உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 24, 2012

ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)

தன் மனைவி  சந்தோஷமாக வீட்டில் இருப்பது தாம் மட்டும் தினசரி வேலைக்கு சென்று கடினமாக உழைத்து வருவதில் வெறுப்பு அடைந்த ஒருவன் தான் தினமும் கஷ்டப்படுவதை மனைவி உணர வேண்டும் என்று கடவுளை நோக்கி  கிழ்கண்டவாறு பிரார்த்தித்தான்.

அன்பான என்னைக் காக்கும் கடவுளே எனது மனைவி  சந்தோஷமாக வீட்டில் இருப்பதும் நான் மட்டும் வேலைக்கு சென்று எட்டு மணிக்கு மேலாக கடினமாக உழைத்து வருகிறேன். நான் அனுபவிக்கும் இந்த கஷ்டங்களை என் மனைவியும் உணர வேண்டும். அதனால் ஒரு நாள் மட்டும் என்னை அவளாகவும் அவளை என்னையாகவும் மாற்றி விடு என்று அந்த மனிதன் கடவுளிடம் இடைவிடாமல் கேட்டான்.

அதற்கு கடவுளோ பக்தா இந்த மாதிரி விளையாட்டு தனமான வேண்டுகோளை கேட்காதே வேறு ஏதாவது கேளு என்றார்.ஆனால் அவன் விடாப்பிடியாக கேட்டதால் அவன் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்

அடுத்த நாள்  அந்த மனிதன் அதிகாலையில் விழித்த போது ஒரு பெண்னாக( மனைவியாக) மாறி இருந்தான். அதிகாலை 5 மணிக்கு எழுந்த அவன் காலை உணவுகளை முதலில் தாயாரித்து விட்டு உடனே மதியம் குழந்தைகளுக்கு தேவையான லஞ்சை தயாரித்து கொண்டே  குழந்தைகளை எழுப்பிவிட்டாள்

அதன் பின் அவர்களுக்கு தேவையான உடைகளை எடுத்து அயன் பண்ணி போட்டுவிட்டு, அவர்கள் பின்னாலேயே போய் அவர்களுக்கு மார்னிங்க் பிரேக் ஃபாஸ்ட் ஊட்டிவிட்டு, அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து வைத்துவிட்டு அதன் பின் கணவரான மனைவிக்கு தேவையானவைகளை செய்து கொடுத்துவிட்டு, அரக்க பரக்க தலையை வாரி குழந்தைளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று விட்டு விட்டு  வீட்டுக்கு வந்தால் கணவர் ஆன மனைவி இன்னும் ஆபிஸுக்கு செல்லாமல்  முக்கிய பைலை தேடிக் கொண்டிருந்தார். அதை அவருக்கு தேடி எடுத்து கொடுத்து விட்டு அவர்(அவள்) காரின் சாவியையும் தேடி கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பிவிட்டு ஆறிப் போன காலை உணவை கடமையே என்று சாப்பிட்டு விட்டு கொஞ்சம் மனதை அமைதிபடுத்த தனக்கு பிடித்தாமான பாடலை போட்ட இரண்டாவது நிமிடத்தில் "அம்மாவின்" ஆசிர்வாதத்தால் "பவர் கட்" ஆகி பாடலையும் கேட்க முடியாமல் ஆகிவிட்டது.

இப்படியே வீட்ல இருந்தா காரியம் ஒன்றும் நடக்காது அதனால பேங்கல செக்கை டெப்பாசிட் பண்ணிவிட்டு அப்படியே ட்டிரைய் க்ளினிங்ல டிரெஸ்ஸை கொடுத்துவிட்டு வரும் வழியில வீட்டுக்கு தேவையான பலசரக்குகளை வாங்கி வந்து. அதை அதற்குரிய இடங்களில் வைத்திவிட்டு அன்றைய வரவு செலவு கணக்கை அதற்குரிய நோட்டில் எழுதி வைத்துவிட்டு தலைநிமிர்ந்து மணியை பார்த்தால் மணி 1 P.M ஆகிவிட்டது.

