உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 10, 2012

ஆனந்த விகடனாரே ( Shame on you )ஆனந்த விகடனாரே ( Shame on you ) Vikatan 


ஆனந்தவிகடன் வலையோசையில் பகுதியில் வாரம் ஒரு வலைத்தளத்தை என்பக்கம் என்றபகுதியில் வெளியிட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். அப்படி அவர்கள் அறிமுகப்படுத்தும் போது அந்த வலைத்தளத்தில் சில பகுதிகளை எடுத்து ஆனந்த விகடனில் வெளியிட்டு அந்த வலைதளத்தை பற்றிய சிறு அறிமுகத்துடன் அந்த வலைத்தள முகவரி இட்டு வெளிடியிடுவது வழக்கம்.ஆனால் இந்த வார விகடனில் எனது வலைத்தளத்தை என்பக்கம்-மதுரை யில் வெளிடிட்டவர்கள் ஏனோ அவர்கள் உண்மைகள் என்று மட்டும் போட்டு விட்டு மற்ற எல்லா விபரங்களையும் மூடி மறைத்துவிட்டார்கள்,

நமது பதிவுகளை இலவசமாக நம்மிடம் சொல்லாமல் இட்டு பக்கங்களை நிரப்பி பணம் பார்க்கும் பல தமிழ் வார இதழ்களுக்கும்(குமுதம் ரிப்போர்ட்டர் எனது பதிவுகளை அப்படியே காப்பி அடித்து எனது பெயர் போடாமல் வெளியிட்டு உள்ளார்கள் மார்ச் 18 2012 இதழ்) நம்மிடம் விபரங்களை பெற்று ஆனால் அதை மூடி மறைத்துவெளியிடும் ஆனந்தவிகடனுக்கும் வித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை என்பதே எனது கருத்து.

நீண்டகால ஆனந்த விகடன் வாசகர் ஆன  நான் விகடனில் எனக்கு ஏதாவது போட்டு அல்லது கருத்து இருந்தால் அதை என் தளத்தில் வெளியிட்டு விகடன் தளத்திற்கான லிங்கையும் கொடுத்து பதிவு இடுவது என் வழக்கம். அதுமட்டுமல்லாமல் அவர்களின் இமெயில் முகவரிக்கும் அதை தெரிவித்து உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் பதில் எழுதவும் அதை நான் நீக்கிவிடுகிறேன் என்று இமெயிலும் அனுப்பியுள்ளேன். ஆனால் அந்த மாதிரி நான் அனுப்பிய இமெயிலுக்கு இதுநாள் வரை பதில் ஏதும் வந்ததில்லை.


இப்படி செய்யும் எனக்கு இந்த வாரம் ஆனந்தவிகடன் செய்தது மிக தவறாகவே படுகிறது, அதனால் செய்வதை திருந்தச் செய் என்று சொல்லி  இதன் மூலம் அதனால் ஆனந்த விகடனுக்கு எனது வருத்தத்தை  வெளியிடுகிறேன், இதை பார்த்து விகடனில் பணி புரியும் பொறுப்பு ஆசிரியர்கள்  என்ன பதில் அளிக்கிறார்கள் என்று பார்ப்போம்

SHAME ON YOU VIKATAN SHAME ON YOU

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

31 comments :

 1. நியாயமான கோபம்தான்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கோபம் எதுவும் இல்லை. சிறிது வருத்தம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. அண்ணே... கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்கள் என்றே தோனுகிறது.... நீங்கள் விகடன் இணையதலத்தில் படித்திருப்பீர்கள் போல....அதில் டீடெயில் கிடைக்காது. ஆனால், யாரையாவது மதுரை பகுதியில் வெளிவந்திருக்கும் புத்தகத்தை வாங்கி ஸ்கேன் செய்து அனுப்ப சொல்லுங்கள். அதில் முழுவிபரங்களும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நான் அவசரப்படவில்லை..அவசரப்பட்டு வெளியிட்டது விகடன் தான்.

