ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 30, 2012

ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?



ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

ஆமாம் ஆமாம் அவங்களை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும்.  வீட்டில் அவுங்க ஒரு கௌரவமான வேலைக்காரி , எல்லாருடைய தேவைகளையும் கவனித்து அனுசரித்து, குடும்ப பெயரை காப்பாற்ற பாடு படணும். அப்படின்னு அவசரம் அவசரமாக சொன்னவர்கள் நீங்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள்


 இதைப் படிக்கும் ஆண்களே  தங்கள் வீட்டு குடும்ப பொறுப்பை சுமக்கும் பெண்களுக்கு பிடித்தது எது , பிடிக்காதது எது என்று தெரிந்து வைத்து இருக்கீர்களா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். அது மனைவியாகவோ அல்லது கூட பிறந்த சகோதரியாகவோ இல்லை சித்தி ,பெரியம்மா,  மன்னி, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் சரி.


 அதே கேள்வியை அவர்களை போயி கேட்டு பாருங்கள் .கொஞ்சம் கூட யோசிக்காமல் பளிச்சென்று ஒரு லிஸ்டே போட்டு யார் யாருக்கு என்ன என்ன பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள். அது என்னவாக இருக்கட்டும் கலரா, சாப்பாடா, பாட்டா, சினிமா , ஊரா , ஹீரோ, ஹீரோயினோ எதுவாக இருந்தாலும் சரி, அதை சரியாக சொல்லிவிடுவாரகள் அது தான் தன்னை மிஞ்சிய பாசம் , எதையும் எதிர் பார்க்காமல் செய்வது அவர்கள் தான்.


அது யாரப்பா எனக்கு எல்லாம் தெரியும் என்று குதிக்கிறது அப்படி குதிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி? அதெல்லாம் தெரிந்து இருந்தும் அதை அவர்களுக்கு செய்து கொடுத்திருகீறிர்களா ? அதே போல் அவர்களுக்கு பிடித்தமானதை வாங்கி தந்திருக்கீர்களா

அப்படி செய்திருந்தால் நிச்சயம் நீங்கள் மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவர்தான், அப்படி இதுவரை செய்யவில்லை  என்றால், உடனே வாங்கியோ, அல்லது  வெளியே அழைத்து சென்றோ  அவர்களின்   சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். இப்படி செய்தால பெண்கள் உங்களை மனதாரக் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல, அந்தப் பெண்கள் எதிரில் நீங்கள் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர்கள் .


மிக அதிக அளவு வேலை செய்வது வீட்டில் இருக்கும் பெண்களே என்று ஒரு  சர்வே  சொல்கிறது.


எல்லோருக்கும் 'சண்டே'  என்றால் ரெஸ்ட் எடுக்கும் நாளாகவும் ஆனால் அவளுக்கு மட்டும் 'சண்டே' என்றால் ஓவர் டைம் செய்யும் நாளாகவும் ஆகிவிடுகிறது. எல்லோருக்கும் பிடித்ததை மெனு போட்டு செய்யணும் அல்லது நீங்கள் அழைக்கும் நண்பர் குடும்பத்திற்கு பார்த்து பார்த்து வித விதமாக சமைத்து போடணும்.

இதை சிறிது யோசித்துபார்த்தால் உங்கள் மனதுக்கே அது நல்லதா கெட்டதா கஷ்டமா இல்லையா என்று தெரிந்துவிடும்.

அதனால் முடிந்த வரை அவர்களுக்கும் சண்டே ஒய்வு நாளாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள் அல்லது அந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாளாக ஆக்குங்கள். ஆண்களே பெண்களை போற்றி துதி பாட வேண்டாம் அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை.........


பெண் என்பவள் சக்தியின் ரூபம் தான் . எவன் ஒருவன் வீட்டில் பெண்ணை மதித்து, மரியாதை கொடுத்து ஒரு உணர்ச்சியுள்ள மனுஷியாக நடத்துகிறானோ அவனுக்கு இந்த சமுதாயம் நிச்சயம் தலை வணங்கும்.


நான் கற்று அறிந்த பெண்ணின் மொழிகள் என்ற பொன்மொழிகள் "


எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்.

ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை-இங்கர்சால்

ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது-வால்டேர்.

தியாகம், அமைதி, சகிப்புத் தன்மை, பணிவு, நம்பிக்கை, அறிவு ஆகியவற்றின் உருவமாகவே பெண்குலம் இருந்து வருகிறது - காந்திஜி.

குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் - கார்ட

ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல - பெல்லா  அப்சக்


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"




Download As PDF

17 comments:

  1. சூப்பர் பதிவு
    தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளும்
    சொல்லியுள்ள ஆணுக்கான கடமைகளும் அவசியம்
    கடைபிடிக்கவேண்ட்யவையே
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுல மகளிரணியின் சார்பில் நன்றி.

    ReplyDelete
  3. துணைவியை தன்னில் பாதியாக மதித்து, புரிந்து நடக்கும் கணவர்களின் எண்ணிக்கை சொற்பமே. இது பெருக வேண்டும். அதற்கு இதுபோல் பல பதிவுகள் வர வேண்டும். சல்யூட் உங்கள் எண்ணங்களுக்கு!

    ReplyDelete
  4. மிக நல்லபதிவுக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. சேம் ப்ளட்....

    மனசாட்சி வேறு மாதிரி சொல்லுச்சி - இது உங்க ஸ்டைல் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  6. ம்ம் இத பார்த்து பல பேர் கடைபிடித்தால் சந்தோஷம் தான்

    ReplyDelete
  7. மிக நல்ல பதிவு!

    ReplyDelete
  8. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அடங்கிய பதிவு. அருமை நண்பரே!

    ReplyDelete
  9. அனைத்தும் யோசிக்கவேண்டிய விசயங்கள் ..!

    ReplyDelete
  10. சிந்திக்க வேண்டிய பதிவு. அருமை

    ReplyDelete
  11. நல்லதொரு பகிர்வு. எல்லா ஆண்களும் இதை படிச்சு புரிஞ்சு நடந்து கொண்டால், சண்டை, டவர்ச்ன்னு போக தேவை இல்லை சகோ

    ReplyDelete
  12. had you gone to police station at least once for crime (dowry) which you had not committed? do you know how women of today are misusing ?

    ReplyDelete
  13. neengal vaalha valamudan..
    miga alahaaha eludhi irukiringa..
    ungal karuthukal and the way u tell the karuthukal are very amazing..

    ungalai maathiri orruku oruthar irunthaal... elaa family yum sandhoshamaaha vaalum...

    Pengal sandhoshamaaha irundhaal ...
    andha family will be happy...
    family happy yaa irunthaaal....
    pakathil ulavanga elaarum happy..
    .then...andha city ae happy..
    .then..andha country will be happy...
    then andha world will be happy..

    all ur posts are very nice and interesting to read.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (106) அரசியல் (88) பெண்கள் (74) சிந்திக்க (66) இந்தியா (58) அமெரிக்கா (57) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (40) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) சமூக பிரச்சனை (22) கலைஞர் (21) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) புது தகவல்கள் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) விகடன் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சட்டம் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மகளிர் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உங்களுக்கு தெரியுமா (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) சமையல் குறிப்பு (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) விஞ்ஞானம் (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Award (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) ரெசிப்பி (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)