Tuesday, August 7, 2012




பா.. கட்சியின் எதிர்காலமும்  மூத்தத் தலைவர் அத்வானியின்  தந்திர பேச்சும்


செய்தி :பா.., மூத்தத் தலைவர் அத்வானி: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பா.., கட்சிகளைச் சாராத ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது. ஆனால், அது நிலையான ஆட்சி பரிபாலனமாக இருக்காது என்று கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது.

அத்வானி அவர்கள் சொல்லிதான் இது யாருக்கும் தெரிய வேண்டுமென்பதில்லை. இந்தியாவில் உள்ள எந்த சின்னக் குழந்தைகளை கேட்டால் கூட இதை சொல்லிவிடும். காங்கிரஸ் மீண்டும் வர முடியாது என்பதும் எல்லொருக்கும் தெரியும் அப்ப பா.ஜா வந்துவிடுமென்று நினைத்தால் அதற்கும் வாய்ப்பு இல்லை. காரணம் லோக்சபா தேர்தல் என்பது தமிழக சட்டசபை தேர்தல் அல்ல. நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் ஆட்சிக்கு வந்துவிட. மேலும் பா.ஜா கட்சி சிறந்ததொரு எதிர்கட்சியாகவும் செயல்பட வில்லை.

இப்போது அத்வானி காங்கிரஸ், பா.., கட்சிகளைச் சாராத ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என்று கூறிய காரணம் அவரால் கண்டிப்பாக பிரதமாராக முடியாது என்பதுதான் அதற்கு காரணம் அவர்கள் கட்சியில் உள்ள குழப்பம்தான். அடுத்த லோக்சபா தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டான்னு புரிஞ்சதுக்கு அப்பறம் அத்வானியோட பேச்சு மாறிப் போய் கொண்டிருக்கிறது மேலும் எங்கே மோடியை பிரதமர் கேண்டிடேட்டாக அறிவிக்க வேண்டிவருமோ என்று எண்ணி அப்படி அவர் வந்துவிடக் கூடாது என்று எண்ணிதான் இனி பா..,வுக்கு எதிர்காலமே இல்லேங்கறா மாதிரி பேசிண்டிருக்கார்  மேலும் அப்படி ஒரு நிலை வந்தால் மற்ற கட்சிகாரர்களையும் அவருடன் போட்டியிட வைத்து அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்படுத்தி அதில் அவர் நல்லவர் போல குளிர்காய திட்டமிட்டு அதன் பிறகு கட்சி மற்றும் அரசியலில் இருந்து   ஓய்வு பெறப் போறேன்னு அத்வானி, அறிவிச்சாலும், அறிவிச்சுடுவார் என்றே எனக்கு தோன்றுகிறது.

எது எப்படியோ ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது நல்ல எண்ணங்களுடன் மக்களுக்காக பாடுபட ஒரு நல்ல தலைவர்கள் இல்லாதது இருப்பதுதான். அது இந்தியாவின் துரதிர்ஷ்டமே.




அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் அரசியல் கருத்துக்கள் உங்களின் பார்வைக்காக

3 comments:

  1. தேர்தலுக்கு இன்னும் இரு வருடம் உள்ளது எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போமே ... இது வரையிலும் அதைத் தானே செத்தோம் என்கிறீர்களா... ஹி ஹி ஹி இனிமேலும் நாம் அதைத் தானே செய்யப் போகிறோம்

    ReplyDelete
  2. அரசியலில் என்ன வேணா நடக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்

    ReplyDelete
  3. நல்லா அரசியல் பண்றாங்கப்பா!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.