Monday, May 21, 2012

அமெரிக்கா பெற்றோரின் விளையாட்டு விபரீதம் ஆகியது.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் குழந்தையுடன் பொது சலவை இயந்திர நிலையத்தில், துணிகளை சலவைக்கு கொடுக்க சென்றனர். துணி சலவை முடியும் வரை, குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த தந்தைக்கு  திடீரென விபரீத புத்தி ஏற்பட்டது.அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை உட்கார வைத்து, வேடிக்கை காட்ட நினைத்தார். சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, குழந்தையை உட்கார வைத்ததும், தானியங்கி கதவு மூடிக்கொண்டு, இயந்திரம் சுழல ஆரம்பித்து விட்டது.விபரீதத்தை உணர்ந்த பெற்றோர்கள் கதற ஆரம்பித்து விட்டனர்..உடனடியாக, சலவை இயந்திர நிலையத்தினர், மின் இணைப்பை துண்டித்து, குழந்தையை சலவை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்தனர். நல்ல வேளையாக, குழந்தை உயிருக்கு ஏதும் ஏற்படவில்லை . லேசான காயங்கள் மட்டும், குழந்தைக்கு ஏற்பட்டிருந்தன.இந்த சம்பவம், செய்தியாக வந்தது அல்லாமல் "யூடியுப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி, இந்த விபரீத விளையாட்டு சம்பவம் நடந்துள்ளது.




இது குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு ஒரு படிப்பினை ஆகும். நான் வெளியிடங்களில் செல்லும் போது சுற்றுலா இடங்களில் சில பெற்றோர்கள் சில சமயங்களில் குழந்தைகளை காரின் மேல் உட்காரவைத்தும் அல்லது போட்டின் ஒரு ஒரமாக வைத்து போட்டோ எடுக்க முயற்சி செய்வதும் மலை உச்சியில் உள்ள விளிம்பில் உட்காரவைத்தும் படம் எடுக்க முயற்சி செய்வார்கள். அவர்களின் இந்த பழக்கம் சில சமயங்களில் வீபரிதத்தில் கொண்டு முடிந்துவிடும்  எனபதை சற்று நினைத்து பார்க்க வேண்டுகிறேன்

8 comments:

  1. படிக்கவே பயங்கரமாக உள்ளது நல்ல வேலையாக குழைந்தைக்கு எதுவும் ஆகவில்லை

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நான் ஏற்கனவே இது போல ஒரு நிகழ்வை படித்திருக்கிறேன். ஆனா, எங்கேன்னுதான் நினைவில்லை.

    ReplyDelete
  4. அடக்கடவுளே... எதெதில் தான் விளையாடுவது என்றில்லையா... நல்லவேளை, குழந்தை பிழைத்ததே என்பதில் நிம்மதி. பெற்றோருக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.

    ReplyDelete
  5. நான் பணிபுரியும் கம்ப்யூட்டர் சென்டரிலும் இப்படி தான் குழந்தைகளை கூட்டி கொண்டு வருபவர்களும் இப்படி தான் குழந்தையை கையில் பிடியுங்கள் என்றால் கேட்கவேமாட்டார்கள். பாவம் அந்த குழந்தைகள் பலதடவை படிகளில் உருண்டு விழும் அபாயம் நடந்துள்ளது. இவங்களுக்கு எல்லாம் எதுக்கு.............

    ReplyDelete
  6. @ கணேஷ்

    ///அடக்கடவுளே... எதெதில் தான் விளையாடுவது என்றில்லையா... நல்லவேளை, குழந்தை பிழைத்ததே என்பதில் நிம்மதி. பெற்றோருக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.//

    ஆமாம் இங்கே வசிக்கும் எல்லா பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இது ஒரு நல்ல பாடம்.

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ReplyDelete
  7. @ செல்வம்

    நான் பணிபுரியும் கம்ப்யூட்டர் சென்டரிலும் இப்படி தான் குழந்தைகளை கூட்டி கொண்டு வருபவர்களும் இப்படி தான் குழந்தையை கையில் பிடியுங்கள் என்றால் கேட்கவேமாட்டார்கள். பாவம் அந்த குழந்தைகள் பலதடவை படிகளில் உருண்டு விழும் அபாயம் நடந்துள்ளது. இவங்களுக்கு எல்லாம் எதுக்கு.............

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ReplyDelete
  8. @ சீனு .@ மனசாட்சி @ராஜி .
    //

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.