உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 20, 2012

கேள்விகள் வருவது உங்களிடம், பதில்கள் வருவது என்னிடம்


கேள்விகள் வருவது உங்களிடம் பதில்கள் வருவது என்னிடம்

அக்னி 5 ஏவுகணை வெற்றி பற்றி பாகிஸ்தானியர்கள் பேசிக் கொள்வது என்னவாக இருக்கும்?
இந்தியக்காரன் பணம் செலவழித்து தயாரிப்பது அக்னி. அது யாருக்கும் உபயோகப்படாமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நாம் செலவில்லாமல் உற்பத்தி பண்ணுவது கசாப் அது இந்தியாவை முடிந்த அளவு அழித்துவிட்டு இந்திய செலவில் மிக பாதுகாப்பாக இருக்கும். யாருடா புத்திசாலி

தமிழக மக்களின் திறமை என்ன?
எப்படி அவர்களை அடித்து துவைத்தாலும் மிகப் பொறுமையாக இருப்பதுதான்.


திமுக கட்சி இப்போது கோமா நிலைமையில் இருப்பதாக பிரபல பத்திரிக்கை கூறியுள்ளதே அதை சரி செய்ய உங்களிடம் ஏதும் ஐடியா உள்ளதா?

ஆமாம் நம்ம டாக்டர் ராமதாஸை திமுக உறுப்பினராக ஆக்கினால் அவர் கோமாளித்தனமாக பேசியே அதை கோமாவில் இருந்து வெளிக் கொண்டு வந்துவிடுவார்.

வாக்கிங்க் போவது உடம்புக்கு நல்லதா?
நீங்கள் அரசியல்வாதியாக இல்லாதவரை

அழகிரி ஸ்டாலின் சண்டையால் கூடிய சீக்கிரம் கட்சி இரண்டாக உடைந்து விடும் போல இருக்கிறதே அதை பார்த்தும் கலைஞர் ஏதும் தெரியாதது போல ஏன் மிக மெளனம் காத்து கொண்டிருக்கிறார்?

கலைஞர் சாணக்கியரய்யா  எல்லாம் அவருக்கு நன்றாக தெரியுமய்யா கட்சி இரண்டாக உடையவேண்டும் அதன் பிறகு அதை ஆளுக்கு ஒரு மகனிடம் கொடுத்து விடலாம் என்று மிகப் பெரிய திட்டம் வைத்துள்ளார்.

சார் நான் பொண்ணு பார்க்க போறேன் கொஞ்சம் நல்ல நேரம் பார்த்து சொல்ல முடியுமா?
பொண்ணு வீட்டுல கரண்ட் எப்போ வருதோ அந்த நேரம் தான் நல்ல நேரமப்பா.

ஆடைகள் குறையக் குறைய பெண்கள் செக்ஸியாக மாறிவிடுகிறார்கள். அப்ப ஆண்கள் எப்படி?
ஆண்கள் நம் முன்னோர்களாக மாறிவிடுவார்கள்( குரங்காக)

விவாகரத்துகளில் தமிழகம் முதலிடம்என்று வந்துள்ள செய்தி குறித்து?
அட அடா இதிலாவது தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளதே என்று வியப்பு அடைகிறேன்.

மண முறிவுகள் அதிகரிக்க என்ன காரணம் ?
பெண்களிடம் பண வரவு அதிகரிப்பதுதான் காரணம்


பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைச்சல் என்பது உண்மைதானா?
யாரப்பா தப்பாக சொல்வது பெண்களுக்குதான் "நகை"யின் மீதுள்ள "சுவை" அதிகம்

என் மனைவியைப்பார்த்தா எனக்குப் பயமா இருக்கு! கைகால் எல்லாம் நடுங்குது அதுக்கு என்ன பண்ணுறது தலைவா?
அதுக்கு நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம் அது எல்லாருக்கும் உள்ளதுதான்  அப்படித்தான இருக்கணும்! அது ரொம்ப நார்மல்தான் மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க…!( என் மனைவி பக்கத்தில் இருப்பதால் இப்படிதான் பதில் அளிக்க்

நான் சொல்வதை என் மனைவி தட்டாமல் கேட்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
அது ரொம்ப ஈஸிங்க உங்களோட  ஃபேஸ்புக்ல அவளோட ஒரிஜனல் படத்தை போட்டுவிடுவேன் என்று உதார் விட்டு பாருங்கள்

கணவனுக்கு உடல்நலக் குறைபாடு என்றால் மனைவி பதறி, பரிவுடன் கவனித்துக்கொள்வது ஏன்?
அப்புறம் யார் துணி துவைக்கிறது பாத்திரம் கழுவுறது, சமைக்கிறது. எல்லாம் காரணத்தோடுதான் மக்காஸ்


மனைவியின் உடல் நலனில் கணவன் அக்கறை கொள்வது இல்லையே, ஏன்?
அவங்க நல்லா இருந்தா இங்க கூட்டிப்போ அங்க கூட்டிப் போ என்று படுத்துவார்களே. அதில் இருந்து தப்பிப்பதற்கு தான்


என் கணவர் மிக சிடுமூஞ்சியாக உள்ளார் அவரை சிரிக்க வைக்க ஒரு வழி சொல்லுங்களேன்?

அவர் சிடுமூஞ்சி மூடில் இருக்கும்போது உங்களுடைய திருமண வீடியோ ஆல்பத்தை ஓடவிட்டு அதில், மாப்பிள்ளை அழைப்பு... காரில் இருந்து அவர் இறங்கி... மாலை அணிந்து மேடையில் அமர்கிற காட்சியை 'ரீ-வைண்ட்செய்து ஓடவிட்டு பாருங்கள்  அவர் விழுந்து விழுந்து சிரிப்பார்  ஆனால் அதை பார்க்கும் நீங்கள் சிடு மூஞ்சியாக மாறி விடுவீர்கள் காரணம் 'ரீ-வைண்ட்பண்ணும்போது  மூன்று முடிச்சை  ஓன்று ஒன்றாக அவிர்த்து ,மேடையில் இருந்து எழுந்து மாலையைக் கழற்றி, பெரியவர்களின் காலில் விழுந்து காரில் ஏறி மண்டபத்தில் இருந்து , 'ரிவர்ஸிலேயே அவர் தப்பித்து ஓடிவிடுவதாகத் தெரியும்.

என்னங்க இப்ப எங்க நீங்க இப்படி இருக்கீறீங்க


உங்களிடம் கேள்விகள் இருந்தால் எனக்கு மெயில் அனுப்பவும். என் மரமண்டையில் தோன்றியதை உங்களுக்கு பதிலாக தருகிறேன்,

18 comments :

 1. கணவனுக்கு உடல்நலக் குறைபாடு என்றால் மனைவி பதறி, பரிவுடன் கவனித்துக்கொள்வது ஏன்?
  அப்புறம் யார் துணி துவைக்கிறது பாத்திரம் கழுவுறது, சமைக்கிறது. எல்லாம் காரணத்தோடுதான் மக்காஸ்
  >>>
  உங்க வீட்டுலயும் அதே நிலைதானா?! வீட்டுக்கு வீடு வாசப்படிதன் போங்க

  ReplyDelete
 2. அவர் சிடுமூஞ்சி மூடில் இருக்கும்போது உங்களுடைய திருமண வீடியோ ஆல்பத்தை ஓடவிட்டு அதில், மாப்பிள்ளை அழைப்பு... காரில் இருந்து அவர் இறங்கி... மாலை அணிந்து மேடையில் அமர்கிற காட்சியை 'ரீ-வைண்ட்’ செய்து ஓடவிட்டு பாருங்கள் அவர் விழுந்து விழுந்து சிரிப்பார் ஆனால் அதை பார்க்கும் நீங்கள் சிடு மூஞ்சியாக மாறி விடுவீர்கள் காரணம் 'ரீ-வைண்ட்’ பண்ணும்போது மூன்று முடிச்சை ஓன்று ஒன்றாக அவிர்த்து ,மேடையில் இருந்து எழுந்து மாலையைக் கழற்றி, பெரியவர்களின் காலில் விழுந்து காரில் ஏறி மண்டபத்தில் இருந்து , 'ரிவர்’ஸிலேயே அவர் தப்பித்து ஓடிவிடுவதாகத் தெரியும்.
  >>>
  எப்படியெல்லாம் யோசிக்குறீங்க. நிஜமாவே உங்க மச்சானுக்கு எங்க திருமண விடியோவை ரிவைண்ட் பண்ணி போட்டு காட்டினேன் அண்ணா. உங்களை அவர் ரொம்ப பாராட்டி இது நிஜமாவே நடக்க எதாவது சாத்தியம் உண்டான்னு கேட்டாரு.

  ReplyDelete
 3. காமடியாக இருந்தாலும் கருத்து இருக்கு....

  என் கேள்வி யோசிச்சி அப்பாலிக்கா சொல்றேன்

  ReplyDelete
 4. கேள்வியும் பதிலும் நன்றாக இருந்தது குறிப்பா சிடுமூஞ்சி கணவர் நல்ல ஐடியா உங்க வீட்ல நடந்ததோ ?

  ReplyDelete
 5. \\ஆனால் நாம் செலவில்லாமல் உற்பத்தி பண்ணுவது கசாப் அது இந்தியாவை முடிந்த அளவு அழித்துவிட்டு இந்திய செலவில் மிக பாதுகாப்பாக இருக்கும். யாருடா புத்திசாலி.\\ நீ கசாப்புகளை அனுப்பினாலும், நான் நல்ல பிள்ளையாக உனக்கு கரண்ட் கொடுப்பேன்னு மக்கு மண்ணு மோகன் சிங்கு இருக்காரே அது அத விடக் கொடுமை.

  ReplyDelete
 6. \\எப்படி அவர்களை அடித்து துவைத்தாலும் மிகப் பொறுமையாக இருப்பதுதான்.\\ அதான் ஓட்டுப் போடுவதற்கு காசு வாங்கிட்டோமில்ல, இப்போ என்ன கும்மாங் குத்து குத்தினாலும் பொறுமையாத்தான் இருக்கணும்.

  ReplyDelete
 7. \\திமுக கட்சி இப்போது கோமா நிலைமையில் இருப்பதாக பிரபல பத்திரிக்கை கூறியுள்ளதே அதை சரி செய்ய உங்களிடம் ஏதும் ஐடியா உள்ளதா?\\ இது தவறான தகவல். ஜெ. கருணா இரண்டு கட்சிகளும் சென்ற தேர்தலில் பெற்ற வாகு சதவிகிதத்தைப் பாருங்கள், கூட்டணியில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் போதும், அப்புறம் இருக்கவே இருக்குது, ஜெவின் மகா மட்டமான ஆட்சி, மீண்டும் தில்லு முல்லு கட்சியே வந்துவிடும்.

  ReplyDelete
 8. \\வாக்கிங்க் போவது உடம்புக்கு நல்லதா?
  நீங்கள் அரசியல்வாதியாக இல்லாதவரை.\\ இவனுங்க ஆரோக்கியம் மிகவும் ஆச்சரியமானது. கைது செய்தாலே நெஞ்சு வலி வந்துடுது, குறைந்த பட்சம் சர்க்கரை, இரத்த அழுத்தம் என்று ஒரு டஜன் வியாதிகளாவது இருக்கிறது, இவனுங்களுக்கு ஜெயிலில் ஒரு நடமாடும் மருத்துவமனையே வேண்டும்.

  ReplyDelete
 9. \\
  அழகிரி ஸ்டாலின் சண்டையால் கூடிய சீக்கிரம் கட்சி இரண்டாக உடைந்து விடும் போல இருக்கிறதே அதை பார்த்தும் கலைஞர் ஏதும் தெரியாதது போல ஏன் மிக மெளனம் காத்து கொண்டிருக்கிறார்?\\ இவனுங்க குத்துக் கல்லு மாதிரி இருப்பானுங்க, இவனுங்க சண்டையில எவனாச்சும் அப்பாவி தான் எறிந்தோ, எரிக்கப் பட்டோ சாவான்.

  ReplyDelete
 10. \\பொண்ணு வீட்டுல கரண்ட் எப்போ வருதோ அந்த நேரம் தான் நல்ல நேரமப்பா.\\ அப்போ போகவே முடியாதே, பேசாம பகலில் வெளிச்சம் இருக்கும்போதே போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவதுதான் நலம்.

  ReplyDelete
 11. \\ஆடைகள் குறையக் குறைய பெண்கள் செக்ஸியாக மாறிவிடுகிறார்கள். அப்ப ஆண்கள் எப்படி?
  ஆண்கள் நம் முன்னோர்களாக மாறிவிடுவார்கள்( குரங்காக)\\ உமக்கு பெண் அழகாய் தெரிவது போல ஒரு பெண்ணுக்கு ஆண் அழகாகத் தெரிவான். சொல்லப் போனால் யானை, சிங்கம், மயில், சேவல் ......... etc, எல்லா இனங்களிலும் ஆண் தான் அழகு. எவனாவது வேலையில்லாத கவிஞன் முட்டாள் பெண்களின் 'அழகு' பற்றி கவிதை எழுதி வைத்து விட்டுப் போவான், நாமும் பாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்....

  ReplyDelete
 12. \\மூன்று முடிச்சை ஓன்று ஒன்றாக அவிர்த்து ,மேடையில் இருந்து எழுந்து மாலையைக் கழற்றி, பெரியவர்களின் காலில் விழுந்து காரில் ஏறி மண்டபத்தில் இருந்து , 'ரிவர்’ஸிலேயே அவர் தப்பித்து ஓடிவிடுவதாகத் தெரியும்.\\ அஹா, இது மட்டும் நடந்தா எப்படி இருக்கும்...!!

  ReplyDelete
 13. I like your pics, but am sorry can't read tamil though I follow a lot of tamil movies and am a great fan of Surya and Shivakartikeyan:) All the best with your blog:)

  ReplyDelete
 14. பதில்கள் செம்ம காமெடி தல ..!

  ReplyDelete
 15. கேள்வியும் பதிலும் அருமை
  குறிப்பாக கடைசி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. சிடுமூஞ்சி கணவர் நீங்கள் தானா?

  ReplyDelete
 17. கேள்வியும் பதிலும் ரசித்து நகைக்க வைத்தது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog