உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 18, 2012

ஜெயலலிதாவும் ஆடித் தள்ளுபடியும்
ஜெயலலிதாவும் ஆடித் தள்ளுபடியும் 

மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்

செங்கோட்டையனின் பதவி நீக்கம் ஏன்?
ஆடித் தள்ளுபடிக்கு ஜெயலலிதா அறிவித்த தள்ளுபடி இது.

ஜெயலலிதா அடிக்கடி அமைச்சர்களை  எதற்காக மாற்றுகிறார்?
அப்படி ஒருவர் இல்லையென்றால் கவர்னர் ஒருத்தர் இருப்பதே யாருக்கும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் கவர்னர் வாங்குகிற சம்பளத்திற்கு இந்த வேலை கூட செய்யாமல் இருந்தால் மக்களின் பணம் வீணாக போய்விடும் என்ற காரணம்தான்

சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் ஆசை என்னவா இருக்கும்?
நாம் தமிழக முதல்வர் ஆனால் ஜெயலலிதாவைவிட மிக திறமையாக இந்த அமைச்சர்களை ஆட்டி படைக்கலாம் என்றுதான்.

கொடநாட்டில் ஜெயலலிதா ராவணன் சந்திப்பு பற்றி என்ன சொல்லவறீங்க?
ஜெயலலிதா வணங்குவது ராமர் ஆனால் வரவேற்பது ராவணன் அவ்வளவுதாங்கதங்கள் மீது நடக்கும் சொத்து வழக்குகளை நீடிக்க ஏதாவது காரணம் சொல்லி அதை தள்ளிப் போட முயற்சிக்கும் ஜெயலலிதாவிற்கு வழக்கை மேலும் நீடிக்க காரணம் ஏதாவது சொல்லிதாருங்களேன்?

பெண்களை விசாரிக்க பெண் நீதிபதிதான் வேண்டும் காரணம் ஆண் நீதிபதியின் பார்வை சரியில்லை என்று சொல்லாம், அது போல அரசாங்க வக்கிலையும் பெண் வக்கிலாக நியமிக்க வேண்டும். அதுதான் தர்மம்.


மதியாதார் வாசலில் மிதிக்க கூடாது என்று தமிழ் பெரியவர்கள் கூறி இருக்கிரார்கள். அதனால் பெண்களை மதிக்காமல் குறுக்கு குறுக்காக கேள்வி கேட்கும் வக்கில் இருக்கும் கோர்ட்டிற்கு மானமுள்ள தமிழச்சி வரமாட்டாள் என்ற காரணம் சொல்லி வாய்தா வாங்கலாம்


இலங்கை ராணுவத்துக்கு, சென்னையில் பயிற்சி அளிப்பதை தமிழக காங்கிரஸும் எதிர்க்கிறதுஎன்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறி இருக்கிறாரே?

கூட்டணியில் இருப்பவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பேசினால் கூட்டணி தர்மம் பற்றி பேசும் காங்கிரஸ் .காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து மத்திய அரசு செயலினை எதிர்க்கும்  இந்த ஞானதேசிகர் மீது பிரிவினைவாதம் தூண்டுகிறார் என்று நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்

மற்றவர்களின் கேலிக்கு ஆளாகமல் இருக்க   இந்த வயதான காலத்தில் கலைஞர் செய்ய வேண்டியது என்ன?
ஜெயலலிதா மாதிரி சென்னைக்கு வெளியில் ஒரு பங்களா வாங்கி கட்டி அங்கிருந்து பேக்ஸ் மூலம் மாதம் ஒரு அறிக்கைவிட்டு வுட்டு அடுத்த தேர்தல் வரும் போது வெளியே வந்தால் ஆமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம், அதுமட்டுமில்லாமல் யாருடைய கேலிக்கும் ஆளாகமல் இருக்கலாம்.

என் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் எதுவும் நடக்கவில்லைஎன்று மன்மோகன் கூறியுள்ளது பற்றி?

