Wednesday, April 11, 2012




ஜெயலலிதாவிற்கு கலைஞர் வைக்கும் "செக்" (கலைஞரின் மாஸ்டர் ப்ளானால் தமிழகமே அதிர்ந்தது))

ஜெயலலிதா : கடந்த ஆட்சியில் தவறு செய்த அனைத்து திமுகவினர் மீது சட்டப்படி வழக்கு தொடுத்து சிறையில்  அடைக்கபடுவார்கள்.


ஸ்டாலின்: நைனா..நைனா ஆபத்து நைனா ஆபத்து. நம் கட்சியினர் அனைவரையும் ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடுத்து சிறையில் அடைக்கப் போகிறார் நைனா  அப்படி செய்தால் நம் கட்சியினர் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். அடுத்த முறை நாம் ஆட்சிக்கு வருவது மிக கடினம் நைனா.

கலைஞர்: மகனே உன் நைனா உயிரோடு இருக்கும் வரை கவலைப்பாடாதே...நான் இதற்கு அருமையான திட்டம் வைத்து இருக்கிறேன்.அதை செய்தால் ஜெயலலிதா திட்டம் ஒன்றும் வெற்றி அடைய முடியாது.

ஸ்டாலின் : நைனா அப்படி என்னதான் நீங்கள் திட்டம் வைத்திருகிறிர்கள் கொஞ்சம் சொல்லுங்கள் நைனா...

கலைஞர் : உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், தி.மு..,வின் ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டமாக மாறும் என்று அறிவித்து சிறை செல்ல நம் கட்சியினருக்கு ஏற்பாடு செய்துவிடு. அதனால் நம் கட்சியினர் அனைவரும் சிறைச்சாலை சென்று விடுவார்கள். அதன் பிறகு அவர் என்ன வழக்கு தொடுத்தாலும் நமது பேச்சு திறமையால் நாம் மக்களுக்காக போராடியதால் சிறைக்கு சென்றோம் என்று சொல்லுவோம். நமது தமிழக மக்கள் சரியான மாங்காக்கள்தானே

ஸ்டாலின்: நைனா நீங்கள் சாணக்கியர்தான் நைனா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


என்ன மக்களே கலைஞரின் மாஸ்டர் ப்ளான் எப்படி இருக்கிறது.

டிஸ்கி :அவர் போட்ட   ப்ளான் காரணமாக தமிழகத்தில் நில நடுக்கமே ஏற்பட்டு இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
 


4 comments:

  1. அவர் போடும் திட்டங்களால் தமிழகத்தில் நிலநடுக்கம் என்ன... சுனாமியே வரும்! தமிழக மக்களை ஏமாளிகளென்றுதான் அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள். மக்களும் வேறு மாற்று இல்லாமல் இந்த இருவரையுமே சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் தரும் தலைவன் ஒருவன் நல்லவனாக இனி என்றேனும் கிடைப்பானா?

    ReplyDelete
  2. நில நடுக்கம் வர இதான் காரணமா?! நான் கூட எதோ இயற்கை சீற்றம்ன்னு நினைச்சு ஏமாந்து போய்ட்டேன். காரணம் கண்டுபிடித்து சொன்ன உண்மைதமிழன் வாழ்க.

    ReplyDelete
  3. தூயவள் கண்ணகியின் சாபத்தால் மதுரை எரிந்தது. தூயவர்களின் கோபத்தால் நில நடுக்கமே வந்துவிட்டதோ.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.