Monday, June 18, 2012


எனக்கு புரியவில்லை...அப்ப உங்களுக்கு?



நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு நம்மிடம் விடை இருக்காது, அதனால் அதை தீர்க்க இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா என்று நமது மண்டையை போட்டு உடைத்து கொண்டிருப்போம்.அது மட்டுமல்லாமல் நமது மனதையும் உடலையும் போட்டு வாட்டி வறுத்திக் கொண்டிருபோம்.


அதே சமயத்தில் மற்றொருவருக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு மட்டும் நம்மிடம் கைவசம் பல விடைகள் இருக்கும். அதை அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ நாம் மடை திறந்த வெள்ளம் போல அள்ளிவிட்டு கொண்டிருப்போம்

அதுதான் எப்படி என்று எனக்கு புரியவில்லை...அப்ப உங்களுக்கு?

உங்களுக்கு புரிஞ்சா கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்களேன்

12 comments:

  1. // நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு நம்மிடம் விடைஇருக்காது, // ஆரம்பமே அருமை

    நமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்

    ReplyDelete
  2. பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .

    ReplyDelete
  3. இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு

    பயம்

    ReplyDelete
  4. பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.

    அது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். :)

    ReplyDelete
  5. ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!

    ReplyDelete
  6. அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது
    பயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு
    இழப்பு இல்லை அல்லவா
    அந்த தைரியம்தான்

    ReplyDelete
  7. @ சீனு உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //நமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்///

    பல காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்

    ReplyDelete
  8. @ சசிகலா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .///


    படிச்சவங்களுக்கு ஒன்றும் தெரியாதுங்க அனுபவசாலிதான் நல்ல தீர்வு சொல்வான். நீங்க மிகப்பெரிய அனுபவசாலி என்று உங்கள் வலைத்தளம் வந்து பார்த்தாலே தெரியுதுங்க

    ReplyDelete
  9. @மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    //இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு

    பயம்///

    ReplyDelete
  10. @ வரலாற்று சுவடுகள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ///பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.

    அது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.///


    பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து இதுவும் மிகஸ் சிறந்த கருத்துகளில் ஒன்று. நீங்கள் நன்றாக சிந்திக்கிறிர்கள் நண்பரே

    ReplyDelete
  11. @ நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ///ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!///


    காசா பணமா எண்ணி பார்ப்பதற்கு

    ReplyDelete
  12. @ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது
    பயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு
    இழப்பு இல்லை அல்லவா
    அந்த தைரியம்தான்//

    நான் இந்த பதிவை போடும் போது என் மனதில் உதித்ததும் இதுதான் அதை யார் இங்கே வந்து சொல்லுவார்கள் என்று பார்த்தால் நான் நினைத்தவாறே நீங்கள் வந்து அழகாக சொல்லியிருக்கிறிர்கள். நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.