உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 29, 2012

பதிவுலகில் இருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு!!!
பதிவுலகில் இருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு!!!

பதிவுலகில் இருந்து விடை பெறுகிறேன்....உங்களுக்கு நேரம் இருந்தால் விடை கொடுங்கள்


தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோன்னு  அடிச்சுப் பிடிச்சு எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு, இவனுக்கு இப்ப என்னாச்சுனு ?கேள்வியோட பதட்டமா வந்திருப்பீங்க.  மேலே படிங்க அப்புறம் நான் விடை பெறும் காரணம் புரியும்.

காதலி இறந்தால் காதலன் புதிய காதலியை தேடிச் செல்கிறான்.ஆனால் காதலன் இறந்தால் காதலியும்  அவனுடன் செல்ல ஆசைப்படுகிறாள் . அது எதற்குங்க? தன் காதலன் இல்லா உலகில் வாழ  இஷ்டமில்லாததாலா அல்லது மேலுலகம் சென்றாலும் அவன் நிம்மதியாக இருந்துவிடக் கூடாது என்பதாலா?

பெண்கள் அழகாக இருப்பதால் சேலை கட்டுகிறார்களா? அல்லது சேலை கட்டுவதால் அழகாக இருக்கிறார்களா?

ஆண்கள் மோசமாக இருப்பதால் பெண்கள் எப்போதும் கத்திக் கொண்டிருக்கிறார்களா அல்லது அவர்கள் கத்திக் கொண்டிருப்பதால் ஆண்கள் மோசமாக ஆகி கொண்டிருக்கிறார்களா?

அட என்ன இப்படி எனக்கு கிறுக்குதனமான கேள்விகள் எல்லாம் தோன்றுகிறது...( ஹேய் அது யாருப்பா நீ கிறுக்குதான் என்பது எங்களுக்கு எல்லாம் நல்லா தெரியுமே என்று நீங்க புத்திசாலினா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க)

உங்களுக்கு இதற்கு விடை தெரிந்தால் எனக்கு பின்னுட்டத்தின் மூலம் விடை அனுப்பவும்.

இதுதாங்க நான் பதிவுலகத்தில் இருந்து விடை(பதில்) பெறும் முறை...ஆனா நீங்க வேற ஏதாவது நினைத்து வந்திருந்தா அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு சிக்கிரமா நீங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்க நான் விட்டுவிடுவேனா என்ன?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

47 comments :

 1. Replies
  1. என்ன நான் வலைத்தளம் விட்டு போகாததைதான் கொடுமை என்கிறீர்களா? ஹீ.ஹீ

   Delete
 2. முடியல .... !!!

  ReplyDelete
  Replies
  1. ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ

   Delete
 3. .//.பதிவுலகில் இருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு!!! //
  யாரு"
  "யாரோ?"

  ReplyDelete
  Replies
  1. யார் யாரோ போறாங்க இவன் போகாம கழுத்தை அருக்கிறான் என்கிறீர்களா?

   Delete
 4. கொடியசைந்ததும் காற்று வந்ததா
  காற்று வந்ததும் கொடியசைந்ததா
  என்பதுமாதிரியான கேள்வி இது
  சில சமயம் இப்படித்தான்
  சிலாமயம் அப்படித்தான்
  ஆனாலும் பெரும்பாலான சமயங்க்களில்
  அப்படித்தான்
  சுவாரஸ்யமான பதிவு
  தலைப்பைப்போலவே

  ReplyDelete
  Replies
  1. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முதல் புத்திசாலி நீங்கதான் சார் வேற யாரு எல்லாம் உங்க லிஸ்டுல வந்து சேர்ராங்கண்ணு பார்ப்போம்.உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 5. Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. Replies
  1. ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான் இந்த மாதிரி ஒரு கிறுக்குதனம்

   Delete
 7. என்னா ஒரு ட்ரிக்... நீங்க ‘விடை’ பெறும் விதம் சூப்பருங்கோ. ரமணி ஸார் சொன்ன அழகான விடைதான் என்னுடையதும்.

  ReplyDelete
  Replies
  1. ஒகே நீங்க ரமணி சாரின் லிஸ்ட்லதான் நீங்க சேரணும்....என் லிஸ்ட்ல யாரவது வராங்களான்னு பார்ப்போம்

   Delete
 8. உங்களை அவ்வளவு சீக்கிரம் “விடை பெற” விடமாட்டோம் தல ... (எனக்கு பதில் தெரியாதுல்ல? அதான்)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஆஹா நம்ம லிஸ்ட்ல சேர ஒரு ஆளு வந்தாச்சு....ஆஹா ஆஹா

   Delete
 9. நல்ல நகைச்சுவை பதிவு.
  சந்தோஷமாய் இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 10. Replies
  1. சரி சரி ரொம்ப நேரம் முழித்து கொண்டு இருக்காதீங்க அப்புறம் உங்க பதிவுல "நல்ல" படம் போட நேரம் இருக்காது..சீக்கிரம்

   Delete
 11. இப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க பாஸ்........... நான் அலறிட்டேன்......

  ReplyDelete
 12. ஆஹா எப்படில்லாம் தலைப்பு தேத்துராங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான்

   Delete
 13. Replies
  1. நான் போனா நீங்க சந்தோஷமா இருப்பிங்க அப்படி இருக்க விட்டுடுவேனா நான்

   Delete
 14. அண்ணே...ஏன்னே இந்த கொலைவெறி.... தலைப்பை பார்த்ததும் என்னாச்சு இவருக்கு என்று பதைபதைப்புடன் ஓடி வந்தால் நல்லா கொடுக்கறீங்கண்னே பல்பு....ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுல நீங்க கொடுத்த பல்பு மேட்டர்தான் இப்படி என்னை பல்பு கொடுக்க வைச்சது சகோ

   Delete
 15. ஆமாங்க பயந்தே போய்ட்டேன். ஏன் ஏன் இப்படி?

  ReplyDelete
  Replies
  1. நீங்களாவது பயப்படுற ஆளாவது....

   Delete
  2. பதிவு போட்டு காத்திருந்தேன் எங்கடா நம்ம சகோ என்று கடைசியில வந்து கருத்து சொல்லிட்டுங்க.. நீங்க மட்டும் கருத்து சொல்லாமா இருந்திருந்தா நான் என் வலைப்பக்கம் திரும்பி வந்திருக்க மாட்டேன். இப்ப நீங்க என்னை திரும்ப வைச்சீட்டிங்க சசி

   Delete
 16. I will miss reading one of the good blogs.

  ReplyDelete
  Replies
  1. I am not leaving ….so you can come any time and read again

   Delete
 17. ரொம்பவே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டீங்க! பதிவு இப்படியும் போடலாம்னு தெரிஞ்சுகிட்டேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சொல்லுறதை கொஞ்சம் நகைச்சுவையாக் சொன்னால் என்ன பதிவு வேணும்னாலும் போடலாம்

   Delete
 18. எலேய், கோவம் இருந்தா அருவாளை எடுத்து நங்கு நங்குன்னு நாலு கொத்து கொத்து பொருத்துக்குறோம் அதுக்காக இப்பிடியா...? பிச்சிபுடுவேன் பிச்சி.....

  ஆமா....சேலை கட்டுவதால் பேன் அழகா ச்சே ச்சீ பெண் அழகா...? பெண் அழகா இருப்பதால் சேலை அழகா...?

  ரெண்டும் சேர்ந்தால்தான் அழகு....போதுமாய்யா போ போ...ஹி ஹி....

  ReplyDelete
  Replies
  1. அருவாள் உங்க சின்னம் அதை நான் தூக்கினா உங்களுக்கு கோவம் வந்துடும் அதுனாலதான் இப்பிடி ஒரு பதிவு..

   நீங்க சொல்லறதை பார்த்தா சேலை கட்டலைன்னா பெண்கள் அழகாக இருப்பதில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது...
   பொண்ணுங்களா இந்த மனோ நீங்க அழகாக இல்லைன்னு சொல்லுறார் ஊருக்கு வந்தா கொஞ்சம் கவனிச்சு அனுப்புங்கம்மா

   Delete
 19. விடை பெற வாழ்த்துகள். vgk

  உங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
  http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
  வருகை தந்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.

  ReplyDelete
 20. Unga pathivai adikkadi padippen. Pinnoottan ettathillai ethuvarai. Eppothuthan pinnoottamidugiren muthalmuraiyaga. Pathivu nandraaga erunthathu. Vaalthukkal.

  ReplyDelete
  Replies
  1. எனது தளத்திற்கு வந்து நீங்கள் படிப்பதே மிக சந்தோஷம் அதற்காக எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். எனது தளத்தின் "பலமே" உங்களை போல வரும் சைலண்ட் ரீடர்கள்தான். படிக்கும் எல்ளொருக்கும் கருத்து சொல்ல வேண்டுமென்று தோன்றினாலும் அதற்கான நேரம் கிடைப்பது மிக அரிது என்று எனக்கு தெரியும். நானும் பல தளங்களுக்கு சென்று வருகிறேன் ஆனால் எல்லாவற்றிற்கும் என்னாலும் பதில் இடமுடிவதில்லை என்பதுதான் உண்மை. நான் எல்லோருக்கும் சொல்வது இதுதான் நேரம் கிடைத்தால் மட்டும் பதில் எழுதுங்கள் என்றுதான்.

   வாழ்க வளமுடன்

   Delete
 21. இப்பதான் தமில்வாசி அதுக்குள்ள இவருமானு வந்தா அப்பாடா ... அப்படி எதுவுமில்லை
  சார் ரெம்ப குறும்ம்பு

  ReplyDelete
 22. Ennudaya pinnoottathukku neengal alitha bathilukkum ungal karuthukkum nandri nanba

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog