Friday, July 13, 2012


@avargal unmaigal


உங்களுக்கு பிளட் பிரஷர் எப்படி அதிகரிக்கிறது? (டாக்டருக்கு கூட தெரியாத தகவல்)


நேற்று ரெகுலர் செக்கப்புக்காக டாக்டர் ஆபிஸ் சென்றேன். முதலில் நர்ஸ் வந்து எல்லா செக்கப் செய்து சாரட்டில் எல்லாவற்றையும் எழுதி டாக்டரின் பார்வைக்காக வைத்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் டாக்டர் வந்துவிடுவார் என்று சொல்லி அந்த நர்ஸ் மறைந்து விட்டார்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து  அந்த சார்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் உங்கள் பிரஷர்தான் மிக அதிகமாக உள்ளது...என்ன ஆச்சு ஊறுகாய் மிக அதிகம் சாப்பிடுகிறீர்களோ? அப்படி இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள்...டென்ஷன் ஆகாதீர்கள், ஒரு மாதம் கழித்து வாருங்கள் அப்போதும் இந்தளவு பிரஷர் இருந்தால் உங்களுக்கு மாத்திரை தான் எழுதித் தரவேண்டும் என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்...


எனக்கு வந்ததே பாருங்கள் கோபம் அந்த டாக்டரின் மேலே இவனுக்கெல்லாம் எவன்டா டாக்டர்  பட்டம் கொடுத்தது என்று..

எனக்கு எதற்கு அந்த டாக்டர் மேலே கோபம் வந்துச்சின்னு கேட்கிறிங்களா?

அது வந்துங்க....

நான் வந்தவுடன் என்னைப் பரிசோதித்த நர்ஸ் மிக மிக அழகானவர். அவர் மிக மென்மையானவர் சிரித்த முகத்துடன் நலம் விசாரிப்பவர். அப்படிப்பட்ட அழகு தேவதையான அந்த நர்ஸ் எனது கையை மென்மையாகப் பிடித்துச் சிரித்தபடி என் முகத்தைப் பார்த்தவாறே இருந்தால் யாருக்குத்தான் பிளட் பிரஷர் ஏறாதுங்க....


@avargal unmaigal
இப்படி செக்கப் பண்ணுணா பிளட் பிரசர் ஏறாம வேற என்ன பண்ணும் மக்கா

இது கூட தெரியாத அந்த டாக்டர் உப்பைக் குறை டென்ஷன் ஆகாதே என்று அட்வைஸ் சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராதுங்க.

நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க...நான் டாக்டர் மேல் கோபப்பட்டது தப்பா?????/


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

14 comments:

  1. இதை இங்கு படிக்கும் சிலருக்கு
    நாமும்தாம் அதிக பீஸ் கொடுத்து
    பரிசோதனை செய்து கொள்கிறோம்
    நமக்கு மட்டும் ஏன் வயதான நர்ஸ்களே
    வாய்க்கிறார்கள் என எண்ணியும்
    பிரஷர் கூட சந்தர்ப்பம் அளித்துவிட்டீர்களே
    வழக்கம்போல் சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் கருத்தை படித்து வாய்விட்டு சிரித்துவிட்டேன். என் மனைவி என் பதிவை படிப்பதைவிட அதற்கு நீங்கள் என்ன கருத்து சொல்கீறிர்கள் என்பதைதான் முதலில் படித்துவிட்டு அதன் பிறகுதான் பதிவையே படிப்பாள்.

    ReplyDelete
  3. ஆஹா ஆஹா - இப்படி செக் அப் பண்னீனா பிரஷ சும்மா கும்முன்னு ஏறுமே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா அதே நேரத்தில் டாக்டர் பில்லும் சும்மா கும்முனு ஏறும்ம்ம்ம் ஒகே தானா

      Delete
  4. சர்தான் உங்களின் கோபம்

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களாவது என் கோபத்தை புரிஞ்சுகிட்டத்தற்கு நன்றி

      Delete
  5. உங்க மனைவிடம் கொஞ்சம் பேச வேண்டுமே.

    ReplyDelete
    Replies
    1. பேச வேண்டுமா அல்லது போட்டுத்தரவேண்டுமா?

      Delete
  6. ஹா ஹா ஹா..

    முதல்ல போட்டுருந்த நர்ஸ் படத்தை பார்த்ததுமே நான் உசாராயிட்டேன் இப்பிடித்தான் ஏதாவது இருக்கும்னு கலக்குங்க :D

    ReplyDelete
    Replies
    1. அப்ப உங்களுக்கு பிரஷர் ஏறலையா?

      Delete
  7. வணக்கம் சார்,இந்த பதிவை படித்ததில் எனக்கும் பிரஷர் ஏறினது என்னவோ உண்மைதான்,நல்ல பதிவு வாழ்த்துக்கள்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமாம் என்ன சார் பதிவுகள் எழுதுறதை அப்படியே நிறுத்தீட்டீங்க

      Delete
  8. ப்ளட் ப்ர்ஷரை ஏத்தி ஃபீஸை புடுங்கறதுதானே டாக்டோரட ஐடியா. அதுக்கும்தானே அழகான நர்ஸ்

    ReplyDelete
    Replies
    1. சில இடத்திலே அழகாக போடாமலே அதிக அளவு கறக்கும் டாக்டர்கள் உண்டு

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.