Sunday, June 10, 2012




உங்கள் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கா? இதைப் படித்து பார்த்து சொல்லுங்களேன்


எனக்கு என்னாச்சு?


என் நண்பர்கள் என்னை உரிமையோடு  டீ/டா என்று போட்டு கூப்பிடும் போது என்ன மரியாதை இல்லாமல் கூப்பிடுகிறார்கள் என்று நினைக்கும் நான் . அப்படி நீ என்னை உரிமையோடு  டீ/டா என்று போட்டு கூப்பிடும் போது மட்டும் மனம் சந்தோஷத்தில் குதிக்கிறதே ஏன்?

நண்பர்கள் ரோஜா கொடுக்கும் போது அது சாதாரணமான ரோஜாவாக தெரியும் எனக்கு . நீ கொடுக்கும் ரோஜா மலர் மட்டும் அற்புத மலராக தோன்றி மனம் எல்லாம் பூவாக மாறிவிடுகிறதே ஏன்?

நண்பர்கள் தொடும் போது எந்த உணர்வும் தோன்றாத எனக்கு நீ தொடும் போது மட்டும் சிலிர்த்து போகிறதே ஏன்?


திரைபடம் பார்க்கும் போது என் மீது தூங்கி விழும் நண்பர்களிடம் எருமைமாடு மாதிரி மேலே தூங்கி விழாதே என்று சொல்லும் நான். நீ என் மீது  படம் முடியும்வரை தூங்கி விழுந்தாலும் என்னடா படம் சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று நினைக்க தோன்றுகிறதே ஏன்?

போட்டோ எடுக்கும் போது நண்பர்கள் அருகில் நின்று தோளில் கையைப்போட்டு நிற்கும் போது சனியனே கொஞ்சம் என்னை மறைக்காமல் தள்ளி இருக்கிறாயா என்று சொல்லும் நான். நீ அருகில் நின்ற போதிலும் நீ தள்ளி இருப்பதாக நினைத்து உன்னை கட்டிப்பிடித்து நிற்க தோன்றுகிறதே ஏன்?


நண்பர்களுடன் சாலையை கடக்கும் போது கைவிசி செல்ல நினைக்கும் நான். நீ அருகில் இருக்கும் நேரம் சாலையை கடக்கும் போது குழந்தை போல உன் கையை பிடித்து நடக்க வேண்டுமென்று போலிருக்கிறதே ஏன்?


நண்பர்கள் என்னை பார்க்கும் போது எதுவும் நடக்காத எனக்கு நீ பார்க்கும் அந்த ஒரு பார்வையில் என் இதயம் வயிறு வரை ஒரு நொடியில் ரோலர்கோஸ்டர் போல இறங்கி ஏறுகிறதே ஏன்?

ஏன்?ஏன்?ஏன்

எனக்கு என்ன ஆச்சுப்பா.....இதை படித்த நீங்கள் கொஞ்சம் சொல்லிவிட்டுதான் போங்களேனப்பா? ப்ளிஸ்


எனக்கு என்ன ஆச்சுன்னு புரியாதவங்க தொடர்ந்து  படிக்கவும்

ஒண்ணுமில்லைங்க பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பொண்ணுக்கு  கடவுள் பக்தி மிக அதிகம். அவ அவளோடைய இதயத்தை கடவுளிடம்  ஒப்படைத்தாள். அந்த கடவுளோ அந்த இதயத்தை ஒரு நல்லவனிடம் கொடுத்தார். அந்த நல்லவன் வேறுயாரும் இல்லைங்க அது நான் தாங்க. அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புதான் நான் மேலே எழுதியது....


ஆமாம் இதெல்லாம் எதுக்குடா எங்ககிட்ட சொல்லுறீங்க  என்று கேட்கிறீர்களா ?அது ஒன்றுமில்லைங்க இப்படியெல்லாம் நினைச்சு நினைச்சு காதலிச்ச  என் காதல் 'காவியம்' ஆகவில்லை காரணம் அது கல்யாணத்தில் முடிந்து விட்டது...

அட  அப்படியா காதலிச்ச பொண்ண கட்டிய முட்டாள் நீ தானா என்று கேட்கிறீர்களா?  அது உண்மைதாங்க ஆனா காதலிச்ச எல்லாப் பொண்ணையும் கட்ட முடியலைன்னு வருத்தம்தான் ஆனால் காதலிச்ச பொண்ணுகளில் இருந்து ஒருத்தியை செலக்ட் பண்ணி கல்யாணம் செய்த ஜென்டில்மேன் நான்தாங்க. அந்த ஜென்டில்மேனின் கல்யாண நாள் ( ஜூன் 10 )இன்றுதான் அதன்  விளைவே இந்த மொக்கை பதிவு

காதல் அல்லது  அரேஞ்டு மேரேஜ் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கலாம் . அது எல்லாம் மறந்து வாழ்வதுதான் வாழ்க்கை, இதுதான் நான் விரும்புவதும் நினைப்பதும்.சில நேரங்களில் நமது துணை நம்மை 'Imperfect' என்ற வார்த்தையை  சொல்லும் போது  என் மனதில் I'm perfect என்று அவள் சொல்வது போலதான் இருக்கிறது.

பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி :அறிவுள்ள ஆண் உங்கள் அறிவை திறப்பான். அழகான ஆண் உங்கள் கண்களை திறப்பான். ஆனால் ஜென்டில்மேன்  உங்கள் இதயத்தை திறப்பான் என் மனைவியின் இதயத்தை நான் திறந்தது போல...

மனைவி எப்ப பாரு லேப்டாப் லேப்டாப்  என்று கத்தியவாறே சப்பாத்தி கட்டையை எடுத்து வராங்க.....அப்ப  நான் வரேங்க வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமுங்க.....

காதலில்
காயம் படுவது இயல்பே
காரணம் அதில்
நாம் விழுவதுதான்
ஆனால்
அதனால் ஏற்படும்
வலியும் சுகமாகத்தான் இருக்கிறது

நாம் அடிவாங்குவதற்கு என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது பாருங்க....

டிஸ்கி : இன்று நாங்கள் பார்த்த படம் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் . எனக்கு பிடித்திருந்தது.... சிரிப்பு படங்களுக்கு கூட அழுகும் என் மனைவி இந்த படத்தை பார்த்தும் வழக்கத்தைவிட சிறிது அதிகம் அழுதாள். எனக்கும் சில காட்சிகள் மனதை தொட்டு நெகிழ வைத்தது. என் கண்களில் இருந்து மிக அதிகமல்ல சில சொட்டுகள்மட்டும் கண்ணிர் வந்ததது. அம்புட்டுதாங்க....



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை எனது கிறுக்கல்களை படித்து ரசியுங்கள்..

அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக

7 comments:

  1. உண்மையிலே நீங்க ஜென்டில் மேன் தான்.நல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.

    //சில நேரங்களில் நமது துணை நம்மை 'Imperfect' என்ற வார்த்தையை சொல்லும் போது என் மனதில் I'm perfect என்று அவள் சொல்வது போலதான் இருக்கிறது.//

    இது நச்

    ReplyDelete
  2. @மணிமாறன்

    எனது வலைதளத்திற்கு வருகை தந்ததுமட்டுமல்லாமல் கருத்தும் தெரிவித்த ஜென்டில்மேனுக்கு நன்றி

    ReplyDelete
  3. அழகா சொல்லி இருக்கீங்கோ....அது சரி அது என்ன ஜெண்டில்மேன்...படம் மறந்து போச்சி போல...நடத்தும் ஓய்!

    ReplyDelete
  4. சுவாரசியமான எழுத்து. ஜெண்டிமேன் நண்பருக்கும் தங்கள் காதல் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சுவாரசியமாக இருந்தது காதலித்து திருமணம் செய்வது முட்டாள் தனம் என்றால் அதை நானும் செய்திருக்கிறேன் .
    அனுபவி ராஜா.........
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆகா அழகான வரிகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.