Saturday, June 23, 2012




அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா? அப்ப படியுங்கள் இதை)

ஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான் நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயை வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

உடனே அந்த பணக்காரர் அறிவித்தார் இப்போதும் பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார்கள். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடி பாம்பை பிடித்து கொடுத்தார்கள் . ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்பதே மிக அறியதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

அந்த பணக்காரர் விடவில்லை மீண்டும் அறிவித்தார்  இப்போது 50 ரூபாய் தருவதாக .உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்து கொடுத்தார்கள். இப்போது பாம்பை காண்பதே அறிதாகிவிட்டது. அவர் இப்போதும்  விடவில்லை.எனக்கு இன்னும் அதிக பாம்புகள் தேவை மேலும் பாம்பு கிடைப்பது அறிதாகிவிட்டதால் 100 ரூபாய தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசர அவசரமாக இன்னொரு பிஸினஸ் விஷயமாக மற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன் அதனால் உங்களாள் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி நான் வரும் வரைக்கு என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி என்றுவிட்டார்.

அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு மக்களே இங்கே பாருங்கள் அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அத்ற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இருக்காது. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன். இந்த பாம்புக்கலை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன் பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிரது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன்.அவர் வந்ததும் இதே பாம்பை நீங்கள் அவரிடம் 100 ரூபாய்க்கு விற்று விடுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்த பணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி குவித்தார்கள்.

எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளை வருகிறார் அதனால் நான் இன்று போகிறேன் என்று சொல்லி பொய்விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்பு மட்டும்தான்.


மக்காஸ் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்டாக் மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்று. இப்படிதான் மக்கா பல தொழில் அதிபர்கள் பாம்புக்கு பதிலாக புது புது பொருட்களையும் திட்ட்ங்களை கூறியும் மக்களை ஸ்டாக் மார்க்கெட்டில் ஏமாற்றி வருகிறார்கள்.

இப்ப சொல்லுங்க  நீங்க ஏமாந்தவர்களில் ஒருவரா அல்லது இதை படித்தும் வருங்காலத்தில் ஏமாறக்கூடிய ஆட்களில் ஒருவரா?


9 comments:

  1. இப்ப சொல்லுங்க நீங்க ஏமாந்தவர்களில் ஒருவரா அல்லது இதை படித்தும் வருங்காலத்தில் ஏமாறக்கூடிய ஆட்களில் ஒருவரா?//
    ஏமாந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்
    அருமையான கதையுடன் கூடிய விளக்கம்
    பகிர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பாம்பு பிடிக்கும் அளவுக்கு தைரியம் இல்லங்க . அதனால தப்பிச்சேன் .
    சிந்திக்க வைக்கும் பதிவு .

    ReplyDelete
  3. விரைவில் அம்பானியாக ஆசை அதனால் தான் காளையில் பயணிக்கிறேன்... ஏமாந்தவர்களின் ஒருவனாக....

    ReplyDelete
  4. விரைவில் அம்பானியாக ஆசை அதனால் தான் காளையில் பயணிக்கிறேன்... ஏமாந்தவர்களின் ஒருவனாக....

    ReplyDelete
  5. நான் இதுவரையில் ஏமாறவில்லை நண்பா. இப்ப இந்த அருமையான கதையப் படிச்சுட்டதால இனியும் ஏமாற மாட்டேன். ரொம்ப நன்றி,

    ReplyDelete
  6. உண்மை. மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறேன்,
    என்ன செய்வது இந்த மாயா உலகில் எலி ஓட்டத்தில் தோற்று விடக்கூடாது என்பதற்காக.

    ReplyDelete
  7. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்:

    ஒரு கன்பனியின் பங்குகள் பத்து ரூபாய்க்கு விற்கப் படுகிறது. கொஞ்ச வருடங்களில் படிப்படியாக மதிப்பு உயர்ந்து நாலாயிரம் வரை கூடப் போகிறது.

    ஏன் சந்தேகம் இங்கேதான். ஏன் பங்கு விலை உயர்கிறது. அவர்கள் டிவிடென்ட் கொடுப்பார்கள். சில சமயம் எக்ஸ்ட்ரா பங்குகளையும் கொடுப்பார்கள்.

    சரி, ஒரு வருடத்திற்கு 100% டிவிடென்ட் கொடுப்பதாகவும் [இது நல்ல கம்பனிக்கு 15% இருக்கலாம்] , ஒரு பங்குக்கு இன்னொரு பங்கு எக்ஸ்ட்ரா கொடுப்பதாகவுமே வைத்துக் கொள்ளுங்கள் [உண்மையில் ஆயிரம் பங்குகளுக்கு எப்பவாவது ஐம்பது பங்குகளைக் கொடுக்கலாம்] , இரண்டையும் சேர்த்தாலும் இருபது ரூபாய் தானே வருகிறது? அதுக்கு எதுக்குடா நாலாயிரம் ரூபாய் குடுத்து அந்த பங்கை வாங்குறீங்க?

    இதுக்கு ஒரு நாதாரியும் பதில் சொல்ல மாட்டேங்கிறான், உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.