   // நீங்கள் விகடன் இணையதலத்தில் படித்திருப்பீர்கள் போல....அதில் டீடெயில் கிடைக்காது. //
   நான் விகடன் நெடுநாள் வாசகன். இதே பதிப்பில் மற்ற ஊர்களின் வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்து போது நல்ல டீடெயில் கொடுத்து இருக்கிறார்களே அது எப்படி? அப்படி அவசர அவசரமாக வெளியிட இது என்ன பரபரப்பு செய்தியா என்ன?

   நான் சொல்லவருவது செய்வன திருந்த செய் என்பதுதான். என்னுடைய ஆதங்கம் எல்லாம் நான் விரும்பி இன்று வரை படித்து வரும் வார இதழில் இந்த மாதிரி தவறுகள் வரக்கூடாது என்பதுதான்

   Delete
 3. நண்பரே உங்கள் பதிவின் பேர் போட்டுட்டு வேறு பதிவரின் மேட்டர் போட்டுருகான்களா? இதுவரை ரெண்டு மூணு தடவை இப்படி நடந்துடுச்சு. அடுத்தடுத்த வாரதுக்கென மேட்டர் சேர்த்து வச்சிட்டு குழப்பிக்குறாங்க :(

  ReplyDelete
  Replies
  1. அப்படி அவர்கள் செய்யவில்லை... எனது பதிவுகளின் தலைப்பை மாற்றி பதிவிட்டுள்ளார்கள். அத்ற்கு என்னிடம் பெர்மிஷன் அவர்கள் கேட்கவில்லை. அவ்ர்கள் கேட்டது எல்லாம் என்னைப்பற்றிய விபரமும் என் வலைதளத்தை அறிமுகப்படுத்த அனுமதி மட்டும். அவர்கள் அனுமதி பெற்றதோடு சரி அதன் பின் நாங்கள் உங்கள் வலைதலத்தின் இந்த பதிவுகலை வெளியிடுகிறோம் என்றோ அல்லது எப்போது வெளியிடுகிறோம் என்றோ தகவல் இல்லை. அனுமதி பெற மட்டும் முயற்சி செய்தவர்கள் அதை வெளியிட்ட பின் அதற்குரிய தகவல்களை திவித்திருக்கலாமே

   Delete
 4. ஆனந்த விகடன் இப்படி நடந்திருக்க கூடாதுதான்! வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. அதை விகடன் செய்யுமா என்று பார்ப்போம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. எங்கள் வருத்தத்தையும் பதிவு செய்கிறோம்
  பதில் தருவார்கள் என நினைக்கிறேன்
  பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. என்னுடன் சேர்ந்து வருத்தத்தையும் பதிவு செய்தற்கு நன்றி பதில் தருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்
   பார்ப்போம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. உங்கள் வருத்தத்தை உணரமுடிகிறது.கோபப் படவேண்டாம் நண்பரே! வேண்டுமென்றே செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் கோபம் ஏதும் கொள்ளவில்லை. என் வருத்தத்தை தான் நான் இங்கு பதிந்துள்ளேன்,
   அவர்கள் வேண்டுமென்று செய்திருப்பார்கள் என் நான் சொல்லவில்லை. ""அந்த பிரிவுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்ததால் இப்படி நடந்திருக்கிறது என சொல்ல வருகிறேன்.""

   உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் குமுதம் ரிப்போர்டரில் எனது பதிவை எனது அனுமதியில்லாமலும் என் பெயரை குறிப்பிடாமலும் மார்ஸ் 18 2012 இதழில் திருடி போட்டு இருக்கிறார்கள் அப்போது அதை படித்த எனது உறவினர்களும் நண்பர்களும் அவர்கள் மேல் வழக்கு தொடுக்க சொன்னார்கள் எனக்கு அதில் எல்லாம் இஷ்டமில்லை கோபமும் இல்லை காரணம் அந்த இதழ்களை நான் மஞ்சப்பத்திரிக்கைகளாக கருதுவதுதான்.

