Friday, August 3, 2012


மனைவிகளின் சாம்ராஜ்யம்


என்ன பதிவு போடலாம் என்று நினைத்து கொண்டிருந்த போது போன் சத்தம் கேட்டது . எடுத்தா வேற யாரு வழக்கம் போல மனைவிதான்..(உன் மூஞ்சிக்கு கேர்ள் ஃப்ரண்டா போன் பண்ண போறா என்று என் மைண்ட் வாய்ஸ் சொன்னது ஹூம்ம்ம்..) என்னங்க எனக்கு ரொம்ப பசியா இருக்கு அதுனால எதாவது சமைச்சு வையுங்க...அப்புறம் நாளைக்கு சனிக்கிழமை அதனால என் நண்பர்களை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறேன் அதனால அப்படியே வீட்டை கொஞ்சம் க்ளின் பண்ணி வைச்சுருங்க... அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் அப்படியே குழந்தைகூட உட்கார்ந்து ஹோம் வொர்க்கையும் முடிச்சிடுங்க குழந்தை ஹோம் வொர்க் பண்ணும் போது வாசிங்க் மிஷினில் துணியை போட்டு எடுத்து மடித்து வையுங்க.மீதி வேலையை நான் வந்து பார்த்துகிறேன் என்ன சரியா என்று சொன்னாள். (மீதி என்ன வேலைபாக்கி இருக்குன்னு நினைக்கிறீங்களா டிவியை  ஆன் பண்ணி தமிழ் காமெடி டிவிடியை தூக்க முடியாமல் தூக்கி கஷ்டப்பட்டு போட்டு அதை பார்த்து அழுவதுதான்)பாஸ் சொன்னதற்கு அப்புறம் மறுப்பு சொல்லதான் நம்மால முடியுமா என்று நினைத்தவாறே சிறிது கண்ணை மூடி இந்த வேலைகளுக்கு இடையில் நம்ம பதிவையும் பற்றி மீண்டும் யோசித்தேன். அப்போது இதையே ஒரு பதிவா போட்டுலாமே என்று எண்ணினேன். அப்பதான் மனதில் ஒரு பொறி தோன்றியது இந்த காலத்து மனைவிகள் எல்லாம் இப்படி இருக்கிறாங்களே அந்த காலத்தில் மனைவிகள் எப்படி இருந்திருப்பாங்க என்று வலையில் தேடிய போது எனக்கு இந்த விபரம் கிடைத்தது The Good Wife's Guide From Housekeeping Monthly, 13 May, 1955. அந்த இதழில் வந்த செய்தியை இங்கே படமாக்கி தந்துள்ளேன்... அதை படித்த பின்புதான் புரிந்தது அந்த காலத்தில் பெண்கள் அதன்படி நடந்து வாழ்க்கையை சொர்க்க மாக்கினார்களா என்று நினைக்கையில் மனதில் வந்த ஒரு நொடி சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

மேலும் சிறிது வலையில் சிறிது தேடிய பொழுது இந்த வீடியோ க்ளிப்பும் கிடைத்தது The Good Housewife Guide


இதையெல்லாம் எந்த மக்களோ வலையில் சேமித்து வைத்து நம்ம வயிற்று எரிச்சலை ஏன் தான் அதிகபடுத்துகிறார்களோ....இப்படி எல்லாம் செய்யும் பெண்களை நம் கனவில்தான் பார்க்கலாம். இதையெல்லாம் நீ ஏண்டா மீண்டும் பதிவா போடுற என்று கேட்பவர்களுக்கு இதை பார்த்தாவது மனம் மாறி சில பெண்களாவது( என் மனைவியாவது) தங்கள் கணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது விடுதலை தரமாட்டார்களா என்ற நப்பாசைதான் மச்சி

இப்படிக்கு
மனைவியின் அன்புக்கு அடிமையானவர்களின் சங்கத்தலைவன்
மதுரைத்தமிழன்..

