உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 4, 2012

சூப்பர் ஸ்டார் தரும் விருந்து யாருக்கு?எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தரும் விருந்து

என்ன இல்லை உங்களிடம்?

கரண்ட் இல்லை
LCD டிவி இல்லை
சுவையான உணவு இல்லை
காஸ்ட்லியான பட்டுபுடவை இல்லை
அழகான வீடு இல்லை
ஊரை சுற்ற நல்ல கார் இல்லை
நல்ல வேலை இல்லை
பணக்கார பெற்றோர்கள் இல்லை
என்று பல்லவி பாடுபவர்களே

இதோ எங்களை பாருங்கள்

எங்களுக்கு அம்மா அப்பா இல்லை
வசிக்க இடம் இல்லை
மானத்தை மறைக்க உடை இல்லை
ஊரை சுற்ற கால்கள் இல்லை
பசியை போக்க குப்பை தொட்டியில் கூட சில நேரங்களில் உணவு இல்லை
ஏன் குடிக்க தெரு குழாயில் கூட தண்ணிர் இல்லை

இதையெல்லாம் தினமும் உங்கள் கண்களால் கண்டும் கூட
மன திருப்தி இல்லாமல் அது இல்லை இது இல்லை என்று ஏங்குகிறாயே மனிதா

சூப்பர் ஸ்டார்களை பார்க்க வேன்டும்
அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும்
ஒரு வேளையாவது அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுக்கு

எங்களது சூப்பர் ஸ்டாரான உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
எங்களுடன் அமர்ந்து கூட நீங்கள் சாப்பிட வேண்டாம் அட்லிஸ்ட்
நீங்கள் குப்பை தொட்டில்களிலும் சாக்கடைகளிலும் தூக்கி எறியும் உணவுகளை
நீங்கள் தட்டில் வைத்து கூட தரவேண்டாம் ஒரு பழைய பேப்பரில் போட்டாவது தரலாமே
அப்படி நீங்கள் தந்தால் நாய்களுடன் குப்பை தொட்டிகருகில் போராடமல்
ஒரு மர நிழலில் இருந்து சாப்பிட்டு
நாங்களும் எங்களது சூப்பர் ஸ்டார் தந்த உணவு என்று
உங்களை வாழ்த்தி வணங்குவோமே.

அது உங்களால் முடியுமா????


என் மனதில் தோன்றியதை இங்கே கிறுக்கியுள்ளேன்

என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"

12 comments :

 1. kavalai !

  kanneer!

  vethanai!

  ReplyDelete
 2. vanakkam thiru madhurai thamizhan avargale manadhai urukkum padhivu nandri
  surendran

  ReplyDelete
 3. இது கிறுக்கல் இல்லை.... உண்மை சிந்திக்க வேண்டிய விடயம்

  ReplyDelete
 4. இப்படி ஒரு நல்ல கருத்தை எங்களுக்குள் விதைத்து விட்டு கிறுக்கினேன் என்றால் எப்படி... நானும் சூப்பர் ஸடாராக முயல்கிறேன் நண்பா...

  ReplyDelete
 5. நாசுக்காய் கேட்டிங்க உணருவார்களா தெரியவில்லை .

  ReplyDelete
 6. ஒரு மனிதன் உண்ண உணவின்றி பசியால் இறப்பதை காட்டிலும் கொடுமையான விஷயம் இந்த உலகில் வேறேதும் இல்லை ..!

  ReplyDelete
 7. சுயநலமே வாழ்க்கை என ஆளாய் பறக்கும் நமக்கு நல்ல சவுக்கடி

  ReplyDelete
 8. இது கிறுக்கல் இல்லை சார்.நம் சமகாலத்தின் அவலம்,இனஹ்ட் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.வ்வரவேற்கிறோம்,நல்ல படைப்பு வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 9. Nala pathivu kirukal ala ariyamaiyai pokiya pathivukal nanum muyarchi seikirane super star aga

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog