Sunday, July 8, 2012




கலைஞரின் சிறை நிரப்பும் போராட்டம் பற்றிய அரசியல் கேள்வி பதில்கள்.


பல்சுவைகளை தாங்கி வரும் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்தில் இருந்து இன்று வருவது அரசியல் சுவை .


கலைஞரின் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி?
அது மக்களின் பிரச்சனைக்காக செய்யப்பட்டு இருந்தால் பாராட்டலாம்.


சிறை நிரப்பு போராட்டம் அவசியமா?
கலைஞரைப் பொறுத்தவரை அவசியம்.காரணம் ஆட்சியில் தம் கட்சி இல்லையென்றாலும் தம் கட்சிகாரர்களை ஏதாவது போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களையும் கட்சியில் ஒரு முக்கியமானவர்களாக கருதச் செய்வது. அதன் மூலம் தன் கட்சிகாரர்களை தம் கட்சியில் தொடர்ந்து நீடிக்க செய்து கட்சி ஒட்டுக்களை தொடர்ந்து தக்க வைப்பது. இப்படி செய்வதன் மூலம்தான் அவர் இன்னும் தலைவராக இருக்கிறார்.


சிறை நிரப்பு போராட்டத்தின் மூலம் கலைஞர் கண்ட மற்றொரு வெற்றி என்ன?
சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்க முடியவில்லை என்றாலும்  அவர் கட்சிதான் எதிர்கட்சி என்று தமிழக மக்கள் மனதில் நினைக்க வைத்து விஜயகாந்த் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது.

சிறை நிரப்பு போராட்டம் வெற்றியா? தோல்வியா?
கலைஞரைப் பொறுத்தவரை வெற்றி. ஜெயலலிதாவை பொறுத்தவரை தோல்வி. போலிஸாரைப் பொறுத்தவரை தலைவலி.தினமலரை பொறுத்தவரை கேலி..


கலைஞரின் குடும்ப அரசியலில் சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர் யார்?
கடைசிவரை ஸ்டாலின் தான் கலந்து கொள்வதா இல்லையா என்று ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் இருந்ததால் தோல்வியையும்,  போராட்டம் அறிவித்தவுடன் தான் கோர்ட் பெர்மிஷனுடன் தான் கலந்து கொள்வதாக சொன்ன கனிமொழி அவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் தந்தையின் ஆசிர்வதத்துடனும் கலந்து கொண்டார். இந்த மாத நிலவரப்படி கலைஞரின் குடும்பத்தில் நடக்கும் குடும்ப அரசியலில் கனிமொழி அவர்களின் கை சற்று ஒங்கி உள்ளது.


அரசியலில் விஜயகாந்த் ஒரு அடுத்த ராமதாஸா?
ஆமாம். ஜனாதிபதி தேர்தலில் திமுகவைவிட அதிக அளவு ஒட்டுக்கள் வைத்திருந்தும் ஜனாதிபதி தேர்தலை தமிழக தேர்தலாக எண்ணி அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு இப்போது யாரும் சட்டைபண்ணாத கோமாளியாக ஆகிவிட்டார்..

ராமதாஸ் அவர்கள் நினைப்பது என்ன?
நாமும் கலைஞருக்கு சமமான தலைவர்தான். அவரின் பொண்ணு மட்டும் திகார் ஜெயிலுக்கு போனதாக பெருமை அடிக்க முடியாது இப்ப நம்ம பையனும் திகார் போகப்போறானே என்று நினைப்பார்.


ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டால் இந்த மாதிரி போராட்டத்தை நடத்தி இருப்பாரா?
ஆமாம் அவர் நடத்தி இருப்பார். ஆனால் ஜெயலலிதா பாணி தனி பாணி. அவர் கட்சிகாரர்களை அவர் நடத்தும் போராட்டத்திற்கு அழைக்கமாட்டார். அதற்கு பதிலாக அவரை சுற்றி இருக்கும் குடும்பதினரை அழைத்து மாதம் ஒரு கோயிலுக்கு சென்று அங்கு யாகம் நடத்தி கலைஞருக்கு எதிராக போராட்டம் நடத்திகொண்டு இருப்பார்.


மக்களுக்காக போராட்டம் நடத்த எந்த கட்சி தலைவர்களாக வருவார்களா? அப்படி வந்தால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டா?

மக்களுக்காக போராட்டம் நடத்த வரும் ஒரு தலைவர் வை.கோ அவர்கள். ஆனால் அப்படி நடத்த வரும் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.காரணம் தமிழக மக்களுக்கு மக்கள் பிரச்சனை என்பது யாருடையோவோ பிரச்சனை என்று கருதி ஆதரவு தாராமல் இருந்துவிடுவார்கள் புத்திசாலி தமிழக மக்கள்

கலைஞரின் அடுத்த  போராட்டம் என்ன?
கலைஞரின் அடுத்த  போராட்டம்  பணநிரப்பு போராட்டம்தான். தம் கட்சி ஆளுங்கட்சியாக இல்லாததால் கட்சிக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாததால் கட்சிகார்களிடம் இருந்து பணம் திரட்டும் போராட்டம்தான்.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் பதில் அளிக்கும் அரசியல்  கேள்வி பதில்கள்

5 comments:

  1. \\கலைஞரின் அடுத்த போராட்டம் பணநிரப்பு போராட்டம்தான். தம் கட்சி ஆளுங்கட்சியாக இல்லாததால் கட்சிக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாததால் கட்சிகார்களிடம் இருந்து பணம் திரட்டும் போராட்டம்தான்.\\ சுவிஸ் வங்கியில் வச்சிருக்கும் முப்பதாயிரம் கொடியை கொஞ்சம் வெளியே கொண்டுவந்தா போதும். ஆனா அதுக்கு மனசு வரணுமே. கொள்ளை அடிச்சு தான் பழக்கம் திரும்ப செலவு செய்வது இவர்கள் வரலாற்றிலேயே இல்லை.

    \\காரணம் தமிழக மக்களுக்கு மக்கள் பிரச்சனை என்பது யாருடையோவோ பிரச்சனை என்று கருதி ஆதரவு தாராமல் இருந்துவிடுவார்கள் புத்திசாலி தமிழக மக்கள்\\ 100 % கரெக்ட். ஆனா இது நல்லதுக்கில்லையே.. :((

    ReplyDelete
  2. சரி இதுல மக்கள்தானே ங்கே ங்கே...?

    ReplyDelete
  3. விஜயகாந்த் கட்சியை பின்னுக்குதள்ளிவிட்டது.

    அது என்னவோ உண்மை தான் காப்டனை நம்புவது வீண்

    ReplyDelete
  4. அருமையான அட்டைப்படம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.