டிஸ்கி : உங்க மனைவி இப்படி நீங்க எழுதறதை பார்த்து கோபப்படமாட்டார்களா என்று கேட்பவர்களுக்கு. என்னிடம் என் மனைவிக்கு பிடித்தது நான் இப்படி கிண்டலாக பேசுவது ,தெரிந்தவர்களுக்கு உதவுவதும்தான்.அதனால நமக்கு அடி உதை எல்லாம் விழுவதில்லை...

அமெரிக்கா வாழ் ஆண்களுக்கு எனது அட்வைஸ் நீங்கள் வேலை செய்யும் இடம் வீட்டிற்கு அருகில் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்களும் என்னை மாதிரிதான் கஷ்டப்பட வேண்டும்


The Good Wife's Guide From Housekeeping Monthly, 13 May, 1955 ல் வந்தது இதுதான் படத்தை பெரிய அளவாக்கி பார்க்க முடியாதவர்களுக்காக


  1.     Have dinner ready. Plan ahead, even the night before, to have a delicious meal ready on time for his return. This is a way of letting him know that you have be thinking about him and are concerned about his needs. Most men are hungry when they get home and the prospect of a good meal is part of the warm welcome needed.
  2.     Prepare yourself. Take 15 minutes to rest so you'll be refreshed when he arrives. Touch up your make-up, put a ribbon in your hair and be fresh-looking. He has just been with a lot of work-weary people.
  3.     Be a little gay and a little more interesting for him. His boring day may need a lift and one of your duties is to provide it.
  4.     Clear away the clutter. Make one last trip through the main part of the house just before your husband arrives. Run a dustcloth over the tables.
  5.     During the cooler months of the year you should prepare and light a fire for him to unwind by. Your husband will feel he has reached a haven of rest and order, and it will give you a lift too. After all, catering to his comfort will provide you with immense personal satisfaction.
  6.     Minimize all noise. At the time of his arrival, eliminate all noise of the washer, dryer or vacuum. Encourage the children to be quiet.
  7.     Be happy to see him.
  8.     Greet him with a warm smile and show sincerity in your desire to please him.
  9.     Listen to him. You may have a dozen important things to tell him, but the moment of his arrival is not the time. Let him talk first - remember, his topics of conversation are more important than yours.
  10.     Don't greet him with complaints and problems.
  11.     Don't complain if he's late for dinner or even if he stays out all night. Count this as minor compared to what he might have gone through at work.
  12.     Make him comfortable. Have him lean back in a comfortable chair or lie him down in the bedroom. Have a cool or warm drink ready for him.
  13.     Arrange his pillow and offer to take off his shoes. Speak in a low, soothing and pleasant voice.
  14.     Don't ask him questions about his actions or question his judgment or integrity. Remember, he is the master of the house and as such will always exercise his will with fairness and truthfulness. You have no right to question him.
  15.     A good wife always knows her place.

17 comments:

  1. ஹா..ஹா... நடத்துங்க... நடத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. என்ன மாதிரிதான் நீங்களுமா?

      Delete
  2. உங்க சோகம் பெரும் சோகமா இருக்கும் போல

    ReplyDelete
    Replies
    1. நான் நடக்கும் உண்மையை நகைச்சுவையாக எழுதினா அதை படிச்சிட்டு உங்க சோகம் பெரும் சோகமா இருக்கும் போல என்று சொல்லுகிறீர்களே/// ஹூம்ம்ம்ம்ம்

      Delete
    2. //Avargal UnmaigalAugust 3, 2012 5:03 PMஉங்கள் பதிவு நன்றாக உள்ளது. ஆனால் அதில் ஒரு சின்ன திருத்தம் எங்கெல்லாம் நீங்கள் கணவன் என்று போட்டு இருக்கிறீர்களோ அங்கெல்லாம் மனைவி என்று வந்திருக்க வேண்டும் மற்றபடி நீங்கள் சொல்லவதெல்லாம் மிகச் சரியே//

      இப்படி ஒரு கருத்தை நீங்க பதிவு பண்ணி உள்ளீர்களா அதை படித்து விட்டு உங்க பிளாக் பக்கம் வந்தேனா - உங்கள் பதிவுவும் அந்த கமன்டும் (கோ இன்சிடென்ட்) - அதான் நான் நகைசுவையாகா அப்படி கமன்ட் போட்டேன் ஹி ஹி ஹி

      Delete
  3. உங்கள் மனைவி சொன்னதும் நீங்கள் செய்ததும் கனவு தானே!
    உண்மையில் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    இன்றும் எல்லா வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வேலைக்கு போகும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.
    ஆடி, பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது
    ஆணும் பெண்ணும் சேராவிட்டால் சுவை இருக்காது //
    என்று அன்றே கவிஞன் சொல்லி இருக்கிறார்.
    இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் இப்படி இருந்தால் அன்பு தளைத்தோங்கும்.

    ReplyDelete
    Replies
    1. ///உங்கள் மனைவி சொன்னதும் நீங்கள் செய்ததும் கனவு தானே!///

      நீங்கள் சொல்லியதில் ஒரு திருத்தம்...அது கனவு அல்ல நிஜம் ஆனால் அவள் சொல்லாமலே நான் செய்வேன்

      //உண்மையில் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.//
      நல்ல மனைவி கிடைத்தற்கு நானும் கொடுத்து வைத்தவன்தான்.

      வேலை செய்வதில் எங்கள் இருவருக்கும் மனதளவில் கூட ஏற்றத்தாழ்வுகள் இல்லை

      Delete
  4. ம்ம்ம்... வீட்டுக்கு வீடு வாசல்படி. என்னத்தச் சொல்ல... உங்களின் பெருமூச்சு எனக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாசப்படி எப்படி இருந்தாலும் வீடு நல்லா இருந்தா வாழ்வில் சந்தோஷமே...

      Delete
  5. பொண்ணுகள் வேலைக்கு போயி ஆண்கள் போல சம்பாதிதுக்கொடுக்குராங்க இல்லே அது போல ஆண்கள் பெண்களுக்கு ஹெல்ப் பண்ணுவது சர்யான விஷயம் தானே.?

    ReplyDelete
    Replies
    1. நான் தவறு என்று சொல்லவில்லை அம்மா... அந்த காலத்தில் பெண்களின் நிலையும் இந்த காலப் பெண்களின் நிலையையும் சற்று நகைச்சுவையாக சொல்ல முயற்சித்து இருக்கிறேன்.அவ்வளவுதான். எங்கள் திருமணம் காதல் திருமணம்தான். அதானல் அவள் அதிகம் கஷ்டப்படக்கூடாது என நான் நினைக்க அவளோ நான் அதிகம் கஷ்டப்படக் கூடாது என்று அவள் நினைக்க இப்படியாக எங்கள் வாழ்க்கை மிக இனிமையாக போய் கொண்டிருக்கின்றன...

      Delete
  6. இப்படியெல்லாம் கூட ஆண்கள் வேலை செய்றாங்களா என்னால நம்பவே முடியலங்க நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்திய ஆண்கள் இந்த ஜெனரேஷனில் வீட்டிற்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கின்றனர்.ஆபிஸ் சென்று வருவதுமட்டும் ஆண்கள் வேலை இல்லை......

      இங்கு நடப்பதைதான் சொல்கிறோம் சிறிது நகைச்சுவையாக ஆனால் யாரையும் நம்ம வைப்பதற்காக இதை சொல்லவில்லை.''

      கரண்டு இல்லாத ஊர்ல உட்கார்ந்து கிட்டு ஷாக்கு அடிக்கிறது என்று கதையெல்லாம் விட வேண்டாம்

      Delete
    2. யாருங்க சொன்னது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் கரண்ட் போகுது.
      நாங்க சிங்கார சென்னைல இருக்கோம்.

      Delete
  7. துணி துவைக்கிற வேலை பெண்களொடதா......நிஜமாவா.....அது எப்ப.....



    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜென்மம்

    ReplyDelete
  8. அட ! இப்படியெல்லாம் இருந்திருக்கா!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  9. I'm surprised that none pointed the "Good Husband's Guide..."

    Anyway, found it here.. http://www.andtheylivedhappilyeverafter.com/the-good-husbands-guide.html

    Here is the highlights from the above link..

    Oh .... reply cannot exceed 4096chars... so please read from the above link..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.