   ஆனால் ஆனந்த விகடன் நான் மதிக்கும் பத்திரிக்கையில் ஒன்று அதனால்தான் என் ஆதங்கம் இப்படி வெளிப்பட்டு இருக்கிறது.

   Delete
 7. உங்கள் கோபம் நியாயமானது தான்..பொருத்துருந்து பார்ப்போம்..நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே நான் அவர்கள் மீது கோபபடவில்லை என்பதை இங்கு தெரிவிக்கிறேன்

   Delete
 8. வருத்தப்படும் விஷயம் தான்...

  அடுத்த வலையோசையில் " தவறு நடந்து விட்டது " என்று வெளியிட வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் அப்படி செய்வார்களா என்று பார்ப்போம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. ivangala paththi enna solla...

  ReplyDelete
 10. //எனது பதிவுகளின் தலைப்பை மாற்றி பதிவிட்டுள்ளார்கள்.//

  அவ்ளோ தானா மேட்டரு? இது எல்லாருக்கும் நடப்பது தான் ! உங்கள் பெயர் போட்டு விட்டனர். உங்கள் பதிவில் இருந்து தான் பதிவும் எடுத்துள்ளனர். ஆனால் உங்கள் பதிவின் தலைப்பு போடாமல் வேறு போட்டுள்ளனர். அவ்வளவு தானே?

  நண்பா, நாம் பதிவுகளில் வள வள என நிறைய எழுதுவோம். அவர்கள் பல பதிவில் இருந்து ஓரிரு வரி மட்டும் எடுப்பார்கள். எனவே எடுப்பதிலேயே எடிட் செய்து தான் போடுவார்கள். மேலும் குட்டி குட்டி தலைப்பும் கூட அவர்களே தான் வைத்து கொள்வார்கள். அனைத்த்த்த்த்த்த்து பதிவர்களுக்கும் இது நடப்பது தான். அவர்கள் பத்திரிகை ஸ்டைல் என்று ஒன்று உண்டல்லவா? அதுக்கு தகுந்த படி தலைப்பு வைப்பார்கள். இதில் தப்பு இருக்கிற மாதிரி தெரியலை. எல்லாருக்கும் நடந்தாலும் யாரும் இதை பெருசா சொன்னதில்லை.

  என்னை பொறுத்த வரை ஒரு பத்திரிக்கைக்கு படைப்பு கொடுப்பதோடு நம் வேலை முடிந்து விட்டது, நிச்சயம் அதை அவர்கள் பத்திரிக்கைக்கு தகுந்த மாதிரி எடிட் செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு. இது எப்போதும் நடக்கும் விஷயம்.

  என் எழுத்தில் கை வைக்க கூடாது அப்படியே பயன்படுத்தணும் என்கிற ரீதியில் மிக மிக பெரும் எழுத்தாளர்கள் வேண்டுமானால் சொல்லலாம். சுஜாதா எழுதியே பல பத்திரிக்கை சில நேரம் மாத்திருக்கு ! நாம சாதாரண ஆள் தானே நண்பா !

  ReplyDelete
  Replies
  1. //எனது பதிவுகளின் தலைப்பை மாற்றி பதிவிட்டுள்ளார்கள்.//

   //அவ்ளோ தானா மேட்டரு? இது எல்லாருக்கும் நடப்பது தான்//

   நான் சொல்ல வர மேட்டர் என் பதிவுகள் இட்டவர்கள் எனது வலைதளத்திற்கான லிங்கையும் போட்டு இருக்க வேண்டும் என்பதுதான். இதே இதழில் மற்ற வலைதளத்தினருக்கான லிங்கையும் கொடுத்திருக்கின்றனர். நான் சொல்ல வருவது செய்வன திருந்த செய் என்பதுதான்.

