உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 20, 2012

அரசியல் வாதிகளிடம் மக்கள் கேட்க கூடாத கேள்விகள்
அரசியல் வாதிகளிடம் மக்கள் கேட்க கூடாத கேள்விகள்

நீங்கள் அணியும் வெள்ளை கலர் வேஷ்டி சட்டைகள் பளிரென இருக்கிறதே அதை சலவை செய்ய என்ன சோப்பு உபயோகிக்கிறீர்கள் அல்லது ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக வாங்கி உடுத்துவீர்களா?

பெற்ற அம்மா காலில் கூட விழாத நீங்கள் ஜெயலலிதாவின் காலில் விழும் போது உங்கள் மனதில் நினைப்பது என்ன?

உங்கள் கட்சி தலைவர்களை நேசிப்பது அவர்களின் "கொள்கை"களுக்காகவா அல்லது அவர்கள் அடிக்கும் "கொள்ளை"களுக்காகவா?

நீங்கள் முதல் முதலாக லஞ்சம் வாங்கிய போது என்ன நினைத்தீர்கள் & வாங்கிய தொகை எவ்வளவு, அதை எப்படி யாருக்காக செலவழித்தீர்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு பொய் சொல்ல கூடாது திருட கூடாது  ஏமாற்ற கூடாது என்றெல்லாம் சொல்லி கொடுப்பீர்களா இல்லையா?

அது எப்படி சார் ரஜினிகாந்த் படத்துல முதல் சீன்ல தெருவில் இருப்பார் அப்புறம் ஒரு மாடு வைத்து பால் கறந்து பங்களா கட்டி தொழில் அதிபர் ஆகி தொழில் அதிபர்களுக்கு கெல்லாம் தலைவர் ஆகி வருகிற மாதிரி நீங்கள் தேர்லுக்கு முன்னால் சிறிய வீடுகளில் இருந்த நீங்கள் பெரிய பங்களா வாங்கி கார்கள் பல வாங்கி பள்ளிகூடம் போகாத நீங்கள் எஞ்சினியரிங்க் கல்லூரிகள் ஆரம்பித்து வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் சேமிப்பது எப்படி சார் அது அவ்வளவு எளிதா ?

பொது கூட்டங்களில் வீரவேசமாக பேசும் நீங்கள் சட்டசபைக்கு போனதும் எப்படி உங்களால் ஊமைகள் போல ஆக நடிக்க முடிகிறது.

பதவிக்கு வந்த பின் நீங்கள் வெளியிடங்களில் (ஹோட்டல்களில்) சாப்பிடும் போது உங்களால் எப்படி ஓசியாக சாப்பிட்டுவிட்டு போக முடிகிறது.

தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டம் இயற்றும் தலைவர்களான நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர் சட்டத்தை மீறி தவறு செய்துவிட்டு அதற்க்காக போலிஸில் மாட்டிக் கொள்ளும் போது போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து அவன் நம்ம ஆளு விட்டுங்க என்று எப்படி உங்களால் மனசாட்சி இல்லாமல் பேச முடிகிறது.

பதவிக்கு வந்த பின் நீங்கள் அடிப்பது லோக்கல் சரக்கா அல்லது ஃபாரின் சரக்கா?

வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை எடுத்து உங்கள் நேரத்தை உங்கள் மனைவி மக்களுக்காக செலவிடுவீர்களா இல்லையா?


 அன்புடன்
மதுரைத்தமிழன்


10 comments :

 1. ரொம்பவே யோசிச்சி இருகிங்களே.

  ReplyDelete
 2. எல்லாமே நெத்தியடி கேள்விகள்

  சிந்திக்க வேண்டியவர்கள் ஓட்டு போட்டவர்கள்./ போடுபவர்கள்.

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா ஹா நல்லாத்தான் யோசிக்கிறீங்க ஹே ஹே....!

  ReplyDelete
 4. இந்தக் கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அரசியல்வாதிகளால் பதில் சொல்லிவிட முடியாது. நல்ல கேள்விகள்.

  ReplyDelete
 5. ஒரு அரசியல்வாதியும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்

  ReplyDelete
 6. நல்ல கேள்விகள் தான் பதில் கிடைக்குமா ?

  ReplyDelete
 7. பார்த்துங்க... யாராவது ஆட்டோ அனுப்பிட போறாங்க...


  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 8. ithellaam arasiyalla sakajampaa!

  ReplyDelete
 9. நல்லா யோசிக்கிறீங்க
  கேட்கப் படவேண்டிய கேள்விகளை
  கேட்கக கூடாத கேள்விகளாக
  அழகாக கேட்டுவைத்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. முக்கியமான கேள்விகளாகத்தான் கேட்டு இருக்கீங்க..!


  பதில் சொல்லும் அரசியல் வாதிகளுக்கு பதவி பறிபோகும் என்பதாலே பதிலும் வராது, பதவியும் போகாது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog