Friday, March 2, 2012


அமெரிக்க தமிழன், தமிழக தமிழனிடம் பேசக் கூடாதது என்ன?

தமிழகம் போகும் அமெரிக்க மக்காஸ் அல்லது தமிழகத்திற்கு போன் போட்டு பேசும் அமெரிக்க தமிழ்மக்கா உங்களுக்கு ஒரு செய்தி.என்ன பேச வேண்டும் பேச வேண்டாம் என்பது பற்றிதான் இந்த பதிவு

1. நீங்கள் தமிழக உறவினர்கள் நண்பர்களிடம் பேசும் போது அமெரிக்காவுல பவர் கட்டே கிடையாது அப்படியே பவர் போனா 1 நிமிஷம் அல்லது 2 நிமிஷம்தான் போகும் என்று சொல்லாதீர்கள்.

2. அமெரிக்காவுல நாங்க எலக்ட்ரிக் குக்கர்லதான் சமைப்போம் எலக்ட்ரிக் அடுப்பு இருக்கு ஆனா அதை அவ்வளவா யூஸ் பண்ண மாட்டோம் என்று சொல்லாதீர்கள்.

3, மைக்ரோவேவ் இல்லை என்றால் எங்களுக்கு கையும் கால் எல்லாம் ஒடாது  என்று சொல்லாதீர்கள்

4. கேஸ் அடுப்புக்கு சிலிண்டர் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை அது ஆட்டோமெட்டிக்கா அதற்கென உள்ள பைப்பில் வந்து கொண்டே இருக்கும். சிலிண்டர் வாங்குவது எல்லாம் பிக்னிக் போகும் போது போர்டபிள் ஸ்டவ் யூஸ் பண்ணுவதற்க்காகதான். அதை எங்கவேணா எவ்வளவு வேணா வாங்கலாம்  என்று சொல்லாதீர்கள்.

5. பிட்ஸா, பர்கர் ,சப்வே உணவகங்கள் மிக் சீப்பான லோ காஸ்ட் உணவகங்கள் என்ற உண்மையை சொல்லீ அவர்கள் வயிற்று எரிச்சலை தூண்டாதீர்கள்

6.வீட்டு வாசலிலோ தெரு ஒரத்திலோ குப்பை கூழங்கள் இல்லை என்று சொல்லாதீர்கள்.

7. ரோடுகளில் மட்டும் ஏசி கிடையாது என்பதை பெரும் குறையாக சொல்லாதீர்கள்

அப்படி சொன்னீர்கள் என்றால் அம்மாவின் அமோக ஆட்சியில்  வாழ்ந்து கொலைவெறியோட இருக்கும் மக்கள் அருவாளை தூக்கி அமெரிக்கா வந்து ஒரு போடு போட்டு சென்றால் ஆச்சிரியம் இல்லை.

அதற்கு பதிலாக இதை சொல்லி அவர்களை சந்தோஷமடைய செய்யுங்கள்

1.நாங்கள் பணம் சம்பாதித்தாலும் அநாதை போல வாழ்வதை சொல்லுங்கள்.

2.வசதி இருந்தாலும் வாரம் முழுவதும் பழைய சாப்பாட்டை சாப்பிடுவதை சொல்லுங்கள்( பெரும்பாலான் வீடுகளில் வாரம் ஒரு முறை சமைத்து ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள் இந்த இளம் தலைமுறை ஆட்கள்)

3.நண்பர்கள் வீட்டிற்கு போவதென்றாலும் போனில் அனுமதி வாங்கி கொண்டுதான் போக முடியும் என்பதை சொல்லுங்கள்

4.வேலை இழந்தால் வெகு சீக்கிரம் நடுத்தெருவில் வந்து நிற்பதை சொல்லுங்கள்

5.நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்திற்கும் ஒழுங்காக வரி கட்டிவிட வேண்டும் என்பதை சொல்லுங்கள். இதற்கு குப்பனும் சுக்கனும் விதிவிலக்கு அல்ல.

6.போலிஸ்காரரிடம் மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியாது என்று சொல்லுங்கள்.

7.இரவு  7 மணிக்கு மேல் காய்சல் மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் எந்த டாக்டர் வீட்டு கதவை தட்ட முடியாது என்றும் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் தவியாய் தவித்து காத்துகிடப்பதை சொல்லுங்கள்.

8.பண்டிகைகாலங்களில் அவர்கள் அனுபவிப்பதை போல அனுபவிக்க முடியாமல் வார இறுதியில் மட்டும் கோயிலுக்கு சென்றோ அல்லது பெரிய பார்ட்டி ஹால்களில் இந்திய காஸ்ட்டியூம் மாட்டி அழகு பொம்மைகளாக வருவதை சொல்லுங்கள்.

9.நம் குழந்தைகள் வெளியிடங்களில் செய்யும் தவறுகளை பார்த்தவர்கள் அதை நம்மிடம் வந்து அப்டேட் செய்யமாட்டார்கள் என்பதை சொல்லுங்கள்.

10.கஷ்டம் என்று வந்துவிட்ட பிறகு சிறிய உதவிகள் செய்யகூட ஆள் இருக்கமாட்டார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள்.

இப்போது தெரியும் தமிழகத்தின் அருமை..சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?







19 comments:

  1. இக்கரைக்கு அக்கரை பச்சை!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை சகோ. அமெரிக்காவில் இருக்கும் நான் இதை நூறு சதம் ஒத்துக்கொள்கிறேன் !!!

    ReplyDelete
  3. arumayana pathivu neengal kooruvathu mutrilum unmai avasarathukku doctoridam poga mudiyathu endre en nanbargal koorrugirargal

    ReplyDelete
  4. அடப்போய்யா... இப்பல்லாம் தமிழ்நாட்ல கூட நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குப் போனா ஒரு போன் பண்ணிட்டு வரக்கூடாதான்னு கேட்டு எரிச்சல்பட வெக்கறாங்க. என்னத்தச் சொல்ல... இதைத்தவிர மத்த விஷயங்கள் எல்லாத்தையும் வித்தியாசமா பாத்திருக்கற உங்க கோணத்தை ரசிச்சேன்.

    ReplyDelete
  5. நான் தென்ஆபிரிக்காவில் எட்டு மாதங்கள் இருந்தேன் இந்த மதுரை போல வருமா? என்று நினைக்காத நாளே இல்ல இப்போ அம்மா மனைவி குழந்தைகளுடன் சந்தோசம இருக்கேன் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  6. முதல் பத்தியைப் படிக்கையில்
    வயிற்றெரிச்சல் வந்தது நிஜம்
    இரண்டாவது பத்தியப் படித்தவுடன் அது
    அடங்கிப் போனதும் நிஜம்
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. appadiyaa!

    karand illaaiyinaalum
    sorkkamaa?

    ReplyDelete
  8. சந்தோசத்தையிம், துக்கத்தையும் ஒரே பதிவில் குடுத்துட்டா எப்படி?

    ReplyDelete
  9. ஒரு அவசரம்ன்னு எச்சிலை எங்கே வேணும்னாலும் துப்ப முடியுமா அமெரிக்காவுல? அம்மனுக்கு கூழ் ஊத்துறேன், தளாபதிக்கு பொறந்தநாளுன்னு தெரு முழுக்க சீரியல் பல்ப் போட்டு, பரிட்சை நேரத்துல கூட நைட் முழுக்க ரேடியோ செட் அலற வைக்க முடியுமா அமெரிக்காவுல?

    ReplyDelete
  10. பைக்குல போகும்போது செல்போன் ரிங் அடிச்சா உடனே எடுத்து என்னடான்னு உங்க ஃப்ரெண்ட்கிட்ட பேச முடியுமா?

    ReplyDelete
  11. Add one more thing also, in amerIca the hOlidays are few, around 9 days not like on Indian around 30 days: w

    ReplyDelete
  12. ஒரு பதிவை படிச்சு, 2 கமெண்ட் போடுறதுக்குள்ள 4 தரம் கரண்ட் கட்டாகுமா அமெரிக்காவுல

    ReplyDelete
  13. பேசக் கூடாத லிஸ்ட் ஓகே. ஆனால் பேசும் படி சொல்லும் லிஸ்ட் தான் உதைக்கிறது.

