உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 1, 2012

ஜெயலலிதா அரசின் அடுத்த டார்கெட்?

ஜெயலலிதா  அரசின் அடுத்த டார்கெட்?


தமிழக மாணவர்களின் தரத்தை உயர்த்தவும் தமிழக பள்ளியின் தரத்தை உயர்த்தவும் அல்லது ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு ஏதாவது திட்டம் தீட்டி தரத்தை உயர்த்த டார்கெட் வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில் வரும்

அல்லது

தமிழக மின்சார துறையை மேம்படுத்தி  தடையில்லா மின்சாரம் வழங்கி தொழில் துறையில் நாட்டை முன்னேற்ற டார்கெட் வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில் வரும்

அல்லது

அரசாங்க துறைகளை மேம்படுத்தி  மக்களுக்கு நல்ல சேவை செய்ய  டார்கெட் வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில் வரும்

அல்லது

சாலைகளை மேம்படுத்தி  மக்களுக்கு நல்ல சாலை வசதிகளை பண்ணித்தர  டார்கெட் வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில் வரும்

அல்லது
நீர் நிலைகளை பெருக்கி விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் ஏதாவது வசதிகளை பண்ணித்தர  டார்கெட் வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில் வரும்

இப்படி எதைக் கேட்டாலும் இல்லை இல்லை என்று பதில் சொன்னா அப்புறம் அரசாங்கத்திற்கு வேறு ஏதும் டார்கெட் இல்லையா அப்புறம் அரசாங்கம் என்ற ஒன்று ஏதற்க்கு கேள்வி வரும்.

அதனால்தான் ஜெயலலிதா தலைமையில் உள்ள அரசாங்கம் சில புதிய டார்கெட்டை அறிவித்துள்ளது. அந்த டார்கெட் என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் அறிவித்த டார்கெட்டை உங்களுக்கு நான் இங்கே தருகிறேன்.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்க  டார்கெட்(இலக்கு) நிர்ணயிக்கப் பட்டு அதை கண்டிப்பாக அடையவேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் அந்த கடைகளை நடத்துபவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

அதை பற்றி வந்த செய்தியின் சில பகுதிகள் ( தினமலரில் வெளிவந்தது - நன்றி தினமலர்.)  உங்களின் பார்வைக்காக :

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் அசோக்குமார் கூறியதாவது: வழக்கமாக விற்பனையாகும் அளவை அதிகமாக விற்பனை செய்ய இலக்கு வழங்கியுள்ளனர். புதிதாக குடிக்க வாருங்கள் என, எல்லோரையும் அழைத்து வர முடியாது. ஆனால், விற்பனை இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விற்பனை இலக்கை அடையாவிட்டால், "சஸ்பெண்டு' செய்வர். வேறு வழியின்றி, மது விற்பனை அதிகரிக்க, மற்ற பொருட்களைப் போல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்க முயற்சித்தோம். அதன்படி, 1,000 ரூபாய்க்கு மேல் மது வகைகளை வாங்குபவர்களுக்கு இலவசமாக வீட்டுக்கு சென்று டெலிவரி செய்யவுள்ளோம். மொபைலில் தொடர்புகொண்டு ஆர்டர் கொடுத்தால், மூன்று கி.மீ., தூரம் வரை, தற்போதைக்கு டெலிவரி தர திட்டமிட்டுள்ளோம். இவ்விஷயம் குறித்து மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாட்டர் கேன் சப்ளையைப் செய்வது போல மதுபான சப்ளை மாறி வருவது தமிழ்நாட்டின் சோகம்தான்!


 இது தமிழக அரசால் அறிவிக்கபட்ட டார்கெட் அறிவிக்கப்படாத டார்கெட் ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா?
திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்களையும் கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் அனைவரின் மேல் சொத்து அபகரிப்பு வழக்குகளை பதிந்து நாடாளுமன்ற தேர்தல் வரும் முன்பு உள்ளே தள்ளிவிட வேண்டும் என்பதுதான்

இந்த இரண்டு டார்கெட்டையும் நிறைவேற்றினால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறிவிடும் என்பது இப்போதைய தமிழக அரசின் நோக்கமாகும்.வாழ்த்துக்கள் மக்களே வாழ்த்துக்கள் எஞ்சாய் பண்ணுங்க மக்காஸ் ஒரு சரக்கை இலவச டோர் டெலிவரிக்கு ஆர்டர் செய்துவிட்டு

அன்புடன்
மதுரைத்தமிழன்7 comments :

 1. குடிக்கப் பழகியாகணுமா தமிழ்நாட்ல ஒவ்வொருத்தனும் இனி..? ஹய்யோ... இந்த டார்கெட்டைப் பத்திப் படிக்கும் போதே எரிச்சலும் கோபமும் வருகிறதே... என்ன செய்ய..?

  ReplyDelete
 2. சார்....
  நாம இப்படியே எண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
  அவங்க டார்கெட் அதுக்கும் மேல....

  ReplyDelete
 3. தமிழ்நாடு வெளங்கிடுமோ?!

  ReplyDelete
 4. டார்கெட் என்பதை விட டார்ச்சர்தான் அதிகம்.

  ReplyDelete
 5. எங்கேயாவது போய் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்.வேறு என்ன சொல்ல..?இதுலவேற சின்னம்மா வேற வந்துட்டாங்களா,இனி இவங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விடும்.பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog