உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 6, 2012

டெஸோ மாநாடு என்றால் டெத் ஸோ (Death Show )மாநாடா?.


மாநாட்டுக்கு செல்ல நாங்க ரெடி அப்ப நீங்க ரெடியா?
    
        டெஸோ மாநாடு என்றால் டெத் ஸோ (Death Show )மாநாடா?.

டெஸோ மாநாடு என்றால் என்ன கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்?

டெஸோ மாநாடு என்றால் டெத் ஸோ (Death Show )மாநாடு. அதாவது இலங்கையில் இறந்து போன மக்களுக்காக தாங்கள் மிகவும் கவலைப்படுவதாகவும் அந்த போரில் இறக்காமல் அவதிப்படும் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று போடும் நாடகத்தைதான்(Show)  டெஸோ என்று இப்போது அழைக்கிறார்கள்.

டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்புவது என்ன?

இந்த 90வது வயதிலும் டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிட்ட கலைஞர் ஐயாவுக்கு இலங்கையில் மனிதர்கள் சாவும் போது பிரதமரை டெல்லி சென்று பார்த்து முறையிடாமல் கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தற்கு காரணம் என்ன ஐயா?வயதாக வயதாகதான் உடம்பில் தெம்பு வருகிறதோ..

சீமான், நெடுமாறன், வைக்கோ, சம்பத் போன்ற இன்ன பிற செல்லாக்காசுகள் இத்தனை நாள் இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம்  திரும்பச்செய்தனரா என்று திமுக அனுதாபிகள் கேட்கிறார்களே?

உள்ளுரில் இருந்துகொண்டு உலகமே தங்களை திரும்பி பார்ப்பதாக சில திமுக அபிமானிகள் நன்றாக கனவுகாண்கிறார்களே அது எப்படியப்பா? கனவுகள் காண்பதுதான் திமுக தொண்டனின் வழக்கமா?


ஈழத்தமிழர் காசுகளில் நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என இன்ப சுற்றுலா போய் அங்கே ஒரு மூடிய அரங்கில் தொண்டை நரம்பு புடைக்க முழக்கமிட்டு கைத்தட்டல் போதையை ஏற்றிக்கொண்டு விமானம் ஏறி தமிழகம் வந்து போய் வந்த பொருளாதார திமிரில் கலைஞரை வசை பாடுகீறீர்களே இது நியாமா என்று திமுக அனுதாபிகள் கேட்கிறார்களே?

உலகம் தெரியாத திமுக அபிமானிகள் இலங்கை தமிழர்களுக்காக உலகம் எங்கும் சுற்றி வந்தது போராடிய தலைவர்களை கட்சி தலைமையிடம் வாங்கிய பணத்திற்காக அல்லது  போதை  ஏற்றி வந்து இதுவும் கேட்பார்கள் இதற்கும் மேலும் கேடகத்தான் செய்வார்கள் அதில் என்ன அதிசயம்.

மூடிய அரங்கில் முக்காடிட்டு அழுவது போல அல்லாமல் திறந்த அரங்கில் உலகமே பார்க்கும் படி ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைக்காக, வரும் உலக தலைவர்களை உலுக்கப்போகின்றோம் என்று திமுக அனுதாபிகள் சொல்லுகிறார்களே?


அமெரிக்கா ஸ்வீடன் நார்வே கனடா போன்ற நாடுகளில் குளிர் அதிகம் அதனால்தான் இங்கு மூடிய அரங்கத்தில் கூட்டம் கூட்டுகிறார்கள் அது மட்டுமல்லாமல் கண்ட இடங்களில் குண்டு குழி தோண்டி கேலி கூத்தாக்கும் கலாச்சாரம் மேலைநாடுகளில் கிடையாது கலைஞரே மேலைநாட்டிற்கு வந்தாலும் முக்காடிட்டுதான் செல்ல வேண்டும். காரணம் இங்கு குளிர் அதிகம். இது கூட தெரியாத திமுகா அனுதாபிகள் இப்படி கீண்டல் பண்ணுகிறார்கள். சோனியா காந்தி வீட்டில் முக்காடு போட்டு அழுதவர் எந்த கட்சி தலைவர்  என்று திமுக அனுதாபிகளுக்கு மறந்து போய்விட்டதா என்ன?

உலகையே உலுக்கும் அளவிற்கு கூட்டத்தை கூட்டி காட்டப் போகிறார்களாமே?
இதில் என்ன அதிசயம் காசு கொடுத்து பிரியாணீ வாங்கி கொடுத்தா பிச்சைகாரகள் கூட கூட்டத்தீற்கு வருவார்கள் என்பது எல்லோருமே அறிந்ததுதானே. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திற்கு அதிக கூட்டம் கூட்டி காண்பிப்பதற்காக ரோட்டில் போகும் பிச்சைகார்களை கூப்பிட்டு காசு கொடுத்து சாப்பாடு போட்டால் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் அது எல்லாம் மணமக்களை வாழ்த்த வந்த கூட்டமாகுமா என்ன?


தமிழன் நீங்கள் நக்கல் அடித்தது போதும் உண்மையில் டெஸோ மாநாடு நடத்தபடுவதன் நோக்கம் என்ன?

வரும் தேர்தலில் காங்கிரஸ்க்கு அதிக சீட்டு கிடைக்காது என்பது கலைஞருக்கு மிக நன்றாக தெரியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லையென்றால் வேறு யாரு வந்தாலும் அவரின் குடும்பத்தினரின் மீது சட்ட நடவடிக்கை கடுமையாகலாம். அதனால் தன் கையில் அதிக அளவு சீட்டுகள் இருந்தால் எந்த கட்சியையும் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டலாம். இதுதான் உண்மையான நோக்கம். இலங்கைதமிழர்கள் மீது காட்டும் அக்கறை எல்லாம் இதற்காக ஆடும் நாடகம்தான். கலைஞரின் சாணக்கியதனத்தால் இலங்கை பிரச்சனை தீருமோ இல்லையோ ஆனால் அவர் பிரச்சனைகள் தீரும்.அவரின் வயதில் மாற்றம் ஏற்படலாம் ஆனால் அவர் சாணக்கியதனத்தில் என்றும் மாற்றம் ஏற்படாது.


டிஸ்கி: வரும்  பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக சீட்டுகளை கைப்பற்றும் கட்சி திமுகவாகத்தான் இருக்கும் என்று நிச்சயம் கூருகிறேன். தேர்தல் முடிந்ததும் இங்கு வந்து சரிபார்த்து கொள்ளுங்கள். இதை எப்படி நான் அடித்து சொல்லுகிறேன் என்றால் எனக்கு தமிழர்களைப் பற்றி நன்கு தெரியும்

9 comments :

 1. ஒரு நேரம் சாப்பிடாமல் இருங்கள்
  உடம்புக்கு நல்லது என மருத்துவ்ர் சொன்னால்
  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கலைஞ்ர்
  மா நாடு நடத்துகிறார் என்றால்
  அர்த்தம் இல்லாமலா இருக்கும்
  சிந்திக்கச் செய்துபோகும் பதிவு

  ReplyDelete
  Replies
  1. உண்மையை பட்டுன்னு முதலில் வந்து உடைத்து சென்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

   Delete
 2. டெஸோ மாநாடு என்றால் டெத் ஸோ மாநாடு அருமையான விளக்கம், இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் பரலோகம் அனுப்பியதற்க்கப்புரம் போடும் மாநாடு, மிகவும் பொருத்தம்!!

  ReplyDelete
 3. \\ அந்த போரில் இறக்காமல் அவதிப்படும் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் \\ அதைக் காண்பித்து ஓட்டு வாங்கத்தான் நாங்க இருக்கிறோம். ஹி.....ஹி.........ஹி.........

  ReplyDelete
 4. \\டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்புவது என்ன?\\ சம்பதிச்சதெல்லாம் இன்னும் முப்பது தலைமுறைக்கு உட்கார்ந்து தின்னு தீர்த்தாலும் தீராது, இன்னமுமா உனக்கு ஆசை விடலை? போகும் போது நீ அடிச்சதெல்லாம் எடுத்துகிட்டா போயிடுவே? இன்னமும் எதற்கு இப்படி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையணும்?

  ReplyDelete
 5. \\இலங்கையில் மனிதர்கள் சாவும் போது பிரதமரை டெல்லி சென்று பார்த்து முறையிடாமல் கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தற்கு காரணம் என்ன ஐயா?\\ அன்றைக்கு ரம்பாவின் திருமண வரவேற்ப்புக்கு நேரில் [வீல் சேரிலதான்] போக வேண்டியிருந்தது, அதனால தான்.

  ReplyDelete
 6. \\இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம் திரும்பச்செய்தனரா\\ நீ கூட்டம் கூட்டி எதற்கு பிரயோஜனம்? உன் கட்சி வளரும், நீ நாலு காசு பார்ப்பே, ஈழத் தமிழனுக்கு என்ன நன்மை அதனால?

  ReplyDelete
 7. \\அதனால் தன் கையில் அதிக அளவு சீட்டுகள் இருந்தால் எந்த கட்சியையும் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டலாம். இதுதான் உண்மையான நோக்கம். இலங்கைதமிழர்கள் மீது காட்டும் அக்கறை எல்லாம் \\ 100% Correct.

  ReplyDelete
 8. \\அவரின் வயதில் மாற்றம் ஏற்படலாம் ஆனால் அவர் சாணக்கியதனத்தில் என்றும் மாற்றம் ஏற்படாது.\\ இதுக்குப் பேரு சாணக்கியதனம் இல்லை குள்ளநரித்தனம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog