்டை வெளிச்சப்படுத்தும்' என்று புவியரசு சொன்னது நிதர்சனமானது என்பதை இதைப் படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்.

நிசங்களைக் கொண்டு கதையாடுவதும் புனைவுகளைக் கொண்டு கதையாடுவதும் படைப்பிலக்கியத்தில் நிகழும் ஒன்றுதான். என்றாலும் நிசம் எது? புனைவு எது? என்று பிரித்தறியாத அளவிற்கு கதை செய்திருப்பது இவரின் படைப்பாற்றலுக்கும், சமூக அக்கறைக்கும், மனத் துணிவிற்கும், எழுத்து தர்மத்திற்கும் சாட்சியங்களாக விளங்குகின்றன .ஆனந்தத்தின் கண்ணீரையும் அழுகையின் கண்ணீரையும் ஒரு நல்ல படைப்பாளி தன் எழுத்தில் வழியவிடுகிறான் என்பதற்கு ஜோஸபின் அவர்களின் கதைகள் கொண்டு உணரமுடிகிறது.நேற்றின் காயங்களுக்கும் இன்றின் வலிகளுக்கும் தன் எழுத்துகளைக் கொண்டு மருத்துவம் பார்க்கும் மகத்துவம் ஜோஸபின் அவர்களுடையது.

கடந்து போனவர்களை ,காயம் செய்தவர்களை, கண்ணீர் தந்தவர்களை, மனதில் நிற்பவர்களை, அன்பு கூர்ந்தவர்களை என்று இப்படி பலரையும் இந்தக் கதைகளுக்குள் இயல்பாய் உலவவிட்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் நல்ல ஆசிரியராக காலம் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.காலத்தின் கதைகளாக 'நான் தேடும் வெளிச்சங்கள்' இங்கு உதயமாகி இருக்கின்றன. இப்படியும், அப்படியும், ஏன் எப்படியுமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இவரின் கதைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

கதைகள் பெரும்பாலும் கதை சொல்லும். இவரது கதைகளோ வாழ்க்கையைச் சொல்லுகின்றன.பல மொழிகளின் பல பிரதேசங்களின் கலவை மனுசியாக திகழும் ஜோஸபின் அவர்களின் படைப்பின் ஊடே தென் திராவிட மொழிகளின் அனைத்து கூறுகளையும் அழகாய் தரிசிக்க முடிகிறது. இவரின் அரிதாரம் பூசாத எதார்த்தத்தின் கதைகள் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமானவைகலாக இருக்கும் .

முள்ளும் மலருமாய் முகிழ்த்துக் கிடக்கின்ற அனுபவங்கள் கதைகளாகும் போது வாசிப்பில் ஒரு பரவசம் இருக்கும். அந்த பரவசத்தைத் இத்தொகுப்பில் உணரலாம் .இவைகள் வலிகளா ? இல்லை வசந்தங்களா? எவை என்று நீங்களே இந்த வெளிச்சங்களில் நீராடி சொல்லுங்கள்.அனுபவங்களால் கறை படித்தவர்கள் இவரின் வெளிச்சங்களில் குளித்தால் நிச்சயம் புனிதப்படுவீர்கள்.ஜோஸபின் அவர்களின் படைப்பின் தேடல்களோடு நமது வாசிப்பின் தேடல்களையும் தொடருவோம்.



தோழி ஜோஸபின் பாபா அவர்களின்
வலைத்தள முகவரி இவர் 'ஜோஸபின் கதைக்கிறேன்'
lhttp://josephinetalks.blogspot.com/2012/08/blog-post_22.html

பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/babajosephine

நல்ல எழுத்தை தேடினால் அவரைத் தொடருங்கள்..
திருமதி ஜோஸபின் அவர்களின் கணவர் இவர். ஜோஸபின்னுக்கு மட்டுமல்ல அவர் எழுத்துக்கும் உறுதுணையாக இருப்பவர் இவர்


வாழ்த்துக்கள்.



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

12 comments:

  1. மிக்க நன்றி நண்பா. தங்களுடை பின்னூட்டம் வழி என்னை உற்சாகப்படுத்திய தங்களுடைய பொன்னான அறிய நேரத்தை ஒரு பதிவாக வேளியிட்டும் தங்கள் அன்புக்கரத்தை நீட்டியுள்ளீர்கள். தாங்கள் என் புத்தகத்தையும் வாசித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் பதிவு தர வேண்டும் என யாசிக்கின்றேன்.

    ReplyDelete
  2. நல்ல நூலை நல்ல பதிவரை
    அழகாக அறிமுகப் படுத்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிகள்!

      Delete
  3. Replies
    1. நன்றி மகிழ்ச்சிகள்!

      Delete
  4. நல்ல நூலை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி. ஜோஸபைன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. vaazhthukkal!

    naanum nesiththu padikkum-
    ezhuthukkal!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஜோஸபின் பாபா ,மற்றும் மதுரை தமிழன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.