   எழுத்தாளர்கள் எல்லாம் பணதிற்கு எழுதுபவர்கள் அவர்கள் பத்திரிக்கைகளின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆட்டம் போடலாம். ஆனால் நான் இங்கு எழுதுவது எனது பொழுது போக்கிற்கு. விகடனில் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் என் பதிவை எடுத்து எழுதுபவர்கள் அதை முறைப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அதை அறிமுகப்படுத்தும் போது நமக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு காரணம் நானாக அவர்களைத்தேடி செல்லவில்லை அவர்கள் தான் எனக்கு மெயில் அனுப்பி கேட்டார்கள்.அதனால் அதை போட்டவுடன் மரியாதை நிமித்தம் அதை அவர்கள் நமக்கு தெரியப் படுத்த வேண்டும்

   நம்மை போல உள்ள பதிவாளர்களின் படைப்பை எடுத்து போட்டு பக்கங்களை நிரப்பி பணம் பண்ணுபவர்கள் அவர்கள் நாம் அப்படி பட்டவர்கள் அல்ல அவர்கள் ஏதோ நம்மை பெருமைப்படுத்துவது போல காட்டி செலவில்லாமல் பக்கங்களை நிரப்பி பணம் சம்பாதிப்புதான் அவர்களது எண்ணம். இது புரியாமல் அவர்கள் நம் பதிவை அறிமுகப்படுத்தியதும் நம் பதிவாளர்கள் ஆகா ஒகோ என்று தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்

   உங்களுக்கே தெரியும் எத்தனை பதிவாளர்கள் எவ்வளவு அருமையாக வலைதளத்தில் எழுதுகிறார்கள் என்று அவர்களின் பதிவை எடுத்து போட்டு அவர்களுக்கு சன்மானம் கொடுக்க சொல்லிப்பாருங்கள் அப்போது தெரியும் இவர்களின் அருமைகள்

   // நாம சாதாரண ஆள் தானே நண்பா !//
   ஒரு காலத்தில் சாதாரண ஆட்களாக இருந்தவர்கள்தான் இப்போது புகழ் பெற்றவர்கள் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே..நம்மை நாமே தாழ்த்தி கொள்ள வேண்டாம்

   Delete
  2. //நம்மை போல உள்ள பதிவாளர்களின் படைப்பை எடுத்து போட்டு பக்கங்களை நிரப்பி பணம் பண்ணுபவர்கள் அவர்கள் நாம் அப்படி பட்டவர்கள் அல்ல அவர்கள் ஏதோ நம்மை பெருமைப்படுத்துவது போல காட்டி செலவில்லாமல் பக்கங்களை நிரப்பி பணம் சம்பாதிப்புதான் அவர்களது எண்ணம். இது புரியாமல் அவர்கள் நம் பதிவை அறிமுகப்படுத்தியதும் நம் பதிவாளர்கள் ஆகா ஒகோ என்று தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்//

   இதை சொல்லத்தான் கருத்து பெட்டிக்கு வந்தேன் - பின்னூட்டத்தில் அதை தாங்களே சொல்லி விட்டீர்கள் நன்றி.

   இது என் மற்ற பதிவர்களுக்கு புரியல????

   Delete
  3. பல பதிவாளர்களுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகம்...தங்களுக்குள் ஒளிந்து இருக்கும் திறமை அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை உங்களை மாதிரி சில பேர்களுக்காவது வார இதழ்களின் போக்கு புரிந்து இருக்கிறதே

   Delete
 11. மற்றவர்களுக்குச் செய்ததுபோல செய்யாமல் உங்களை புறக்கணித்து விட்டார்கள் என்பது நியாயமான வருததம்தான். மிகப் பெரிய வார இதழான விகடன் இந்தத் தவறைத் திருத்துகிறதா என்று பார்ப்போம். உங்களுடன் நானும் இணைந்து என் ஆதங்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் ஆதங்கத்தை தெளிவோடு புரிந்து கொண்டதற்கு மிகவும் நன்றி கணேஷ்

