உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 9, 2012

திரூப்பூர்காரர்களிடம் ஜாக்கிரதையாய் பேசுங்கப்பா....!!!!!திரூப்பூர்காரர்களிடம் ஜாக்கிரதையாய் பேசுங்கப்பா....!!!!!

நகைச்சுவையாக ஊர் பெயரை சொல்லி காமெடி பண்ணலாம் என்று எண்ணி மற்ற ஊர்காரர்களைப்ப்பற்றி முதலில் சொன்னா நல்லா இருக்காதுன்னு எங்க ஊரை வைச்சு முதலில் மதுரைக்காரய்ங்க...வாராய்ங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற பதிவை போட்டேன். உடனே நம்மள நாமே அசிங்கபடுத்தலாமா! என்று மதுரைக்காரர் கோவிச்சு கிட்டார்..... சரி அவர் மனசு கோணக்கூடாது என்பதால் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பதற்கிணங்க தமிழகத்தில் உள்ள கழுதைகள் எல்லாம் வந்து சேரும் இடமான சென்னையை வச்சு இப்படிபட்டவர்களா சென்னைக்காரார்கள் என்ற பதிவு போட்டேன். உடனே வந்தாரை வாழ வைக்கும் எங்கள் சென்னையை நீங்கள் குறைகூறலாமா என்று சில பேர் சண்டைக்கு வந்துவிட்டார்கள்... சரி போனா போகுதுன்னு  கடலூர்கார்களை நக்கல் பண்ணினால் காந்தி போல அமைதியாக இருப்பார்கள் என்று எண்ணி  கழுதையும் கடலூர்காரர்களும்  என்ற பதிவை போட்டேன்... மக்காஸ் இப்ப என்ன நடக்குது தெரியுமா ? நான் இந்தியா வரும் போது என்னை அடிச்சு உதைக்க ரெடியாகி கொண்டிருக்கிறார்கள்  என்ற தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் நடக்கும் பதிவாளர்கள் கூட்டத்தில் எனக்கு எதிராக தீர்மானம் எடுக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அதனால் நமக்கும் ஆதரவு வேண்டுமென்று நினைத்து ஆதரவு திரட்ட திருப்பூர் பக்கம் போயிருந்தேன் மக்கா அவர்கள் உழைப்பிற்கு மிகவும் பெயர் போனவர்கள் என்றுதான் கேள்வி பட்டிருக்கிறோம் (ஐய்யாஆஆ திருப்பூர்காரங்க நம்மல அடிக்க வரமாட்டாங்களே)அவங்க ரொம்ப நக்கலுக்கும் பெயர் போனவர்கள் என்பது அவர்களிடம் பேசிய போதுதான் தெரிந்தது,

திருப்பூர்காரர்களுக்கு எக்ஸ்போர்ட் இம்போர்ட் பற்றி மிகவும் நன்றாக தெரியும். அதனால் அவர்களிடம் பேச்சு கொடுத்து
அவர்களிடம் இருந்து நிறைய விஷயம் கற்று. ,நாமவும் எக்ஸ்போர்ட் இம்போர்ட் பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்று, அவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து, முதலில் இந்தியாவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் பற்றி கொஞ்சம் சொல்லுங்க என கேட்டேன்.

அதற்கு அவர்கள் இந்தியாவின் முக்கிய இம்போர்ட் சோனியா காந்தி எக்ஸ்போர்ட் சான்யா மிர்ஸா என்று சொல்லி என்னை பார்த்தார்கள்,


ஐயா இந்த மதுரைத்தமிழன் கிட்ட நக்கல் வேண்டாம் உண்மையில் இந்தியாவில் இருந்து என்ன  எக்ஸ்போர்ட் இம்போர்ட் என்று மீண்டும் கேட்டேன் அவர்கள் இந்த தடவை முகத்தை சீரியாஸாக வைத்து கொண்டு சார் உங்கிட்ட உண்மையை சொல்லிடுறோம் சார் என்று சொல்லி இந்தியாவில் அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்கும் பணத்தை சுவிட்ஸ்ர்லாந்து நாட்டுக்கு  எக்ஸ்போர்ட் பண்ணுறோம் அது மாதிரி அமெரிக்காவில் வீணா போன குப்பைகளை நாங்க  இம்போர்ட்  பண்ணுறோம் என்று சொல்லி சிரித்தார்கள்,

சரி இவர்களை ரொம்ப பேசவிட்டால் நம்ம தலையில் மிளகாய் அரைசுடுவார்கள் என்று எண்ணி சரிவிடுங்க மண்டை ரொம்ப காயுது சரக்கு ஏதும் இருந்தா கொடுங்க என்று கேட்டேன். அதற்கு ஒருத்தர் ஆல்கஹால் மனிதனை சிறிது சிறிதாக கொன்றுவிடும்சார் என்று நம்மகிட்ட டயலாக் விட்டார். அதற்கு நான் அவர்களிடம் சீக்கிரம் சாவதைவிட மெதுவாக சாவுது நல்லதுதானே என்று கேட்டேன்.. அப்ப அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்கள் நானும் விடவில்லை அவர்களிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஆமாம் என்று சொன்னார்கள். அப்ப உங்க மனைவி உங்களை தினமும் சிறிது சிறிதாக கொல்கீறார்களே அப்படி இருந்தும் நீங்கள் அவர்கள் கூட வாழாமல் அவர்களை விட்டா போய்வீட்டிர்கள் என்று கேட்டேன் அதற்கு வாயடைத்தவர்கள்தான் அதன் பிறகு மதுரைத்தமிழா நீங்க தான் எங்க தலைவர் என்று சொல்லி ஏற்றுக் கொண்டனர்...

டிஸ்கி : மனைவியும் மதுவும் ஓன்று இரண்டும் தினம்தினம் நம்மை சிறிதுசிறிதாக கொல்லும் ஆனால் அது இரண்டும் இல்லை என்றால் வாழ்வில் இனிமையில்லை


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

5 comments :

 1. இந்தியா பக்கம் வர்ற யோசனை இல்லையா சகோ நடத்துங்க நடத்துங்க.

  ReplyDelete
 2. ஒரு முடிவோடதான் இருக்கீங்க!

  ReplyDelete
 3. டிஸ்கில சிலருக்கு மது இருந்தால் பிரச்சினை.மாது இல்லாமல் இருந்தால் பிரச்சினை.இன்னும் சிலருக்கு மாது இருந்தால் பிரச்சினை.மது இல்லாமல் இருந்தால் பிரச்சினை.

  ReplyDelete
 4. உலகத்தை நல்ல புரிந்து கொண்டுவிட்டீர்கள் .

  ReplyDelete
 5. நெல்லையை பற்றி ஒன்றும் சொல்லவில்லை! அருவாள் பயமோ?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog