Tuesday, July 3, 2012




இங்கே ஆண்களும் அழுகிறார்கள்...

விதவையின் கண்ணிரும் ஆணின் கண்ணிரும்
வெளியே தெரிவதில்லை
காரணம் அவர்கள் அழுவது
விதி என்னும் கடலில் தான்

விதவையின் கண்ணிரும் ஆணின் கண்ணிரும்
நினைத்ததை சாதிக்கும் பெண்களின் கண்ணிர் அல்ல
அது மனத்தில் ஏற்படும் வலியினை அடக்க முடியாததால்
வரும் கண்ணிர்.

விதவையின் கண்ணிரும் ஆணின் கண்ணிரும்
பல நேரங்களில் அடக்கி வைக்கப் படுகிறது...
மழை வரும் நேரங்களில்
மழையில் நனைந்தபடி அந்த கண்ணிர் வெளிப்படும்

பேச மொழி இருந்தும், பேச உதடுகள் இருந்தும் ,பேச முடியாத ஊமையாக.. நாங்கள் இருப்பதால் அழுகின்றோம். எங்களின் அழும் விழிகளை ஆதரவாய் துடைத்திட எங்கள் விரல்களுக்கும் பலமில்லை,

டிஸ்கி :வாழ்க்கையில் ஒன்றும் மட்டும் புரிந்து போனது நல்லவனாய் நீ இருந்தால் உன்னை மற்றவர்கள் அழவைப்பார்கள் ஆனால் கெட்டவனாய் நீ இருந்தால் மற்றவர்களை நீ அழவைப்பாய்.
 
இன்று மனசு சரியில்லை. மனதிற்குள் அழுது கொண்டே என் மனதில் தோன்றியதை இங்கே கிறுக்கியுள்ளேன்.

@}------>--------------------->--------------------------------------

இன்று நான் கேட்ட மற்றொரு பழைய பாடல்.



உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

கண்ணிறேண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அதனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு தானும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தகமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

10 comments:

  1. /இன்று மனசு சரியில்லை. மனதிற்குள் அழுது கொண்டே என் மனதில் தோன்றியதை இங்கே கிறுக்கியுள்ளேன்./ This will also pass soon.

    ReplyDelete
  2. ஐய்யோ என்னாச்சு சகோதரா1 வருந்துகின்றேன். காரணத்தை சொல்லி அழுது இருக்கலாம் தானே?

    ReplyDelete
    Replies
    1. அன்றாட நாம் கேட்கும் பார்க்கும் சில நிகழ்ச்சிகள் நம் மனதை பாதிக்கும் அந்த பாதிப்பின் வெளிப்பாடே இந்த பதிவு.இதை தவிர காரணம் வேறு ஏதும் இல்லை சகோ.

      சந்தோசமாக இருக்கும் நேரத்தில் நகைச்சுவை பதிவுகளும் நார்மலாக இருக்கும் நேரத்தில் நார்மலான பதிவும் மனசு சங்கடப்படும் நேரத்தில் சோகமான பதிவும் வெளியிடுவது என் பழக்கம். அப்போது தான் நம் பதிவில் ஒரு துடிப்பு இருக்கும்

      Delete
  3. ஆணாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அழுவது என்பதற்கு விதிவிலக்கான ஆண்கள் மிகமிகக் குறைவு போலும். என்னாச்சுப்பா மனசுக்கு... இன்னைக்கு இவ்வளவு சோகம் ததும்புதே...

    ReplyDelete
    Replies
    1. சந்தோசமாக இருக்கும் நேரத்தில் நகைச்சுவை பதிவுகளும் நார்மலாக இருக்கும் நேரத்தில் நார்மலான பதிவும் மனசு சங்கடப்படும் நேரத்தில் சோகமான பதிவும் வெளியிடுவது என் பழக்கம். அப்போது தான் நம் பதிவில் ஒரு துடிப்பு இருக்கும்

      Delete
  4. உண்மைதான்! ஆண்கள் அழுவது யாருக்கும் தெரிவது இல்லை!

    ReplyDelete
  5. பழைய கமல் பட வசனம் ஒன்று. நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு. காலையில் எல்லாம் சரியாபோகும் ............... கிண்டல் செய்யல பாஸ் ...... எனக்கும் இன்றைய பொழுது கண்ணீர் விடும் படி தான் போச்சி. என்ன செய்ய ............... கமல் பாட்டு சூப்பர் ........ரஜினி ரசிகன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி

      ///நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு. காலையில் எல்லாம் சரியாபோகும் ///
      நீங்க சொல்வதற்கு கருத்து சொல்வதற்கு முன்பே தூங்கி எழுந்திருந்து விட்டேன்.
      ஆமா இவ்வளவு லேட்டாவா கருத்து சொல்வது சார். நீங்க லேட்டா கருத்து சொன்னதும் நல்லதாக போய்விட்டது. இல்லை என்றால் உங்கள் கருத்தை பார்த்ததும் குழம்பிவிட்டேன் நெக்ஸ்ட் டைம் கருத்து சொல்லும் போது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பரே // நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு/// என்ன சாப்பிடுவது சரக்கா? உணவா எபது பற்றி தெளிவாக குறிப்பிடபடவில்லை.




      நல்லா தூங்கிட்டு எழுந்திரிச்சேன் கவலையெல்லாம் போயே போச்சு....ITS GONE......மற்ற மொழியில் நீங்களே மாற்றி சொல்லி கொள்ளுங்கள்

      Delete
  6. enna bro..!

    neenga paarkkaatha pirachanaiyaa!?

    vantha vazhiyr poi vidum...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.