Saturday, May 5, 2012




எப்படி? இப்படி?

என் எண்ணத்தில் வெளிவந்த பல சிதறல்கள்


குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுபவள் அன்னை என்றால்
குழந்தையை குப்பை தொட்டியில் போடுபவளை என்னவென்று அழைப்பது?

அன்பாய் அணைத்து ஆதரவு தருபவனை அத்தான் என்று அழைக்கும் நாம்
அடித்து உதைத்து அரக்கனாய் வாழ்பவனை என்னவென்று கூறி அழைப்பது?


அழகாக இருக்கும் பெண்ணை காதலித்தவுடன்
அன்பாக இருந்த தாயை எப்படி மறக்க முடிகிறது.


சட்டத்தை மீறி தீங்கு இழைப்பவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது காவலர்களின் வேலை ஆனால்
சட்டத்தை மீறி தீங்கு இழைப்பவர்களை மக்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது என்பது காவலர்களின் வேலையாகி போய்விட்டதா?


நியாயத்திற்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளே
அநியாத்திற்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது.?


சட்டத்தை வரையருப்பவர்களே சட்டவரம்பை முதலில் மீறுபவர்களாக இருக்கும் போது எதற்கு புதிய சட்டம்.?


சராசரி மனிதர்களாகிய நாம் யாருக்காவது ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போகும் போது அதே நபர்களை சந்திக்கும் போது கூனி குறுகி போகிறோமே ஆனால் இந்த அரசியல் தலைவர்கள் மட்டும் வாக்குறதிகளை அள்ளி தந்துவிட்டு அதை செய்ய முயற்சி கூட செய்யாமல் மீண்டும் நம்மை எந்த வித வெட்க உணர்வோடு எப்படி அவர்களால் நம்மை பார்க்க  வர முடிகிறது.


நமக்கு பொது சேவை செய்ய வருபவர்களை தலைவராக தேர்ந்து எடுக்காமல்
தமக்கு பாதசேவை செய்ய  மக்கள் வர வேண்டும் என்று நினைப்பவர்களையே மக்கள் தேர்தெடுப்பது எதற்கு?


கடவுளே என்னை காப்பாற்று என்று வேண்டிய காலம் போய் நாம் இப்போது
கடவுளே இந்த மதவாதிகளிடம் இருந்து உன்னை காப்பாற்றி கொள் என்று வேண்டக் கூடிய  காலமாகிவிட்டது

இப்படியெல்லாம் நான் எழுதிய என் எண்ணத்தை படித்த உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை பின்னுட்டமாக முடிந்தால் எழுதவும்.


என்றென்றும் அன்புடன்,
உங்கள் அபிமானத்திர்குரிய "மதுரைத்தமிழன்"

10 comments:

  1. எப்படி இப்படின்னா?
    அது அப்படிதான்
    சகாதேவன்

    ReplyDelete
  2. அதானே..... எல்லாமே நெத்தியடி தான்,

    ரொம்பவே டச்சிங் ஆனது என்னவோ:
    //கடவுளே இந்த மதவாதிகளிடம் இருந்து உன்னை காப்பாற்றி கொள்//


    இப்படி எல்லாரும் யோசிக்க ஆரம்பித்தால் மாற்றம் வரலாம்

    ReplyDelete
  3. கேள்விகள்.....
    எல்லா கேள்விகளுக்கும்
    எல்லா காலத்திலும் பதில் கிடைக்காது...
    என்றாலும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை........

    ReplyDelete
  4. ரைட்டு போட்டு கும்முங்க ..!

    ReplyDelete
  5. குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுபவளை ‘தொன்னை’ அல்லது ‘வெண்ணை’ என்று்ம், அரக்கனாய் வாழ்பவனை ‘பொத்தான்’ என்றும் அழைச்சுட்டாப் போச்சு. வாக்குறுதியை நிறைவேற்றாமல் மககளைச் சந்திப்பவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு- மக்களின் மறதி என்பதுதானே! நிறைய சிந்தனைகளை எழுப்பி விட்டுடீங்க நண்பரே...!

    ReplyDelete
  6. உண்மைகள் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  7. nalla ketteenga!

    detailu!

    manasaatchi -
    ketkum kelvikal!

    ReplyDelete
  8. அடடா....

    என்னத்தை சொல்வது...??

    ReplyDelete
  9. உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடுகள் சிந்திக்க வைக்கின்றன

    ReplyDelete
  10. Inga ketka matum mudikirathu sindhikavum taan........ vidai taruvaar yaaro......?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.