பொய் பேச விருப்பம் இல்லாததால்தான் அவர் மெளனமாக இருந்தார். அவரை பேச வைத்ததால் பொய் பேசுகிறார். இப்ப சொல்லுங்க அவர் மெளனமாக இருக்க வேண்டுமா அல்லது பேச வேண்டுமா என்று


ஹோட்டல், திருமண மண்டபங்கள்ல ஆண்கள் சமைக்க, வீட்டுச் சமையல் அறையில் மட்டும் பெண்கள் அவஸ்தைப்படுவது ஏன்?
பெண்கள் அவஸ்தைப்படுகிறார்களா? அது எல்லாம் கட்டுக்கதையப்பா...வீட்டுல சாப்பிடுறவனுக்குதான் அந்த அவஸ்தை தெரியும்.அதனால தான் பெரும்பாலும் அநேக ஆண்கள் இரவில் நண்பர்களுடன் வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு லேட்டாக பெண்கள் தூங்கியதும் வருகிறார்கள்.

எங்களது  பிள்ளைகளை மருத்துவர், பொறியாளர், ஆக்க எனக்கு ஆசை எனது கணவருக்கோ ..எஸ்., .பி.ஏஸ். அதிகாரிகள் ஆக்க ஆசை  எந்த ஆசையை நாங்க நிறைவேற்ற வேண்டும் ?

பிள்ளைகளை முதலில் நல்ல மனிதர்களாக வர முதலில் ஆசைப்படுங்கள். அதன் பிறகு அவர்களுக்கு வேண்டிய துறைகளை அவர்களாகவே தேர்தெடுப்பார்கள்.


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின்

6 comments :

 1. பிள்ளைகளை முதலில் நல்ல மனிதர்களாக வர முதலில் ஆசைப்படுங்கள். அதன் பிறகு அவர்களுக்கு வேண்டிய துறைகளை அவர்களாகவே தேர்தெடுப்பார்கள்.//

  நல்ல மனிதர்களாகவும்
  தனக்கானதைத் தானே தேர்ந்தெடுக்கக் கூடிய
  பக்குவம் உள்ளவர்களாகவும் வளர்த்தாலே
  பாதி பிரச்சனைகள் முடிந்த மாதிரிதான்
  மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கள் கண்டு மனம் மகிழ்ந்தேன்.. மிகவும் நன்றி

   Delete
 2. பெரும்பாலான ஆண்கள் இரவில ஹோட்டல்ல சாப்ட்டுட்டு மனைவிகள் தூங்கின பிறகு வர்றாங்களா...? உங்க வீட்டம்மா பதிவுகளை படிக்கறதில்லையா... எப்டி இவ்வளவு தைரியமா எழுதறீங்க. கடைசிக் கேள்வியும் பதிலும் மிகமிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னது பெரும்பாலான ஆண்கள் அதில் நான் இல்லை. இங்குள்ள ஹோட்டல் சாப்பாட்டை விட எனது மனைவி மிக நன்றாக சமைப்பாள்.

   //உங்க வீட்டம்மா பதிவுகளை படிக்கறதில்லையா... //
   எனது குடும்ப நண்பர்கள் யாராவது படித்து விட்டு இந்த பதிவு நல்லா இருக்கே என்று சொல்லும் போது அது அவள் காதில் விழும் போதுமட்டும் வந்து படிப்பாள்

   ///எப்டி இவ்வளவு தைரியமா எழுதறீங்க//.

   தினம் தினம் அடிவாங்கியே உடல் பழகி பயம் எல்லாம் போய்விட்டது
   //கடைசிக் கேள்வியும் பதிலும் மிகமிக அருமை//.

   மிகவும் நன்றி

   Delete
 3. நண்பரே இந்தியாவின் அரசியலை ஒரே பதிவில் துவைத்து ...உலர்த்திவிட்டீர் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கள் கண்டு மனம் மகிழ்ந்தேன்.. மிகவும் நன்றி

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog