Friday, September 14, 2012





 இந்தியாவின் சுதந்திரம் விற்பனைக்கு?


இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தாம் அடுத்த தேர்தலில் ஜெயித்து வர மாட்டோம் என்று கண்டிப்பாக தெரியும் அதனால்தான் அவர்கள் கோடி கணக்கில் கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு பதில் வல்லரசு நாட்டிற்கு வேண்டிய அடிமைநாடாக ஆக்கிவிடுவார்கள் அதற்கான முயற்சிதான்  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி .இந்தியா போன்ற சிறு சிறு வியாபாரிகளை அதிகம் கொண்ட பொருளாதாரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது வியாபாரிகள்,மக்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வயற்றில் அடிக்கும் செயல் ஆகும்.

இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு,அது ஒரு பெரிய சந்தை அதனால் அந்நிய நாட்டு முதலாளிகள் நம் நாட்டு தலைவர்களை பணம் கொடுத்து வாங்கி அடிமை படுத்திவிட்டார்கள் என்பதை அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பது என்று நமதுதலைவர்கள் முடிவெடுத்தபோதே தெள்ள தெளிவாகிவிட்டது.


அந்நியர்கள் நமது அந்நிய கை கூலி அரசியவாதிகள் துணையோடு இந்தியா சந்தையை கைப்பற்ற  விரும்புகின்றார்கள். அதற்கு,நாட்டு நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளும், தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் நாட்டை அடகு வைக்கின்றார்கள்.  அடகு வைக்கிறார்கள் என்று சொல்லுவதைவிட நமது சுதந்திரத்தை அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு விற்கிறார்கள் என்பதே உண்மை.  இதற்கு அவர்கள்  நாட்டு மக்களுக்கு நல்ல பொருள்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கு தரும் என்று அந்நிய முதலீட்டுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்தலைவர்கள் கூறித் திரிகிறார்கள்.இப்படிபட்ட கேடுகெட்ட இழிநிலை கொண்ட நாய்களைதான்  நாம் தலைவர்களாக தலையில் வைத்து கொண்டாடி கொண்டிருக்கிறோம்.


இந்திய நாட்டின் காங்கிரஸ் தலைவர் ஒருவர் உடல்நிலை சரியில்லை அதற்காக ரகசியமாக ட்ரீட்மெண்ட் அமெரிக்காவில் எடுப்பதற்காக வருவதெல்லாம் இந்தியாவை அமெரிக்க வியாபரிகளிடம் அடகு வைக்காதான் என்ற ரூமர் இங்குள்ள இந்திய மக்களிடம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது உண்மையோ அல்லது பொய்யோ அது நமக்கு தேவையில்லாதது நமக்கு தேவை விழிப்புணர்வு. இந்தியா அடிமையாவதற்கு முன்பு மக்கள் வெகுண்டு எழ வேண்டிய சந்தர்ப்பம் இது.

மக்களே வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவை போல சில்லரை வியாபரிகள் அதிகம் நிறைந்த நீயூயார்க் நகரத்தில் நிழைய பகீர முயற்சி எடுத்து இன்று வரை நுழைய முடியவில்லை ஆனால் அவர்கள் நாய்களுக்கு போடும் எலும்புதுண்டை போல இந்திய அரசியல்வாதிகளுக்கு தூக்கி போட்டால் அவர்களால் இந்திய மார்கெட்டை எளிதில் கைப்பற்றிவிடுவார்கள் இன்னும் சொல்லப்ப போனால் கைபற்றிவிட்டார்கள் என்பதே உண்மை ஆனால் அவர்கள் உள்ளே நுழையும் முன்னே நீங்கள் முளையிலே கிள்ளி எறிந்துவிட்டால் இந்தியாவிற்கும் நல்லது உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது. இதை செய்வீர்களா அல்லது நான் மீண்டும் இந்தியாவிற்கு வரும் போது அடிமைகளாக இருப்பிர்களா?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments:

  1. neengal solvadhupol indhivil makkalaal ottupoduvadhai thavira verondrum pudungamudiyaadhu nandri
    surendran