   Delete
 12. மனதை அள்ளுகிறது புதிய டாப் பேனர். நம் அனைவருக்குமாக இப்படி வடிவமைத்து வெளியிட்டுள்ள உங்களுக்கு அனந்தகோடி நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 13. //எழுத்தாளர்கள் எல்லாம் பணதிற்கு எழுதுபவர்கள் அவர்கள் பத்திரிக்கைகளின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆட்டம் போடலாம். ஆனால் நான் இங்கு எழுதுவது எனது பொழுது போக்கிற்கு. விகடனில் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் என் பதிவை எடுத்து எழுதுபவர்கள் அதை முறைப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அதை அறிமுகப்படுத்தும் போது நமக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு காரணம் நானாக அவர்களைத்தேடி செல்லவில்லை அவர்கள் தான் எனக்கு மெயில் அனுப்பி கேட்டார்கள்.அதனால் அதை போட்டவுடன் மரியாதை நிமித்தம் அதை அவர்கள் நமக்கு தெரியப் படுத்த வேண்டும்//

  சுயமரியாதை மிக்க மதுரைதமிழா உனது கோபம் நியாயமானதே


  ஆனந்தவிகடனும் லாபநோக்கோடு மட்டுமே இயங்கும் பத்திரிகை அல்ல
  சமூக விழிப்புணர்வோடு சமூகபாதுகாப்புக்கு செயல்படும் பத்திரிக்கை
  குறை இருந்தால் மன்னிக்கலாம்

  //நான் கோபம் ஏதும் கொள்ளவில்லை. என் வருத்தத்தை தான் நான் இங்கு பதிந்துள்ளேன்,
  அவர்கள் வேண்டுமென்று செய்திருப்பார்கள் என் நான் சொல்லவில்லை. ""அந்த பிரிவுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்ததால் இப்படி நடந்திருக்கிறது என சொல்ல வருகிறேன்.""

  உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் குமுதம் ரிப்போர்டரில் எனது பதிவை எனது அனுமதியில்லாமலும் என் பெயரை குறிப்பிடாமலும் மார்ஸ் 18 2012 இதழில் திருடி போட்டு இருக்கிறார்கள் அப்போது அதை படித்த எனது உறவினர்களும் நண்பர்களும் அவர்கள் மேல் வழக்கு தொடுக்க சொன்னார்கள் எனக்கு அதில் எல்லாம் இஷ்டமில்லை கோபமும் இல்லை காரணம் அந்த இதழ்களை நான் மஞ்சப்பத்திரிக்கைகளாக கருதுவதுதான்.

  ஆனால் ஆனந்த விகடன் நான் மதிக்கும் பத்திரிக்கையில் ஒன்று அதனால்தான் என் ஆதங்கம் இப்படி வெளிப்பட்டு இருக்கிறது.//

  இப்போது நான் குமுதம் , ரிப்போர்ட்டர்,நக்கீரன் வாங்குவதை நிருத்திவிட்டேன்

  நன்றி

  ReplyDelete
 14. உங்கள் புகைப்படம் பார்த்தேன் மிகவும் சாந்தமாக உள்ளீர்கள்

  ரிலாக்ஸ் நண்பா

  ReplyDelete
 15. வருந்த வேண்டிய செய்தி தான் அவர்களுக்கு உணர்த்தும் படி எதுவும் செய்ய முடியாதா?

  ReplyDelete
 16. படைப்பவர் உரிமையும் பதிப்பவர் உரிமையும் பல நேரம் சந்திக்காமலே போகின்றன. ironic.

  ReplyDelete
 17. விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு பதிப்பாளர்/பிரபலம் எனும் ஆணவமும் உண்டு. take it for granted நடத்தையின் காரணஙகளில் ஒனறு.

  ReplyDelete
 18. கிடைத்த அங்கீகாரத்துக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog