உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 10, 2012

உலகமே ஆச்சிரியப்படும் "அந்த" எட்டு பெண்கள்


உலகமே ஆச்சிரியப்படும் "அந்த" எட்டு பெண்கள்


உலகமே அதிய ஆச்சிரியப்படும் பெண்கள் யாரு என்று அறிய நீங்கள் மிக ஆவலாக இருப்பீர்கள் இந்த ஏழுப் பெண்களில் உங்களுக்கு  ஒருத்தரையாவது தெரிந்து இருந்தால் நீங்கள் இந்த உலகில் மிகவும் கொடுத்து வைத்தவர்களில் ஒருவர்.


1. நன்றாக சமைக்க தெரிந்த சிட்டி பொண்ணு.( சமைக்க தெரியுதோ இல்லையோ கிடைக்கும் உணவை குறை சொல்லமல் சாப்பிட்டாலும் அதுவும் அதிசயம் தானே?)

2. கணவர் பாக்கெட்டில் பணம் எடுக்காத மனைவி ( இப்படி எடுப்பது அந்த காலம். கணவன் தந்த பணத்தில் அவனின் கைச் செல்விற்கு சிறிதளாவாவது பணம் தந்தால் அவளும் அதிசயப் பெண்ணே)

3. தன் டெலிபோன் பில்லுக்கு தானே பணம் கட்டும் பெண் ( பில்லுக்கு நாம் பணம் கொடுத்தாலும் அதையாவது தானே போய் கட்டினால் அந்தப் பெண்ணும் அதிசயப் பெண்ணே.

4. மேக்கப் போடாமல் வெளி வரும் பெண் (ஐயைய்யோ அப்படி எல்லாம் தவறு செய்துவீடாதிர்கள் நாட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் ஹார்ட்டடாக் வந்து செத்துவிடுவார்கள்)

5. ( எலே மதுர ஷாப்பிங்க போவது ஒல்டு பேஷண்டா இப்போது எல்லாம் ஆன்லைன் மூலமவே நம் பணதிற்கு வெடிவைத்துவிடுவார்கள்)

6. என் வாழ்க்கையில் நான் காதலித்தது ஒரே ஒரு பையன்தான் என்று சொல்லும் பெண்( ஹேய் மதுர எதாவது நடக்க கூடிய காரியம் பற்றி ஏதாவது பேசுப்பா)
7. 2 பெண்கள் அருகருகே இருந்த போதிலும் பேசாமல் அமைதியாக இருப்பவர்கள்.( ஏலே மதுர சூரியன் கூட மேற்கில் உதிக்கும் ஆனால் இது மட்டும் நடக்க வாய்ப்பு இல்லை.)

8.கவிதை, சமையல் குறிப்பு, பெண்ணுரிமை பற்றி பேசதா பெண் பதிவாளர்கள் இருப்பதும் உலக அதிசயமே(ஏலே மதுர நீ இதோட இப்போ நிறுத்த போறியா இல்லை அடிபட்டு சாகப் போறியா)


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிண்டல்கள் நக்கல்கள் நீங்கள் நகைக்கமட்டுமே

15 comments :

 1. பொம்பளங்க கோபத்தை சம்பாதிக்காதிங்க நல்லது இல்ல சொல்லிட்டேன் ஆமா.

  ReplyDelete
 2. நல்லதொரு கற்பனை... ஹா... ஹா...

  ReplyDelete
 3. //பெண்ணுரிமை பற்றி பேசதா பெண் பதிவாளர்கள்// அப்படி சிலபேராவது வந்திருக்கிறார்களே, அதற்கவே மகிழ வேண்டுமே..

  ReplyDelete
 4. கொஞ்சம் பொறுங்கள்.. உலகமே ஆச்சரியப்படும் ஆண்கள் பற்றி ஒரு பதிவு வருகிறது. ஆச்சிரியம் இல்லை சார்..ஆச்சரியம்

  ReplyDelete
 5. வணக்கம் அவர்கள் உண்மைகள் மதுரைகாரரே. விகடன் வலை ஓசை மதுரை பக்கத்துல இந்த வாரம் உங்க அவர்கள் உண்மைகள்தான். வாழ்த்துக்கள். தூள் கிளப்புங்க.

  ReplyDelete
 6. அட இப்புடி ஏமாத்தி புட்டீங்களே!

  இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 7. என்ன தைரியம்!உங்க நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 8. கட்ட துரைக்கு கட்டம் சரியில்லையோ

  ReplyDelete
 9. கட்ட துரைக்கு கட்டம் சரியில்லையோ

  ReplyDelete
 10. //கணவர் பாக்கெட்டில் பணம் எடுக்காத மனைவி ( இப்படி எடுப்பது அந்த காலம். கணவன் தந்த பணத்தில் அவனின் கைச் செல்விற்கு சிறிதளாவாவது பணம் தந்தால் அவளும் அதிசயப் பெண்ணே)//

  சொந்த அனுபவமோ

  ReplyDelete
 11. ஹா ஹா, உங்க காமடிக்கு வர வர அளவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது...

  ReplyDelete
 12. \\இந்த ஏழுப் பெண்களில் உங்களுக்கு ஒருத்தரையாவது தெரிந்து இருந்தால் நீங்கள் இந்த உலகில் மிகவும் கொடுத்து வைத்தவர்களில் ஒருவர்.\\ எட்டு பேர்னு சொல்லிட்டு இங்க என்ன ஏழு? பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்னு கேட்டு அதற்க்கு பதில் நாலு, மூணு, ரெண்டு ன்னு சொன்ன கதையா இருக்கு!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog