Saturday, July 14, 2012




பில்லா  2 - எனது பார்வையில்

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாக கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று பில்லா கருதினார்.

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஓர் இடத்தில் நின்று கொண்டுஅன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள்என்று கூச்சல் போட்டார்.

பில்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை பில்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட பில்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுமக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த பில்லா ஒரு மகனுக்குத் தந்தையாகிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்

பில்லா-2
பில்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் பில்லாவிடம் வந்துநீதிபதி அவர்களே, நான் இந்த ஊருக்கு புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்க ஊர் ஆள் ஒருவன் என்மீது பாயந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டான், தயவு செய்து கண்டு பிடித்து என் உடமைகளை மீட்டுத் தரவேண்டும்என்று வேண்டிக் கொண்டான்.

நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை. இது வெளியூர்த் திருடனின் வேலைதான்என்றார் பில்லா.

இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா!” என்று வெளியூர்க்காரன் வியப்போடு கேட்டான்.

எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான் என்று பில்லா கூறினார்.


என்னங்க நீங்க அஜித் நடிச்ச பில்லா 2 பட விமர்சனம் என்று நினைத்து வந்தா அதுக்கு நான் பொறுப்பல்ல.. நான் முல்லா கதையை தான் சொல்ல வந்தேன் ஆனால் பில்லா 2 பட விமர்சனத்தை அதிக அளவு கடந்த இரு தினங்களில் வலைத்தளங்களில் படித்த பாதிப்பினால் இங்கே டைப் மிஸ்டேக்கினால் முல்லா இங்கே பில்லாவாகிவிட்டார் அவ்வளவுதானுங்க

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

12 comments:

  1. டைமிங் காமடி கருத்துடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. எங்கே படத்திற்கான விமர்சனமோ என்று நினைத்தேன், பில்லாவை முல்லா ஆக்கிவிடீர்கள், இருந்தும் உங்கள் எழுத்துகளை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....நமக்கும் சினிமாவிமர்சனத்திற்கும் ரொம்பபபபபபப தூரம்.....நான் தமிழ்படங்களை பார்ப்பதற்குள் அது உங்களுக்கு எல்லாம் மிகப் பழையபடமாகி இருக்கும்

      Delete
  3. முல்லா, பில்லா செம காமெடி சார்...

    ReplyDelete
    Replies
    1. பில்லா விமர்சனங்களை படித்த போது உடனே எனக்கு மனதில் வந்தது முல்லாதான் அதன் விளைவே இந்த பதிவு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. ஹி ஹி ஹி.. பல்பானந்தான்னு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கேன்.. அப்பப்ப எல்லாருக்கும் ஒரு பல்பு குடுக்குறீங்களே :D

    ReplyDelete
    Replies
    1. உங்களை எனது முதல் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      Delete
  5. எங்களுக்கெல்லாம் குல்லா போட்டுடுட்டீங்கலே

    ReplyDelete
    Replies
    1. வெயில் ஜாஸ்தி அதுதான் இந்த குல்லா முயற்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  6. பில்லாவான முல்லா கதைகள் அருமை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.