Sunday, April 29, 2012



பொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மா

பொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மா இப்படி ஒரு அம்மாவா என்று கலாச்சாரக் காவலர்களே நீங்கள் அவசரப்பட்டு, கலவரப்பட்டுக் அருவாளை தூக்க வேண்டியதில்லை. கொஞ்சம் அமைதிகாத்து கையில் உள்ளதை கிழே போட்டு. முதலில் நடந்ததை கேளுங்கள்.


சனிக்கிழமை (நேற்று)  மாலை 6 மணிக்கு அப்பறம் வேலை முடிந்ததும் நான், எனது லேடி மானேஜர்(அமெரிக்கன் வயது 52) ,கூட வேலை பார்க்கும் ஸ்பானிஷ் லேடி, மற்றொரு பஞ்சாபி லேடி மற்றும் ஒரு டில்லிகாரன் அனைவரும் அருகில் உள்ள மெக்ஸிகன் ரெஸ்டாரண்டிற்கு  சென்றோம். இந்தியன் ஆன நமக்கோ ஸ்னாக்ஸ் டைம் ஆனால் அமெரிக்கர்களுக்கோ அது டின்னர் டைம்.. அதனால் முதலில் நாங்கள் ஆளுக்கொரு Borderita Rock  டிரிங்க்ஸ் ஆர்டர் செய்து அருந்த ஆரம்பித்தவாறே  அவர்களுக்கு தேவையான உணவையும் ஆர்டர் செய்து பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது என் லேடி மேனேஜர் சொல்லியதுதான் இந்த பதிவிற்கான விஷயம். அவள் சொன்னது இதுதான்  என் ரெண்டாவது பொண்ணு (15வயசு) அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே  ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் முதல் பொண்ணுக்குப் 20 வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட்கூட இல்லை, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக்  கூட்டிட்டு வந்ததில்ல. அவளை நெனைச்சாதான் மிக கவலையாக இருக்கு ...எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? முடிந்தால் டாக்டரிடம் கவுன்சிலிங்க் கூட்டி போகனும் என்று  பாசமிக்க ஒரு அமெரிக்கா அம்மாவின்  அங்கலாய்ப்பாக இருந்தது.

இதை படிக்கும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் கேட்டு பழகி போய்விட்டது

இங்கெல்லாம் 15, 16  வயது வந்ததும் பெற்றவர்கள் உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே  தண்ணி தெளித்து விடுகிறார்கள், முடிந்த வரையில்  ஒயிட்டுகள் தங்கள் இனமான ஒயிட்டுகுள்ளேயே டேட்டிங்க் பண்ண அனுமதிக்கிறார்கள். பல சமயங்களில் அதுவும் முடியாமல் போய்விடுகிறது. சில வீடுகளில் அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி வைத்து அனுப்புவார்கள்.

இங்கு பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பாய் பிரண்டை தேர்ந்தெடுப்பது போல தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே திர்மானித்து அவர்களாகவே சம்பாத்தித்து படிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனா நம்ம ஊர்ல மட்டுமல்ல இங்க கூட  பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற
வரைக்கும் பெற்றவர்கள் தங்களோட ரெடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் வைச்சிருக்காங்க

நமக்கு அமெரிக்கன் கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்கு அவங்களுக்கு  நம்ம கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்குங்க


பேச்சு அதோடு முடிந்துவிடவில்லை  எங்களது மேனேஜரின் ந்யூ டேட்டிங்க் பற்றியும் வந்தது. அந்த மேனேஜர் 2 முறை கல்யாணம் செய்து விவாகரத்து பண்ணியவர். இப்போது முன்றாவது கணவருக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்க்கு கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறது. முன்பு பார்த்தவை இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டாம் கணவருக்கு பிறந்தவை. அவருக்கு இந்தியர்கள் எப்படி ஒருத்தரை கல்யாணம் பண்ணி அவரோடையே செட்டில் ஆகிவிடுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது ( ஆனால்  சாகற வரைக்கும் நம்ம மனசு  செட்டில் ஆகாதுங்கறது என்பது  வேற விஷயம். அந்த உண்மை அவர்களுக்கு தெரிவதில்லை)
 .

டிஸ்கி : எனது மேனேஜர் உயரம் 6 அடிக்கும் மேலே மிகவும் திடகாத்திரமானவர். 52 வயதுதான் நோய் நொடி இல்லாதவர். ரஜினி படத்தில்தான் சூப்பர் ஸ்டார் சுத்தி சுத்தி அடிப்பார் ஆனால் இவர் அப்படியல்ல..இவரை நாங்கள் லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றுதான் அழைப்போம். இதெல்லாம் எதுக்கு சொல்லுறேனா அவர் Still looking for 'RIGHTMAN'  அப்படிபட்ட ஒரு 'perfect' ஆண் மகன் யாரும் கிடையாது என்பதை அவர் இந்த வயதிலும் அறியவில்லை. நீங்க பெர்க்ஃக்ட் ஆணாக இருந்தால் அப்பிளை செய்யலாம். ஹீஹீ


6 comments:

  1. // Still looking for 'RIGHTMAN' //

    சத்தியமா வேண்டாம் சார். நமக்கு இந்தியாலையே பார்த்துக்கலாம். நல்லதோ கேட்டதோ எல்லாம் இங்கயே. என்ன பண்றது நாம தான் இந்தியர்கள் ஆச்சே. நல்ல பதிவு.

    நேரம் இருந்தால் இதைப் படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி ஜேம்ஸ்பான்ட்ன்னு சொல்லீடீக யோசிக்க வேண்டிய விடயம்

    ReplyDelete
  3. நமக்கு அமெரிக்கன் கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்கு அவங்களுக்கு நம்ம கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்குங்க// இக்கரைக்கு அக்கற பச்சை சிந்திக்க வாய்த்த பதிவு .

    ReplyDelete
  4. அவங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்டாப்பல, மெல்ல மெல்ல நம்மையறியாமல்?! ‘அவர்கள்’ கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்கோமோன்னு பயமா இருக்கு சகோ

    ReplyDelete
  5. இதெல்லாம் அங்க சகஜமப்பா

    ReplyDelete
  6. ///இங்கெல்லாம் 15, 16 வயது வந்ததும் பெற்றவர்கள் உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள்,///

    "தண்ணி தெளித்து விடுகிறார்கள்" என்பது தவறான வாக்கியம். அவர்கள் வாழ்கை முறை அது! ஒரு வேளை பெற்றோர்கள் பார்த்த பயனை திருமணம் செய்து கொண்டு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 17 வயது பயனுடன் ஓடுவது தான் நம்ம கலாசாராமோ!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.