Monday, April 16, 2012




முத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உணவு & பன்னீர் தயாரிக்கும் முறையும்.

வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால்   கழிவறையில் கஷ்டப் வேண்டாம். இதனுடன்  சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். இரவிலே தண்ணிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் சிக்கலுக்கு மிகவும் உதவுகிறது  இதனை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைவதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

இந்த தகவலை நண்பர் ஒருவர் இமெயிலில் அனுப்பி இருந்தார். இது எந்தளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் இதை உண்பதால் உடல் நலத்திற்கு எந்த கெடுதல் ஏதும் வருவதில்லை என்பது உண்மை.

பத்து வருடம் நான் சென்னையில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்த போது எப்போதும் ஹோட்டல் சாப்படுதான் அதனால் மாதத்திற்கு ஒரு  மூறை அம்மாவை பார்க்க மதுரை செல்லும் சாக்கில் பழைய சாதம் சாப்பிட செல்வேன். பழைய சோத்துக்கு அடிமையான எனக்கு என் அம்மா வைத்த பட்ட பெயர் "பழைய சோத்துமாடன்" என்பதுதான்.

இதற்கு நான் தொட்டு கொள்ள உபயோகிப்பது இந்த சைடிஸ் இதற்கு என்ன பெயர் என்ன என்று தெரியாது. அதனை தாயாரிக்க உதவும் முறை

புளியை சிறிதளவு தண்ணிர் ஊற வைக்கவும் அதன் பின் சிறு வெங்காயத்தை உரித்து அதனை இரண்டாக நறுக்கி கொள்ளவும். இதனை அந்த புளியில் போட்டு அதனுடன் மிளகாய் தூள் பவுடரையும் வேண்டிய அளவு உப்பையும் சேர்த்து பிசைந்து அப்படியே சாப்பிடவும். இது பழைய சாதத்திற்கோ அல்லது தயிர் சாதத்திற்கோ ஏற்றது.
---------------------------------

ஐடியா :

மக்காஸ் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. அந்த காலத்தில் பன்னிரின் உபயோகம் மிக அதிகம் அதனால் உங்களுக்கு மிக எளிய முறையில் பன்னிர் தயாரிப்பது என்பதை சொல்லிதருகிறேன். அப்ப நீங்க ரெடியா?

முதலில் டீக்கடைக்கு சென்று உங்களுக்கு தேவையான அளவிற்கு 'பன்னை" வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
அதன் பின் நல்ல தண்ணிரை ஒரு பெரிய கப்பில் எடுத்து கொள்ளுங்கள் அதன் பின் பன் மீது  நீரை தெளித்தால் உங்களுக்கு மிக சிறந்த பன்னீர் கிடைக்கும்.

இந்த முறையில் தாயாரிப்பது மிக எளிது அதனால் இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்
-----------------------------------------------



உங்களுக்கு தெரியுமா?
ஒரு பசுமாடு அதன் வாழ்க்கையில்lifetime.)   200,000 glasses பால் தருகிறது என்று.
தும்மலின் வேகம் மணிக்கு 100 m.p.h.
அமெரிக்காவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை 52.6 million

சந்தேகம் : தமிழ்நாட்டில் உள்ள ஊரான மாமண்டுரில் வசிப்பவர்கள் மா மண்டுகளா?



மதுரையில் உள்ள ஓட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிடச் சென்றார் நமது சக பதிவாளர் ராஜி. சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "மேடம், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

பதிவாளர் ராஜி  சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"



படித்ததில் பிடித்தது :

Worry is like a rocking chair; it keeps you busy,
but gets you nowhere.

People will forget what you said, people will forget what you did,
But people will never forget how you made them feel"



6 comments:

  1. அடப்பாவி மனுஷா... பன்னீர்-ங்கறதுக்கு இப்படிக்கூட விளக்கம் தர முடியுமா என்ன... அசத்திட்டீரே... விட்டா ‘முத்துக் குளிக்கிறது’ன்னா முத்துங்கறவன் குளிக்கிறதுன்னு சொல்வீர் போலருக்கே...

    ராஜி கொடுத்த ‘டிப்ஸ்’ இருக்கே... ஹா... ஹா... பிரமாதம் போங்கோ!

    ReplyDelete
  2. @கணேஷ் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ‘///முத்துக் குளிக்கிறது’ன்னா முத்துங்கறவன் குளிக்கிறதுன்னு சொல்வீர் போலருக்கே.//
    அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்தற்கு நன்றி

    //ராஜி கொடுத்த ‘டிப்ஸ்’ இருக்கே... ஹா... ஹா... பிரமாதம் போங்கோ! //

    ராஜி ரொம்ப தூரத்தில் இருப்பதால் அவரை பற்றி எழுதிவிட்டேன் ஆனால் இப்ப பயமாக இருக்கிறது சாப்பாத்தி கட்டையை எடுத்து விமானத்தில் ஏறி விடுவார்களோ என்று நீங்கள் தான் அதை தடுத்து நிறுத்த வேண்டும்

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா நீங்க கொடுத்த ஒவ்வொரு டிப்சும் அருமை

    ReplyDelete
  4. ஹலோ உங்களை அடிக்க ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி, நாட்கணக்கில் விமானத்தில் பயணித்து வரனுமா?! மதனிக்கிட்ட போடு குடுத்துட்டா போச்சு. சப்பாத்தி கட்டை, ஜல்லிக்கரணி, பருப்பு கடையும் மத்துலலாம் நீங்க விரும்புன ”அது” கிடைச்சுட போகுது.

    ReplyDelete
  5. ஓசில பிளாக்குக்கு விளம்பரம் குடுத்துக்காக பொசச்சி போங்கன்னு விடறேன்.

    ReplyDelete
  6. ஐடியா சூப்பர் எப்படி யோசிக்கிறிங்க பா .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.