Wednesday, June 6, 2012




ஜெயலலிதா ஆட்சியில் நரகத்தை கண்டு தமிழர்களுக்கு பயம் இல்லை ஏன்?

ஒரு இந்திய தமிழர்  இறந்த பிறகு நரகத்திற்குப் போனாராம். அங்கே ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு வேறு வேறு விதமாக தண்டனைகள் இருந்தன.


முதலில் கர்நாடக மாநிலத்திற்கான  நரகத்தில் எட்டிப் பார்த்த நம்ம ஆள் அங்கே எப்படி தண்டனை என்று விசாரித்தாராம். " இங்கே முதலில் ஒரு மணி நேரம் உங்களை மின்சார நாற்காலியில் உட்கார வைப்பார்கள். பின்னர் ஆணிகள் படுக்கையில் அடுத்த ஒரு மணி நேரம் படுக்க வைப்பார்கள். அதன் பின்னர் கர்நாடக மாநிலத்திற்கான   சாத்தான் வந்து உங்களை சாட்டையால் நன்றாக விளாசுவார் என்று பதில் வந்தது. நம்ம ஆள் இந்த  கர்நாடக மாநிலத்திற்கான   நரகம் வேண்டாம் என்று நகர்ந்து கேராளா  மாநிலத்திற்கான   நரகத்துப் பக்கம் போய் விசாரித்தார். அங்கும் இதே ரீதியில் பதில் வந்தது. பின்னர் ஆந்திரா  மாநிலத்திற்கான  நரகங்களிலும் இதே வகைதான்.

கடைசியில் நம்ம நண்பர் ஜெயலலிதா ஆளும் தமிழக  நரகத்தில் போய் நின்றார். அங்கே பெரிய வரிசை; மனிதர்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தனர். சரி. இங்கே எப்படி தண்டனையாம் என்று விசாரித்தவருக்கு பதில் மற்ற நரகங்களைப் போலவேதான் இங்கும் என்ற பதில் வந்ததாம்.

ஆனால் இவருக்கு ஒரே வியப்பு. பின்னே, எதற்காக இப்படி எல்லோரும் வரிசையாக போட்டி போட்டு கொண்டு இங்கே வருகிறார்கள் ? மற்ற மாநில நரகத்தைவிட இங்கு  வித்தியாசம் எதுவும் இல்லையே என்று கேட்டார்அதற்கு பதில் சொன்னார் ஒருத்தர் அதுவா? மின்சார நாற்காலி தண்டனை உண்டுதான். ஆனால் பவர் கட்டால் மின்சாரம் நின்று போய்விடுமே; முள் படுக்கையில் இருந்த எல்லா ஆணிகளையும் மணலை திருடும் யாரோ  புண்ணியவான் திருடிக் கொண்டு போய்விட்டான். கடைசியில் உள்ளே வந்து சாட்டையடி கொடுக்க வேண்டிய சாத்தான் ஜெயலலிதா காலில் விழுந்து கும்பிட்டு ஆபிஸ் போய் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலைகளை பார்த்து விட்டு டாஸ்மாக் பக்கம் சென்று விடுவான்." .

அதனால் ஜெயலலிதா ஆட்சியில் யாருக்கும் நகரத்தை கண்டு பயம் ஏதுமில்லை ஜெயலிதாவை கண்டு மட்டும்தான் பயம் என்று சொல்லி சிரித்தார்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக



8 comments:

  1. ஒரே பயானகமா இருக்கு ஓய்!

    ReplyDelete
  2. ம்ம் தைரியம் அதிகம் தான் உங்களுக்கு .

    ReplyDelete
  3. itha yerkanavey aarur moona senthil(iamsenthil.com) site la padicha maariye irkey...?#doubt

    ReplyDelete
  4. @விஜயகுமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ////itha yerkanavey aarur moona senthil(iamsenthil.com) site la padicha maariye irkey...?#doubt ///

    சார் நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு ஜோக்கை மாற்றி தமிழக சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பதிவை போட்டுள்ளேன். நான் காப்பி பேஏட் போடும் பதிவாளர் அல்ல. எனக்கு அது தேவையில்லை. நீங்கள் சொன்ன aarur moona senthil அவர்களின் பதிவு இதே மாதரி இருக்குமென்ற டவுட் உங்களுக்கு இருக்குமானால் அந்த லிங்குக்கான டைரக்ட் லிங்க் கொடுத்து இருந்தால் இங்கு வந்து படிப்பவர்கள் அங்கு சென்று படித்து நான் காப்பி அடித்து எழுதி இருக்கிறேனா என்று முடிவு செய்ய ஏதுவாக இருக்குமல்லவா?
    முடிந்தால் அத்ற்கான சரியான லிங்கை தரவும்

    நன்றி

    ReplyDelete
  5. @ விக்கி சார், சீனி சார் & சசிகலா மேடம் உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மற்றும் இங்கு வந்து படித்து கருத்து சொல்லாத அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. itha padikum pothu mr.senthil blog la padichathu mind la vanthathu athaan... atha thaan sonnen... neenga cpy paste pathivar nu sollala sollavum maten.... just niyabhaham vanthathu solliten mathapadi ungala disturb paniruntha i'm sorryyy....!

    ReplyDelete
  7. அய்யோ அய்யோ செம காமெடியான உண்மை இதேமாதிரி பதிவை தொடரவும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.