    //
    3.நண்பர்கள் வீட்டிற்கு போவதென்றாலும் போனில் அனுமதி வாங்கி கொண்டுதான் போக முடியும் என்பதை சொல்லுங்கள்
    //
    இது ஒரு பிரச்சினையா? அடுத்தவர் நேரத்தை மதிக்க வேண்டும் என்பது இவ்வளவு பெரிய கஷ்டமா? நேரம் காலம் பார்க்காமல் இரவு 10 மணிக்கு ஃபோன் செய்து டாஸ்மாக் கூப்பிடுவதுதான் உயரிய நட்பா?

    //
    4.வேலை இழந்தால் வெகு சீக்கிரம் நடுத்தெருவில் வந்து நிற்பதை சொல்லுங்கள்
    //
    இந்தியாவில் மட்டும் இது விதிவிலக்கா? எல்லா ஊரிலும் இது தானே கதி? உண்மையில் வேலை வாய்ப்பு இழந்து தவிப்போர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு இங்கே தான் உள்ளது. இந்தியாவில் வேலை போய் ஒரு மாத வீட்டு தவணை கட்ட தவறினால் வீட்டுக்கு குண்டர்கள் வருவார்கள். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

    //
    5.நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்திற்கும் ஒழுங்காக வரி கட்டிவிட வேண்டும் என்பதை சொல்லுங்கள். இதற்கு குப்பனும் சுக்கனும் விதிவிலக்கு அல்ல.

    6.போலிஸ்காரரிடம் மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியாது என்று சொல்லுங்கள்.
    //
    ஏன் சார்? இது இரண்டும் தமிழகத்தில் இல்லை என்று தமிழக தமிழன் மகிழ்ச்சி அடைவான் என்றால் தமிழகத்தை உமாச்சி தான் காப்பாற்ற வேண்டும்.

    //
    7.இரவு 7 மணிக்கு மேல் காய்சல் மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் எந்த டாக்டர் வீட்டு கதவை தட்ட முடியாது என்றும் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் தவியாய் தவித்து காத்துகிடப்பதை சொல்லுங்கள்.
    //
    ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ஸிஸ்டம் உள்ளது. இங்கே உங்களுக்கு மருத்துவ சிகிச்சை வார இறுதிகளில் யாரும் தர மாட்டோம் என்று கூறவில்லையே? வார இறுதிகளில் உங்களுக்கு ஏதோ பிரச்சனை என்றால் எமெர்ஜென்ஸி இருக்கிறது.

    இதில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவசரமாக இருப்பது மருத்துவர்களுக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மருத்துவர்கள் மருத்துவ அவசரங்களின் அடிப்படையில் தான் உங்களை வரிசையாக உள்ளே கூப்பிடுவார்கள். நீங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தால் உண்மையான மருத்துவ அவசரம் இல்லை என்று பொருள்.

    //
    10.கஷ்டம் என்று வந்துவிட்ட பிறகு சிறிய உதவிகள் செய்யகூட ஆள் இருக்கமாட்டார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள்.
    //
    இதெல்லாம் உண்மையே கிடையாது. அமெரிக்கர்களும் மனிதர்கள் தான். நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோமா என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அவர்களை குற்றம் சாட்டலாம்.

    ReplyDelete
  14. நகைச்சுவையாகச் சொ;;அப்பட்டாலும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் உண்மையை உணர்த்தியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  15. innaa periya america? vilaiyillaa arisi,aadu,maadu,fan,mixie,grinder,cycle,thaalikku thangam,pirasavaththirku munnum,pinnum kaasu, ilavasa vetti selai,ivlo keethe.current illanna current bill commiyakum. nallathuthaane!

    ReplyDelete
  16. இங்கு வந்து படித்து கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நேரம்மின்ன்மையால் தனித்தனியாக பதில் அளிக்க்கமுடியவில்லை மன்னிக்கவும்

    ReplyDelete
  17. என்னங்க உங்க இந்த பதிவை அப்படியே உருவி மார்ச் 18 இதழில் வெளியிட்டுள்ளார்கள். கிரடிட் எதுவும் காணோம்.

    ReplyDelete
  18. குமுதம் ரிப்போர்ட்டர்.

    ReplyDelete
  19. இந்த பதிவை குமுதம் ரிப்போட்டர் ரில் வெளியிட்டு உள்ளார்கள் ஆனால் உங்கள் பெயர் இடம்பெறவில்லை போட்டோ அனுப்புகிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.