    ReplyDelete
  2. இது ஜன நாயகம். அப்படி என்றல் நம்மை நாமே ஆளுகிறோம். அரசியல்வாதி வானத்தில் இருந்து குதித்தவன் அல்ல.
    சுதந்திரத்தின் போதே சாதி வேற்றுமைகளை ஒழித்திருந்தால், மக்களிடம் பரவலான முன்னேற்றம் இருந்திருக்கும்.
    பெரும்பான்மை மக்களை தாழந்தவர்கள் என்று கூறி அடிமையாகவே வைத்தது தங்கள் மட்டும் எல்லா பலன்களையும் ஒரு கூட்டம் அனுபவித்ததன் பலன் கண் முன்னே தெரிகிறது. தான் மட்டும் உயர்வு, எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஒழுக்கமோ, யோக்கியமோ தேவை இல்லை என்று நினைத்து இன்று வரை அந்த கூட்டம் செய்து வருகிறது. இதை ஓரளவிற்கு தெரிந்து கொண்ட அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம் போல் செய்கிறார்கள். மற்றவர்களும் அந்த நிலைக்கு சென்று விட்டார்கள் ஏனெனில் போலீஸ், கோர்ட் போன்றவை பணத்திற்கே கட்டுபடும் நிலை , நியாயத்திற்கு அல்லவே. அதனால் நாடே அழிவுற்றாலும், இயற்கை வளங்கள் அழிந்தா.லும் இங்கு தன் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற மனப்பான்மை. இப்போதைய நிலை ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ணம் மற்றும் செயல்களே. எதை நாடுகிறார்களோ அதுவே கிடைக்கும்.(attraction) எந்த கட்சியும் தன்னலமில்லாமல், நாட்டு நலன் கருதுவது இல்லை. எந்த கட்சியும் உயர்ந்த தத்துவங்களை கடை பிடிப்பதில்லை. முடிந்தவரை தான் ஆட்சிக்கு வந்து முன்பை விட கொள்ளையிட வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களை வைத்து மக்களை திசை திருப்பி விட்டால் போதும். மக்களின் ஒட்டு மொத்த சிந்தனை மாறினால் இது சரியாக வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  3. இது ஜனநாயக நாடு....எப்போதும் அரசியல் வாதிகள் ஆடமுடியாது...மக்கள் நினைத்தால் ஒரேயடியாக அவர்களை திருத்த முடியும்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. சரியான விழிப்புணர்வைத் தரும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில்...?

    ReplyDelete
  5. மீண்டும் ஒரு சுதந்திரப் போர் தொடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது! இம்முறை இந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக!
    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    ReplyDelete
  6. //// நான் மீண்டும் இந்தியாவிற்கு வரும் போது அடிமைகளாக இருப்பிர்களா?////

    என்னது நீங்க இந்தியாவில இல்லையா?! ஆனா இந்தியாவை பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கீங்களா. என்னா பாசம், என்னா பற்று நல்லா வௌங்கிரும் நாடு. நாட்டை நல்லா வாழவைக்கறீங்கப்பா. வாழ்க சனநாயகம். வாழ்க வெளிநாட்டு மோகம்.

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டில் நாங்கள் வசித்தாலும் நாங்கள் இந்தியாவை நேசிப்பது உண்மையே...புகுந்த வீட்டிற்கு சென்ற பின் பிறந்த வீட்டில் உள்ள சகோதர்கள் கஷ்டப்பட்டால் யாரும் வருந்த மாட்டார்களா என்ன? அது போலத்தான் நாங்கள் இந்தியாவை நேசிப்பதும் நண்பரே.....இந்தியாவில் வசிப்பதினால் மட்டும் இந்தியாவை நேசிக்கிறோம் என்று சொல்லவது சிரிக்க வைக்ககிறது...காரணம் இந்தியாவை நீங்கள் நேசிப்பதாக சொல்லிக் கொண்டே அதை ஒவ்வொரு நாளும் மற்ற நாடுகளுக்கு அடிமையாக தாரைவார்த்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள். வெளிநாட்டில் இந்தியர்கள் வசிப்பதன் மூலம் இந்தியாவிற்கு பல லாபம்
      1. நாங்கள் வெளிநாட்டில் வேலை பெற்றதன் மூலம் இந்தியாவில் இருக்கும் வேலை வாய்ப்பு சுமையை குறைக்கின்றோம். அதனால் இன்னொருவர் வேலை வாய்ப்பை பெறுகிறார். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் சம்பாதிக்கும் நாங்கள் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சில பகுதியை இந்தியாவில்தான் நாங்கள் முதலீடு செய்கிறோம். அதனால் அன்னிய செலவாணி அதிகரிக்கிறது. அதனாலும் பொருளாதார்த்தில் பல மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் பலர் இந்தியாவை நேசிப்பதாக கூறி வரி ஏய்பு செய்தும் குறுக்கு வழியில் பணம் சேர்த்தும் அதை வெளினாட்டில் உள்ள வங்கியில் பதுக்கி வைக்கிறீர்களே

      என்னா பாசம், என்னா பற்று நல்லா வௌங்கிரும் நாடு. நாட்டை நல்லா வாழவைக்கறீங்கப்பா. வாழ்க சனநாயகம். வாழ்க உங்க உள்நாட்டு மோகம். நண்பரே

      Delete
  7. நண்பரே நீங்க வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கற மாதிரி சோனியா மன்னுமோகன் போன்றோர் அவங்க அவங்க விசுவாசத்தை அந்த நாட்டுக்கு காட்டுறாங்க அவ்வளவுதான். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி விடுங்க எப்படீயோ போகட்டும். வேற என்ன பன்ன முடியும்.

    ReplyDelete
    Replies
    1. எங்களை போல வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் இந்திய அரசியல் வாதிகளையும் ஒப்பிடாதீர்கள். நாங்கள் வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவில் உள்ளதை கொள்ளை அடித்து வெளிநாட்டில் பதுக்குகிறார்கள் வித்தியாசம் அதிகம் நண்பரே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.