மிச்சம் மீதி இருக்கும் ஆறிப்போன உணவை வாயில் அள்ளிப்போட்ட போது தாம் அநாதை போல தனியாக சாப்பிடுவதை எண்ணி  கண்ணில் வந்த தண்ணிரை முந்தானையால் துடைத்துவிட்டு பெட் ரூமிற்கு போய் அலங்கோலமாக இருந்த பெட்டை சரி செய்துவிட்டு, துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங்க் மெஷினில் போட்டு, எச்சில் பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கி விட்டு, டிவி மற்றும் ஜன்னிலில் இருந்த தூசியை தட்டி, எல்லா ரூமையும்  பெருக்கி துடைத்து விட்டு  கடைசியாக ஒரு நல்ல குளியல் போட்டு மணியை பார்த்தால் 4 P.M  ஆகி இருந்தது. உடனே அடித்து பிடித்து ஸ்கூலுக்கு போயி குழந்தைகளை கூட்டி வர்ம் போது அவர்கள் போடும் சண்டையை விலக்கி விட்டு அவர்களுக்கு தேவையான ஸ்நாக்ஸ் கொடுத்து அவர்களை ஈவினிங்க் எக்ஸ்ட்ரா அக்டிவிட்டி க்ளாஸுக்கு கூட்டி போய் வீட்டிற்கு வந்தால் மணி ஏழாகிவிட்டது. குழந்தைகளை ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண சொல்லிவிட்டு கிடைத்த நேரத்தில் இரவு உணவை அவசர அவசரமாக தாயாரித்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ,துவைத்த துணிகளை மடித்து வைத்துவிட்டு, குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அப்பாடி என்று  டிவி பார்க்க உட்கார்ந்தால் வாசலில் காலிங்க் பெல் சத்தம் கதவை திறந்தால் கணவர் நண்பருடன் வீட்டிற்கு வந்த்திருந்தார். அதனால் அவர் நண்பருக்கு பிடித்த சைடிஸ்ஸை பண்ணி அவர்களுக்கு பறிமாறிவிட்டு கிச்சனை ஒழித்துவிட்டு மணியை பார்த்தால் இரவு மணி 12 ஆகிவிட்டது.

உடம்பு எல்லாம் அடித்து போட்டாற் போல வலி. தூங்க போன அவளை கணவன் எழுப்பினான் உறவிற்காக அவன் மனம் கோண கூடாது என்பதற்காக அதற்காக ஒத்துழைத்து அதன் பின் அப்படியே படுத்து உறங்கினான்(ள்).

அடுத்தநாள் காலையில் முதலில் எழுந்ததும் கடவுளிடம் மண்டி போட்டு கடவுளே  நான் என் மனைவியை பற்றி தவறாக நினைத்துவிட்டேன் அவள் வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மா இருப்பதாகவும் நான் மட்டும் கஷ்டப்படுவதாகவும் அது மிக தவறு என்று உணர்ந்துவிட்டேன் அதற்காக என்னை மன்னித்து கொள். தயவு செய்து எங்களை பழையபடி மீண்டும் மாற்றி விடு என்று பிரார்த்தித்தான்

அதற்கு கடவுள் பக்தா... நீ இப்போது நல்ல பாடத்தை கற்றுக் கொண்டாய் என்பதை அறிந்து கொண்டேன் எனக்கும் உன்னை பழையபடி மாற்றிவிட மகிழ்ச்சிதான் ஆனால் நேற்று இரவு நீ குழந்தை (pregnant) உண்டாகி இருக்கிறாய் அதனால்   நீ ஒன்பதுமாதம் பொறுத்து இருக்க வேண்டுமென்று சொல்லி மறைந்துவிட்டார்

நான் படித்த  ஜோக்கை எனது வழியில் மாற்றி நீங்கள் ரசிக்க தந்துள்ளேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. good one written with current matters too, though already hv read this story..:)

  ReplyDelete
 2. நல்லாவே இருக்கு உங்க கற்பனை

  ReplyDelete
 3. ஏற்கனவே படித்த கதைதான்...அது உங்கள் நடையில் மிகச் சிறப்பாகவே இருந்தது.

  ReplyDelete
 4. முந்தியே இந்தக் கதையை வாசித்திருக்கேன். ஆனா நீங்க சுவாரஸ்யமாக கடைசியில் ஒரு ஜோக் ட்விஸ்டும் வச்சு சொல்லியிருக்கீங்க. நன்றி.

  ReplyDelete
 5. பெண்களின் நிலையை சரியாய் புரிந்து சொன்ன விதம் அருமை .
  புரிந்து கொள்ளாத மனிதர்களை என்ன செய்வது ?

  ReplyDelete
 6. @எண்ணங்கள் (சாந்தி)
  @லக்ஷ்மி அம்மா

  @தோழன் மபா, தமிழன் வீதி
  @சீனி
  @ஹாலிவுட்ரசிகன்
  @சசிகலா
  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்

  ReplyDelete
 7. ஒரு பெண் மீது ஏற்றப்பட்டிருக்கும் பொறுப்புக்களை உணரவைக்கும் அருமையான கதை! தொடரட்டும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இது நான் கேள்விப்பட்டிராத புதிய விஷயம். சுவாரஸ்யமாக இருந்தது. ஹோம் மேக்கராக இருப்பது எத்தனை கடினம் என்பதை அழகாகச் சொல்லி அசத்திட்டீங்க!

  ReplyDelete
 9. அன்புடையீர் அம்மா/அய்யா
  எல்லா வேலைகளும் முடித்து விட்டு பின்னால் நடக்கும் வேலைகளை விட்டு விட்டீர்கள்? சமயம் கிடைக்கும் போ
  து அண்டை வீட்டு புரணி / குழாய் அடி சண்டை மற்றும் சன்/ெஜயா விஜய்/ டிவி தென்றல், நாதஸ்வர கதைகள் நாடக விமர்சன்ங்கள் இதனை கூற மறந்து விட்டீர்கள்

  ReplyDelete
 10. purinthu konden thaimargalin nilamai pattri....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog